விரைவில் சியோமி மி 5எஸ் : பரபரக்க வைக்கும் லீக் தகவல்களும், வதந்திகளும்..!

|

கிழக்கு நாடுகளின் 'ஆப்பிள்' என்று அழைக்கப்படும் சியோமி நிறுவனம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போனான மி5 கருவியை 2016-ல் பார்சிலோனாவில் வெளியிட்டது. இப்போது அதன் மேம்படுத்தப்பட்ட பதிப்பான சியோமி மி 5எஸ் கருவியை வெளியிட தயாராகி கொண்டிருக்கிறது.

விரைவில் வெளியாகப்போகும் சியோமி மி 5எஸ் கருவி சார்ந்த சில பரபரக்க வைக்கும் லீக் தகவல்களும், வதந்திகளும் வெளியாகியுள்ளன..!

டிஸ்ப்ளே :

டிஸ்ப்ளே :

மி 5எஸ் ஒரு முழு எச்டி ஸ்க்ரீன் கொண்டிருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது ஆனால் ஸ்க்ரீன் அளவு சார்ந்த தகவல்கள் கிடையாது. மி5எஸ் கருவியானது மி5 போன்றே 5.15 அங்குல திரை தக்க வைத்து கொள்ளும் என்று நம்பப்படுகிறது.

3டி டச் அம்சம் :

3டி டச் அம்சம் :

முந்தைய வதந்திகளின்படி , மி 5எஸ் கருவியில் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் போன்ற ஒரு 3டி டச் அம்சம் இடம் பெரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சிப் செட் :

சிப் செட் :

மேலும் இக்கருவி க்வாட்-கோர் 2.4ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 821 எஸ்ஓசி கொண்டு வரும் என்றும் உடன் அட்ரெனோ 530 ஜிபியூ சேர்ந்து வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 ஆண்ட்ராய்டு 7.0 :

ஆண்ட்ராய்டு 7.0 :

கண்டிப்பாக மி5 ஆனது ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ கொண்டு இயங்கும் அதே சமயம் அது சமீபத்திய ஆண்ட்ராய்டு 7.0 நவ்கட்பிரீலோட் உடன் வெளியாகலாம் என்ற வதந்தி ஒன்றும் கிளம்பியுள்ளது.

ரேம் :

ரேம் :

மி 5எஸ் ஆனது எல்பிடிடிஆர்4 ரேம் கொண்ட 6ஜிபி அளவிலான ரேம் கொண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டோரேஜ் :

ஸ்டோரேஜ் :

வதந்திகளின்படி மி 5எஸ் ஆனது பல்வேறு ஸ்டோரேஜ் வகைகளில் கிடைக்கும் என்று கூறுப்படுகிறது அதில் ஒருவகையாக 256ஜிபி (யூஎப்எஸ் 2.0) கொண்ட இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேமிரா :

கேமிரா :

உறுதியில்லாத விவரங்களை மி 5எஸ் கருவியில் எப் /1.8 அப்பர்ஷெர் 4-ஆக்சிஸ் ஓஐஎஸ், டவுல் டோன்டு எல்இடி ப்ளாஷ் கொண்ட ஒரு 16 எம்பி. பின்புற கேமிரா மற்றும் ஒரு 8 எம்பி முன்பக்க கேமிரா கொண்டிருக்கும் என்றும் உடன் நொடிக்கு 30 பிரேம் என்ற வேகத்தில் 4கே வீடியோக்களை பதிவு செய்ய முடியும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரட்டை கேமரா அமைப்பு :

இரட்டை கேமரா அமைப்பு :

மி 5எஸ் கருவியில் புதிதாக வெளியிடப்பட்ட ஐபோன் 7 பிளஸ் கருவிக்கு கடுமையான போட்டியை கொடுக்கும் வண்ணம் ஒரு இரட்டை கேமரா அமைப்பு வெளிவரும் என்றும் வதந்திகள் கிளம்பியுள்ளன.

பேட்டரி :

பேட்டரி :

மி 5எஸ் கருவியில் மி5 கருவில் கிடைத்த 3000எம்ஏஎச் பேட்டரி ஒப்பிடுகையில் சற்று மேம்படுத்தப்பட்ட 3490எம்ஏஎச் பேட்டரி வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கைரேகை சென்சார் :

கைரேகை சென்சார் :

உடன் பல வதந்திகளின் படி மி 5எஸ் ஆனது குவால்காம் அல்டராசோனிக் கைரேகை சென்சார் தொழில்நுட்பம் கொண்டு வெளிவரும் எனப்படுகிறது.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

ரிலையன்ஸ் ஜியோ அறிமுக சலுகையுடன் மோட்டோ இ3 பவர் இந்தியாவில் வெளியானது!..

தகவல்கள் : கிஸ்மோசீனா

Best Mobiles in India

English summary
10 Hot Rumors & Leaks About the Upcoming Xiaomi Mi 5S. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X