Nothing ஓனருக்கு சொந்த அட்ரஸ் கூட இல்லையா? யார் இந்த Carl Pei? ஒரே டி-ஷர்ட் உடன் உலகம் சுற்றும் CEO!

|

இன்றைய தினத்தில் Carl Pei என்ற இந்த நபரைப் பற்றித் தெரியாத ஆட்களே இருக்க முடியாது. அப்படி, ஒரு வேலை உங்களுக்கு இவரைப் பற்றித் தெரியாது என்றால், நத்திங் போன் 1 பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும் தானே? ஆம், Nothing Phone 1 மற்றும் Nothing நிறுவனத்திற்குச் சொந்தக்காரர் இவர் தான். ஸ்மார்ட்போனை வெளியிடுவதற்கு முன்பாகவே உலக மக்களின் கவனத்தை ஈர்த்த நத்திங் நிறுவனத்தின் CEO இவர் தான். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால், OnePlus நிறுவனத்தின் முன்னாள் துணை நிறுவுனர் இவர் தான். இப்படிப் பல முகத்திற்குச் சொந்தக்காரர் தான் இந்த Carl Pei.

வியப்பில் ஆழ்த்தும் கார்ல் பெய் பற்றிய உண்மைகள்

வியப்பில் ஆழ்த்தும் கார்ல் பெய் பற்றிய உண்மைகள்

Nothing என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து, Nothing Phone 1 என்ற ஒரு வித்தியாசமான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வதன் மூலம் ஒட்டுமொத்த உலகத்தின் கவனத்தையும் தன்பக்கம் திரும்ப வைத்தவர் தான் இந்த கார்ல் பெய். என்ன தான் CEO பொறுப்பிலிருந்து ஒரு நிறுவனத்தை கட்டுப்படுத்தி வெற்றி நோக்கி நகர்ந்து வரும் ஒரு பிரபலமாக இவர் தோன்றினாலும், இவரைப் பற்றிய உண்மைகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இவரைப் பற்றிய 10 சுவாரசியமான உண்மைகளைப் பற்றித் தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

Carl Pei நோக்கியாவில் இருந்து எப்படி நத்திங் என்ற சொந்த நிறுவனத்தை உருவாக்கினார்?

Carl Pei நோக்கியாவில் இருந்து எப்படி நத்திங் என்ற சொந்த நிறுவனத்தை உருவாக்கினார்?

Carl Pei செப்டம்பர் 11,1989 ஆம் ஆண்டில் பிறந்தார், இவருடைய வயது 32. இவருடைய டெக் துறை பயணம் 2010 ஆம் ஆண்டில் நோக்கியா நிறுவனத்திலிருந்து துவங்கியது. Nokia-விற்கு பிறகு, Meizu பற்றி கார்ல் பெய் உருவாக்கிய ரசிகர் வலைத்தளம் அந்த நிறுவனத்தின் ஹாங்காங் கிளையின் கவனத்தை ஈர்த்தது. பின்னர், Pei 2011 ஆம் ஆண்டில் Meizu இன் மார்க்கெட்டிங் குழுவில் பணியாற்றத் தொடங்கினார். அதே ஆண்டில், நவம்பரில் அவர் Oppo நிறுவனத்தின் இன்டர்நேஷனல் மார்க்கெட் மேனேஜராக பணியாற்றினார்.

OnePlus நிறுவனத்தை நிறுவியது எப்படி?

OnePlus நிறுவனத்தை நிறுவியது எப்படி?

இங்கு இவர் நேரடியாக Pete Lau கீழ் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு, டிசம்பர் 2013 இல் குவாங்டாங்கின் ஷென்செனில் பீட் லாவுடன் இணைந்து OnePlus நிறுவனத்தை இவர் நிறுவினார். ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் சாதனமான OnePlus one 2014 இல் வெளியிடப்பட்டது. சுமார் 50,000 யூனிட் விற்பனை இலக்கு இருந்தபோதிலும், இது ஒரு மில்லியன் யூனிட்டுகளை விற்பனை செய்து மக்களின் கவனத்தை ஈர்த்தது. அதற்குப் பின் படிப்படியாக வளர்ந்து, OnePlus நிறுவனம் உலகின் முன்னணி பிராண்டாக மாறியதற்கு இவரின் பங்கு ஒரு முக்கிய காரணமாகும்.

தப்பு பண்ணிட்டீங்களே நத்திங்! Nothing Phone 1-ல் சார்ஜர் இல்லையா? லாஸ்ட்ல இப்படியா முடியனும்?தப்பு பண்ணிட்டீங்களே நத்திங்! Nothing Phone 1-ல் சார்ஜர் இல்லையா? லாஸ்ட்ல இப்படியா முடியனும்?

Nothing நிறுவனத்தின் துவக்கம் எப்படி உருவானது?

Nothing நிறுவனத்தின் துவக்கம் எப்படி உருவானது?

கடந்த 2020 ஆம் ஆண்டில் ஒன்பிளஸ் நிறுவனத்திலிருந்து விலகிய கார்ல் பெய், ஜனவரி 27, 2021 இல் Nothing நிறுவனத்தைத் துவக்கினார். ஜூலை 27, 2021 இல் நிறுவனத்தின் முதல் சாதனமாக ear (1) என்ற TWS இயர்போன் மாடலை உலகிற்கு அறிமுகம் செய்து, தனக்கான சொந்த நிறுவனம் இது தான் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, இன்று இரவு நத்திங் நிறுவனத்திற்குச் சொந்தமான முதல் ஸ்மார்ட்போன் மாடலையும் இவர் வெளியிடவிருக்கிறார்.

கல்லூரி படிப்பை கூட முழுசா முடிக்காத Carl Pei

கல்லூரி படிப்பை கூட முழுசா முடிக்காத Carl Pei

இப்படிப் பல விஷயங்களைச் செய்து, 'Co-founder OnePlus and founder of Nothing' என்று பல பொறுப்புகளில் தலைமை வகித்த Carl Pei படிப்பில் அவ்வளவு கெட்டிக்காரர் இல்லையாம். உண்மையைச் சொல்லப் போனால், இவர் கல்லூரி படிப்பையே முழுவதுமாக முடிக்காமல், பாதியிலேயே டிராப் அவுட் ஆன மாணவராம். இது பலருக்கும் நம்பத்தகுந்ததாக இருக்காது, ஆனால் இது தான் உண்மை. கார்ல் பெய் தனது வாழ்நாள் முழுவதும் ஒரு சராசரி மாணவராகவே இருந்திருக்கிறார். இவருக்கு அறிவியல் மற்றும் பிலாசபி போன்ற பாடங்களில் ஆர்வமாம் அதிகமாம்.

பள்ளி வகுப்பை கட் அடிக்க தூண்டிய கணினி மீதான காதல்

பள்ளி வகுப்பை கட் அடிக்க தூண்டிய கணினி மீதான காதல்

ஆனால், இவருக்குக் குறுகிய கவனம் இருந்ததால், சிறப்பாகச் செயல்பட முடிந்ததில்லையாம். இவர் வாழ்நாளில் உயர் கிரேட் தரங்களைப் பெறுவதில் அடிக்கடி சிக்கலைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது. பள்ளி மற்றும் கல்லூரி படிப்பில் அவ்வளவு சிறப்பாகச் செயல்பட முடியவில்லை என்றாலும், இவருக்குத் தொழில்நுட்பத்தின் மேல் அயராது காதல் இருந்திருக்கிறது. பள்ளியில் இவர் குறைந்தளவு நேரத்தை மட்டுமே செலவழித்ததாகவும், எஞ்சிய நேரத்தில் அவருடைய கணினியில் நேரத்தை அதிகம் செலவிட்டதாகவும் அவரே ஒப்புக்கொள்கிறார்.

Snapdragon 8+ Gen 1 சிறந்ததா? அல்ல Snapdragon 8 Gen 1 சிறப்பானதா? எந்த சிப்செட் போன் வாங்கினா பெஸ்ட்?Snapdragon 8+ Gen 1 சிறந்ததா? அல்ல Snapdragon 8 Gen 1 சிறப்பானதா? எந்த சிப்செட் போன் வாங்கினா பெஸ்ட்?

கணினி மீதான ஆர்வம் இவரை டெக்கி ஆக்கியதா?

கணினி மீதான ஆர்வம் இவரை டெக்கி ஆக்கியதா?

பள்ளி நேரத்தைத் தவறவிட்ட அனைத்தும் அவருக்கு நிச்சயமாகப் பலனளித்துள்ளது என்பதை நம்மால் இப்போது பார்க்க முடிகிறது. அவருடைய கணினி பழக்கம் அவரை ஒரு முழுநேர டெக்கியாக மாற்றியுள்ளது. அந்த ஆர்வத்தைப் பின்தொடர்ந்த அவர் இப்போது Nothing என்ற தனித்துவமான ஸ்மார்ட்போன் நிறுவனத்திற்குச் சொந்தக்காரராகிவிட்டார். CEO என்றால் ஒரு கெத்து இருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால், இவருடைய வாழ்க்கை நம்மை விட மிகவும் எளிமையாக இருக்கிறது.

ஒரே டி-ஷர்ட்டை பயன்படுத்தும் கார்ல் பெய்

ஒரே டி-ஷர்ட்டை பயன்படுத்தும் கார்ல் பெய்

ஆம், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, கார்ல் பெய் ஒவ்வொரு நாளும் ஒரே டி-ஷர்ட்டை தான் அணிந்ததாக கூறுகிறார். இதைப் படித்த உடனேயே, இந்த மனுஷன் இடம் இல்லாத காசு-ஆ, பிறகு ஏன் ஒரே T-shirt ஐ பயன்படுத்தினார் என்று நீங்கள் மோசமாக யோசிக்கலாம். உங்கள் யோசனைக்குக் கொஞ்சம் பிரேக் போடுங்கள். இவர் ஒவ்வொரு நாளும் அணிந்திருந்த டி-ஷர்ட்கள் ஒரே மாதிரியானவை, இவரிடம் உள்ள ஒன்பது டி-ஷர்ட்களும் ஒரே மாதிரியானது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்ற செயலை நேர சேமிப்பிற்காக பல மேதாவிகள் பின்பற்றுகிறார்கள்.

ஸ்டீவ் ஜாப்ஸின் தீவிரமான அபிமானி

ஸ்டீவ் ஜாப்ஸின் தீவிரமான அபிமானி

இவர் ஒரு ஸ்டீவ் ஜாப்ஸின் அபிமானி, இவருடைய பயணம் ஆண்ட்ராய்டு தளத்தில் இயங்கினாலும், ஸ்டீவ் ஜாப்ஸ் மீது இவருடைய அபிமானம் மிகவும் அதிகமாக இருக்கிறது. ஒருவழியில் பார்த்தால், இருவரின் வாழ்க்கை பாதையும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கிறது. Carl Pei தனது மேசையில் ஒரு சிறிய ஸ்டீவ் ஜாப்ஸ் பாபில்ஹெட் பொம்மையை வைத்திருக்கிறார். Steve Jobs வாழ்க்கை பயண திரைப்படத்தைப் பார்ப்பதற்காக இவர் வெறுங்காலுடன் தியேட்டர் சென்றிருக்கிறார். தொழில்நுட்ப ஜாம்பவானிற்கு மாறியதைச் செலுத்தும் விதமாக இதை அவர் செய்ததாகக் கூறப்படுகிறது.

திருட்டு பயம் இனி இல்ல..உங்க வீட்டில் 360° டிகிரியும் பாதுகாப்பு! புது Xiaomi ஹோம் செக்யூரிட்டி கேமரா 2iதிருட்டு பயம் இனி இல்ல..உங்க வீட்டில் 360° டிகிரியும் பாதுகாப்பு! புது Xiaomi ஹோம் செக்யூரிட்டி கேமரா 2i

சொந்த அட்ரஸ் கூட இல்லாத CEO

சொந்த அட்ரஸ் கூட இல்லாத CEO

மில்லியன் கணக்கான சொத்துக்களுடன், கார்ல் பெய் தனது வாழ்க்கையை ஒரு மில்லியனர் பாணியில் வாழ்கிறார் என்று நீங்கள் நினைப்பீர்கள், ஆனால் அது உண்மையில்லை. பெய் அவருடன் எடுத்துச் செல்லும் அனைத்தையும் நாம் ஒரு சூட்கேஸில் அடைத்துவிடலாமாம். இவர் Airbnbs இல் மாதாந்திர அடிப்படையில் வாடகைக்கு இடங்களை எடுத்து அங்கிருந்து வேலை செய்வாராம். அவருக்கென்று சொந்தமாகவும் நிரந்தரமாகவும் ஒரு முகவரி கூட இல்லை என்பதே நம்ப முடியாத உண்மை. இவர் தன்னுடைய 9 சட்டைகளை எடுத்துக்கொண்டு உலகம் சுற்றும் நாடோடியாக வாழ்கிறார்.

அலுவலகம் செல்லாமல் வேலை பார்த்து நிறுவனத்தை நடத்தும் கார்ல் பெய்

அலுவலகம் செல்லாமல் வேலை பார்த்து நிறுவனத்தை நடத்தும் கார்ல் பெய்

Co-CEO மற்றும் நிறுவுனராக வேலை செய்யும் அதிகாரிகள் பொதுவாக தங்கள் பணியிடங்களுக்கு நேரில் சென்று வேலை செய்வதைப் பழக்கமாக வைத்துள்ளனர். ஆனால், கார்ல் பெய் முற்றிலும் வித்தியாசமானவர். நத்திங் தலைமை நிர்வாக அதிகாரியால் எங்கிருந்தும் வேலை செய்ய முடியும் என்பதை நிரூபிப்பவர் இவர். கார்ல் பெய் சமீபத்தில் தனது சமூக ஊடகத்தில் ஒரு படத்தைப் பகிர்ந்துள்ளார், அதில் அவர் தனது லேப்டாப் உடன் மெக்டொனால்டில் இருந்து பணிபுரிவதைத் தெளிவாகக் காண்பிக்கிறது. அலுவலகம் செல்லாமல் எங்கிருந்து வேண்டுமானாலும் வேலை செய்து வெற்றியடையலாம் என்பதை இவர் நிரூபிக்கிறார்.

ஐஸ் கிரீம் காதலர்

ஐஸ் கிரீம் காதலர்

Carl Pei ஒரு ஐஸ் கிரீம் பிரியர், இல்லை-இல்லை இவர் ஒரு தீவிரமான ஐஸ் கிரீம் காதலர். கார்ல் பெய் இன் சமூக ஊடகப் பக்கத்தில் அவருக்கு இருக்கும் ஐஸ்கிரீம் மீதான காதலை நாம் வெளிப்படையாகப் பார்க்கமுடிகிறது. ஐஸ்கிரீம் டப், ஐஸ்கிரீம் கோன், ஐஸ்கிரீம் கப் என்று ஐஸ் கிரீமில் உங்கள் மெனு என்னவென்று சொல்லுங்கள், அதை நாம் இவருடைய சமூக வலைத்தள பக்கத்திலிருந்து பார்க்கலாம்.

அனிமி பிரியர்.. பிளாட்பார்மில் அமர்ந்து உணவு உண்டவர்

அனிமி பிரியர்.. பிளாட்பார்மில் அமர்ந்து உணவு உண்டவர்

இன்ஸ்டாகிராமில் 'ask me anything' என்ற அமர்வின் போது, கார்ல் பெய் ஒருமுறை அவர் ஒரு அனிமி (Anime) ரசிகர் என்பதை வெளிப்படுத்தினார். அவர் 2019 ஆம் ஆண்டு ஹாலோவீனுக்கான பிரபலமான ஜப்பானிய மங்கா தொடரில் இருந்து நருடோ உசுமாகி (Naruto Uzumaki) போல் உடையணிந்து, ரோட்டோரக்கடையில் அமர்ந்து நூடுல்ஸ் சாப்பிடுவது போன்ற செயலையும் இவர் செய்திருக்கிறார். உண்மையில் இவர் கொஞ்சம் வேடிக்கையானவர் தான்.

நெவர் செட்டில் மற்றும் ஃபிளாக்ஷிப் கில்லர் டேக்லைன்

நெவர் செட்டில் மற்றும் ஃபிளாக்ஷிப் கில்லர் டேக்லைன்

இவர் ஒரு மார்க்கெட்டிங் வித்வான் என்பது உலகுக்குத் தெரியும். ஆனால், பிரபலமான ஒன்பிளஸ் டேக்லைன் "நெவர் செட்டில்" என்ற வாக்கியத்தை உருவாக்கியது கார்ல் பெய் என்பது பலருக்குத் தெரியாது. அத்தகைய குறுகிய மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் டேக்லைன்களை உருவாக்குவதில் இவர் கெட்டிக்காரர். டெக் துறையில் "ஃபிளாக்ஷிப் கில்லர்" என்ற மிகவும் பிரபலமான வார்த்தையை உருவாக்கியதும் இவர் தான். இப்போது Nothing என்ற பிரண்டை உருவாக்கியதிலும் இவருடைய திறமை தெரிகிறது.

ஸ்மார்ட்போன்கள் போர் அடித்துவிட்டதா?

ஸ்மார்ட்போன்கள் போர் அடித்துவிட்டதா?

இப்படி ஒரு விசித்திரமான CEO மூலம் Nothing என்ற புது பிராண்ட் உருவாக்கப்பட்டுள்ளது. இவர் இந்த பிராண்டை உருவாக்கியதற்கு முக்கிய காரணமே, இன்றைய ஸ்மார்ட்போன்களில் சுவாரசியம் இல்லையாம். இப்போது வெளியாகும் ஸ்மார்ட்போன்கள் போரிங்காக இருக்கிறதாம். அதன் டிசைன் முதல் அம்சங்கள் வரை எல்லாம் ஒரே மாதிரியாக இருக்கிறது என்று பீல் செய்கிறார் கார்ல் பெய். இதை மாற்றும் நோக்கத்திலும், ஸ்மார்ட்போன்களை ஒரு இன்டரெஸ்டிங் கருவியாக மாற்றி அமைக்கும் நோக்கத்திலேயே இந்நிறுவனத்தை இவர் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இன்று வெளியாகும் நத்திங் போனை பார்த்தால் இவரின் முயற்சி என்ன என்பது நமக்குத் தெரிந்துவிடும்.

Best Mobiles in India

English summary
10 Interesting Things and Truth About Carl Pei The Nothing Phone 1 Founder

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X