'மண்ணை கவ்விய' மைக்ரோசாப்ட்..!!
"ஆணைக்கும் அடி சறுக்கும்" என்று சும்மாவா எழுதி வைத்தார்கள். உலகின் மாபெரும் நிறுவனம் என்பதால், அது தோல்வியே சந்தித்தது இல்லை என்று அர்த்தம் இல்லை.
மேலும் பல தோல்விகளையும், விடாது பல வித்தியாசமான முயற்சிகளையும் செய்து கொண்டே இருந்தால்தான் மக்களின் ரசனையை தெளிவாகவும் துல்லியமாகவும் புரிந்துகொள்ள முடியும் என்பது தான் நிதர்சனம் என்றால், அதற்கு சற்றும் சலித்தது இல்லை - மைக்ரோசாப்ட் நிறுவனம்..!
ஏனெனில் நாம் நினப்பது போல் மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடர் வெற்றியால் உருவானது இல்லை, பல படுதோல்விகளையும் உள்ளடக்கியது. அப்படியாக, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மிகவும் மோசமான 10 படுதோல்விகளைத்தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..!

01. மைக்ரோசாப்ட் போட்ரியட் :
1990-களுக்கு பின் வெளியான இது (Microsoft Portrait) ஒரு லோ பிட் ரேட் வீடியோ காண்ஃபிரன்சிங் சாப்ட்வேர் (low bit rate video conferencing software) ஆகும்..!

02. டெர்ரா சர்வர் :
கூகுள் எர்த் மேப்-க்கு முன்பு 1997-ஆம் ஆண்டே வெளியான மேப் வசதி (Terraserver).

03. எம்எஸ்என் :
1995-ஆம் ஆண்டு வெளியான சமூக வலைதளத்தின் முதல் மெசென்ஜர் இது தான் (MSN).

04. விண்டோஸ் மொபைல் :
2000-ஆம் ஆண்டு வெளியான மைக்ரோசாப்ட் ஸ்மார்ட்போன்கள் (Windows Mobile).

05. டாப்ளேட் பிசி 2002 :
2002-ஆம் வெளியான மைக்ரோசாப்ட்டின் முதல் டாப்ளேட் பிசி (Tablet PC in 2002).

06. மைக்ரோசாப்ட் மெயில் :
1991-ஆம் ஆண்டு அறிமுகமான மைக்ரோசாப்ட் மெயில் சேவை (Microsoft Mail).

07. மைக்ரோசாப்ட் போப் :
1991-ஆம் ஆண்டு அறிமுகமான விண்டோஸ் 3.1-க்கான கிராஃபிக்கல் யூஸர் இன்டர்ஃபேஸ் (Graphical user interface - Microsoft Bob)

08. டைமெக்ஸ் டேட்டா ஸ்மார்ட் வாட்ச் :
1994-ஆம் ஆண்டு டைமக்ஸ் நிறுவனத்தோடு கைகோர்த்து மைக்ரோசாப்ட் உருவாக்கிய ஸ்மார்ட் வாட்ச் (Timex DataLink smartwatch).

09. எம்எஸ்என் டிவி :
1996-ஆம் ஆண்டு இன்டர்நெட்டால் இயங்கும் மைக்ரோசாப்ட்டின் முதல் ஸ்மார்ட் டிவி (MSN TV).

10. மைக்ரோசாப்ட் கொரியர் :
இது (Microsoft Courier) உருவாக்கப்பட்டத்தோடு சரி, அறிமுகமே செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க :

தமிழ் கிஸ்பாட் :
மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!


Click it and Unblock the Notifications