Home
News

Ambani Antilia House: அம்பானியின் ஆடம்பர வீடு பற்றிய வியப்பூட்டும் தகவல்கள்.!

இந்தியாவில் மட்டுமல்லாமல், உலக அளவில், மிக சக்திவாய்ந்த வணிகர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி மீதான நமது "பாசம்" ரிலையன்ஸ் ஜியோவின் அறிமுகத்திற்கு பின்னர் உச்சகட்டத்தை எட்டியது என்பது வெளிப்படை. இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் அம்பானி பற்றிய செய்திகள் மற்றும் தகவல்களை மக்கள் அதிகளவில் தேடிப் பார்க்கின்றனர்.

#1

அப்படியான பிரபலத்துவம் பெற்றுள்ள முகேஷ் அம்பானியின் அன்டிலியா இல்லம் பற்றிய 10 சுவாரஸ்யமான உண்மைகளை இங்கு பார்ப்போம்.

#1

அன்டிலியா உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த குடியிருப்புகளில் ஒன்றாகும். 4,00,000 சதுர அடி கொண்ட இந்த வீடு தெற்கு மும்பையில் அல்டாமவுண்ட் சாலையில் அமைந்துள்ளது. அன்டிலியா வீடு 173.13 மீட்டர் உயரம் கொண்டது. மொத்தம் 27 தளங்களை கொண்டது. ஒவ்வொரு தளங்களும், சாதாராண வீட்டின் மூன்று தளங்களுக்கு ஒப்பான உயரம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

#2

#2

அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள புராண தீவின் அடையாளமாக அன்டிலியா என இந்த வீட்டிற்கு பெயரிடப்பட்டது. இந்த வீட்டின் அற்புதம் என்னவென்றால் கண்ணாடி மாளிகையான அன்டிலியாவின் கோபுரங்கள், மேகத்தை கிழித்து செல்லும் கோபுரத்தை போல் தொடுவானத்தி காணப்படும்.

#3

#3

அம்பானியின் இல்லமானது ஆரோக்கிய ஸ்பா, சலூன், பால்ரூம், 3 நீச்சல் குளங்கள், யோகா மற்றும் நடன ஸ்டுடியோஸ் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது. ஒரு முறை, அம்பானியின் மனைவி நீதா, நியூயார்க்கில் மாண்டரின் ஓரியண்டலில் உள்ள ஒரு ஸ்பாவில் இருந்து சென்ட்ரல் பார்க்கை பார்த்துக் கொண்டிருந்தார். அங்குக் கண்ட சமகால உள் அலங்காரத்தால் கவரப்பட்ட அவர், அதைப் பற்றி டிசைனரிடம் விசாரித்தார்.பின்புதான் இப்படி ஒரு வீட்டைக் கட்டும் நோக்கில் மாண்டரின் ஓரியண்டலின் டிசைனர்களான பெர்கின்ஸ் & வில் மற்றும் ஹிர்ஷ் பெண்டர் அசோஸியேட்ஸ் அவர்களை அம்பானி குடும்பத்தார் கலந்து ஆலோசித்தனர்.

#4

#4

இந்த பிரம்மாண்டமான இல்லத்தை பராமரிக்க உதவியாக 600 ஊழியர்கள் உள்ளனர். பாதுகாப்பு அதிகாரிகள்/ காவலர்கள் மற்றும் பிற உதவியாளர்கள் ஓய்வெடுக்கும் வகையில் ஒரு பிரம்மாண்ட அறை உள்ளது.

#5

#5

அன்டிலியா வீட்டில் உல்ல ஐஸ் ரூம் என ஒன்று உள்ளது,குடும்பத்தாரும் விருந்தினர்களும் மும்பையில் வெயிலில் வதைபடும் போது பயன்படுத்துவதற்காக இந்த அறை உள்ளதாம்.

#6

#6

50 நபர்கள் அமரக்கூடிய தனிப்பட்ட தியேட்டர் இந்த வீட்டில் உள்ளது. மற்றும் இந்த தியேட்டரின் கூரையாக மாடித்தோட்டம் உள்ளது. அதன்பின்பு இந்த வீட்டில் இருக்கும் கிரிஸ்டல் விளக்குகளுடன் கூடிய பாரில் உட்புற,வெளிப்புற மதுபானம் அருந்தகம், ஒய்விடங்கள், கழிப்பறைகள் மற்றும் ஒப்பனை அறைகள் போன்றவை உள்ளது.

#7

#7

இந்த கட்டிடத்தின் ஆறு மாடிகள் 168 கார்கள் நிறுத்துமளவிற்கு பார்க்கிங் பகுதிக்கெனவே அர்ப்பணிக்கப்பட்டன. அன்டிலியா வீட்டின் ஏழாவது தளத்தில் கார் பராமரிப்பு மற்றும் பழுது நீக்கும் மையமாக செயல்படுகிறது. இதற்காக, பல அனுபவம் வாய்ந்த மெக்கானிக்குகளும், பணியாளர்களும் 24 மணிநேரமும் ஷிஃப்ட் முறையில் பணியில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#8

#8

இந்த கட்டிடத்தில் மட்டும் 9 லிஃப்ட்கள் உள்ளது. விருந்தினர்களுக்கும் அம்பானி குடும்ப உறுப்பினர்களுக்கும் தனித்தனியாக லிஃப்ட்கள் உள்ளன. குறிப்பாக அம்பானியின் இந்த வீடு ரிக்டர் 8வரையிலான நிலநடுக்கத்தைஉறுதியோடு தாங்கும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.

#9

#9

சூரியன் மற்றும் தாமரை இரண்டு வடிவமைப்பு அலங்காரங்கள் மட்டுமே இக்கட்டிடம் முழுவதும் படிக, பளிங்கு, மற்றும் முத்து போன்ற வெவ்வேறு அரிதான பொருட்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

#10

#10

அன்டிலியா மாளிகையின் கூறையில் 3 ஹெலிபேட்கள் உள்ளன, பின்பு ஹெலிகாப்டர்களை இயக்குவதற்காகசொந்தமாக கட்டுப்பாட்டு மையமும் இங்கு செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Top 10 Most Expensive and Biggest House in the World : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X