Home
News

Google இல் இப்படி கூட சர்ச் செய்யலாமா? டாப் 10 டிப்ஸ்.. ஃபாஸ்டான சர்ச்சுக்கு இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..

கூகுள் தேடல் என்பது உலகின் பெரும்பாலான பகுதிகளில் அதிகம் பயன்படுத்தப்படும் தேடு பொறியாகும். மேலும், நீங்கள் தேடும் இணையதளங்களின் பட்டியலை உங்களுக்குக் கொண்டு வரக்கூடிய எளிய தேடு பொறியான கூகிள் இப்போது மிகவும் மேம்படுத்தப்பட்ட பக்கமாக உள்ளது. அதன் சொந்த திறன் கொண்டது கணக்கீடுகள், சூழல் தேடல் போன்ற பல அம்சங்களைக் கூகிள் இப்போது கொண்டுள்ளது. இந்த 10 Google சர்ச் டிப்ஸ்கள் மற்றும் ட்ரிக்களை நீங்கள் அறிந்திருந்த பயன்படுத்தினால், உங்கள் தேடல் முடிவுகள் மற்றவர்களை விட இன்னும் அதிக வேகத்துடன் விரைவாக உங்களுக்குக் கிடைக்கும்.

1. சர்ச் பில்டர் டேப்களைப் பயன்படுத்துங்கள்

1. சர்ச் பில்டர் டேப்களைப் பயன்படுத்துங்கள்

நீங்கள் ஒரு குறிப்பிட்ட வகையான முடிவைத் தேடும் போது, சர்ச் பில்டர்களை நீங்கள் பயன்படுத்துவது உண்மையில் சிறந்த தீர்வாக அமையும். உதாரணத்திற்கு, உங்களுக்கு அருகிலுள்ள கஃபேக்கள், மால்கள் அல்லது பூங்காக்களை பற்றி நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், மிகவும் பொருத்தமான முடிவுகளைக் காணவும், முக்கிய தகவலை மட்டும் காண 'மேப்ஸ்' டேப்புக்கு நீங்கள் மாறலாம். இதேபோல், நியூஸ், இமேஜஸ் போன்ற முடிவுகளைப் பெறவும், நீங்கள் அதற்கு தகுந்த சர்ச் பில்டர் டேப்களைப் பயன்படுத்தலாம்.

2. மிகச் சரியான முடிவுகளுக்கு இதை (

2. மிகச் சரியான முடிவுகளுக்கு இதை (" ") பயன்படுத்துங்கள்

நீங்கள் பல வார்த்தைகளைத் தேட Google ஐப் பயன்படுத்தும் போது, ​​முடிவுகள் பெரும்பாலும் நீங்கள் தேடிய குறிப்பிட்ட வரிசையை மட்டும் இல்லாமல் எந்த வரிசையிலும் வேண்டுமானாலும் காண்பிக்கப்படும். சில சமயங்களில் இது பயனுள்ளதாக இருந்தாலும், சில நேரங்களில் நீங்கள் துல்லியமான முடிவுகளை விரும்பும் போது இந்த அம்சம் உங்களுக்குப் பெரிதும் உதவும். உதாரணமாக நீங்கள் பாடல் வரிகளைத் தேடும்போது வரிகளின் ஆரம்பம் மற்றும் முடிவில் " " சேர்க்க மறக்காதீர்கள். மிகச் சரியான முடிவுகளைத் தேட, இந்த மேற்கோள் குறிகளைப் பயன்படுத்தலாம்.

3. கோலன் (:) சேர்த்து சர்ச் செய்யும் போது என்ன நடக்கும் தெரியுமா?

3. கோலன் (:) சேர்த்து சர்ச் செய்யும் போது என்ன நடக்கும் தெரியுமா?

இந்த அம்சம் ஒரு குறிப்பிட்ட இணையதளத்திற்குச் சொந்தமான கூறுகளை மட்டுமே தேட Google உங்களை அனுமதிக்கிறது. இதைச் செய்ய, குறிப்பிட்ட இணையதளத்திலிருந்து முடிவுகளைப் பெற உங்கள் தேடலில் 'site:xyz.com' ('xyz' என்பது நீங்கள் விரும்பும் எந்த இணையதளமாக இருக்கலாம்) என்பதைச் சேர்க்கலாம். உதாரணமாக, நடிகரின் விக்கிப்பீடியா பக்கத்திற்கான இணைப்பை நேரடியாகப் பெற, 'Willem Dafoe site:Wikipedia.com' என்று நீங்கள் தேடுவது, உங்களுக்கான மிகச் சரியான ரிசல்ட்டை காண்பிக்கும்.

4. சந்தேகமான வார்த்தைகளுக்கு நடுவில் இதை சேர்த்துக்கொண்டால் என்ன நடக்கும்?

4. சந்தேகமான வார்த்தைகளுக்கு நடுவில் இதை சேர்த்துக்கொண்டால் என்ன நடக்கும்?

நீங்கள் துல்லியமான ஒன்றைத் தேட விரும்பும் சந்தர்ப்பங்களில், உங்களிடம் சரியான வார்த்தைகள் இல்லாமல் இருக்கலாம். நீங்கள் நினைவில் கொள்ள முடியாத வார்த்தைகளுக்குப் பதிலாக நட்சத்திரக் குறியைச் ( * ) சேர்த்துக்கொள்ளுங்கள். இந்த அம்சத்தைப் பயன்படுத்தும் போது, Google உங்களுக்கான வெற்றிடங்களைத் தானாக நிரப்பும். உதாரணமாக, நீங்கள் Attack on Titan தேடுகிறீர்கள், ஆனால் சரியான பெயர் அட்டாக் ஆன் டைட்டனா அல்லது அட்டாக் ஆஃப் டைட்டனா என்பதை நினைவில் கொள்ள முடியாவிட்டால் , நீங்கள் Attack * Titan என்று தேடலாம். இது உங்களுக்குச் சரியான தகவலை வழங்கும்.

5. குயிக் கால்குலேட்டர் மற்றும் கரன்சி கன்வர்ஷன்

5. குயிக் கால்குலேட்டர் மற்றும் கரன்சி கன்வர்ஷன்

கூகிளின் சிறிய சர்ச் பார் உண்மையில் ஒரு கால்குலேட்டர் மற்றும் கரன்சி கன்வர்ட்டர் உடன் வருகிறது. அடுத்த முறை நீங்கள் விரைவாக எதையும் மாற்ற விரும்பினால், உங்கள் ஃபோன் அல்லது கால்குலேட்டரை தேடாமல், ​உங்கள் போனில் உள்ள கூகுளில் இருந்து உங்களுக்குத் தேவையான பதில்களைப் பெறலாம். எடுத்துக்காட்டாக, "768 முறை 4" எவ்வளவு என்பதை அறிந்துகொள்ளக் கூகிள் சர்ச் பாரில் 768 times 4 என்று டைப் செய்து 3072 என்ற பதிலை நேரடியாகப் பெறலாம்.

கரன்சி எக்ஸ்சேஞ்சர் விபரம் நொடியில்

கரன்சி எக்ஸ்சேஞ்சர் விபரம் நொடியில்

நிகழ் நேர விகிதங்களின்படி நாணய மாற்றங்கள் உட்படத் தரவு மாற்றங்களுக்கான நேரடி முடிவுகளையும் நீங்கள் கூகிள் சர்ச் பார் மூலம் பெறலாம். உதாரணமாக, 37.99 அமெரிக்க டாலர்கள் இந்திய மதிப்பில் எவ்வளவு என்பதைக் கண்டறிய என்று கூகுள் செய்து நேரடி முடிவைப் பெறலாம். இந்த முறையைப் பின்பற்றி நீங்கள் கணக்கிட கால்குலேட்டர் மற்றும் கரன்சி எக்ஸ்சேஞ்சரை பயன்படுத்தலாம். இது மிகவும் வேகமாக உங்களுக்குத் தேவையான தகவலை வழங்கும்.

6. உங்கள் பகுதியில் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் நேரம் பற்றி அறிய?

6. உங்கள் பகுதியில் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் நேரம் பற்றி அறிய?

உங்கள் நகரத்தில் மட்டுமல்ல, ஒவ்வொரு நேர மண்டலத்திலும் உள்ள ஒவ்வொரு நகரத்திலும் நேரத்தை Google கண்காணித்து வருகிறது. எனவே வெளிநாட்டில் உள்ள ஒரு குறிப்பிட்ட நகரத்தில், உலகில் எங்கு வேண்டுமானாலும் நேரம் என்ன என்பதை நீங்கள் அறிய விரும்பினால், நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் Google "time (name of the city)" என்று டைப் செய்து சர்ச் செய்யலாம்.

சூரிய உதயம் அல்லது சூரிய அஸ்தமனம்

சூரிய உதயம் அல்லது சூரிய அஸ்தமனம்

அந்தந்த பிராந்தியத்திற்கான உள்ளூர் நேரத்தைப் பெறவும் பயனர்கள் இந்த அம்சத்தைப் பயன்படுத்தலாம். இன்னும் விரைவான முடிவுகளைப் பெற, "sunrise (name of the city)" அல்லது "sunset (name of the city)" என்பதைத் தேடுவதன் மூலம் எந்த நகரத்திலும் சூரிய உதயம் அல்லது சூரிய அஸ்தமனத்திற்கான நேரங்களைப் பெறலாம்.

7. குறிப்பிட்ட ஃபைல்களைத் தேடுகிறீர்களா?

7. குறிப்பிட்ட ஃபைல்களைத் தேடுகிறீர்களா?

குறிப்பிட்ட jpeg படங்கள், pdf கோப்புகள் அல்லது அந்த வகையான எதையும் விரைவாகப் பெற விரும்பினால், குறிப்பிட்ட கோப்புகளைத் தேட Google உங்களை அனுமதிக்கிறது. இதைச் செய்ய, துல்லியமான முடிவுகளைப் பெற, பயனர்கள் தங்கள் தேடல் வினவலைத் தொடர்ந்து "filetype: (file extension)" என டைப் செய்யலாம். உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட .pdf கோப்பைத் தேட, "(your file name) filetype:pdf" என்று தேடலாம்.

8. டைமர் மற்றும் ஸ்டாப்வாட்ச் பயன்படுத்த வேண்டுமா?

8. டைமர் மற்றும் ஸ்டாப்வாட்ச் பயன்படுத்த வேண்டுமா?

உங்கள் ஃபோன் அல்லது கம்ப்யூட்டரில் புதிய டேப்பில் இருந்தே டைமர் அல்லது ஸ்டாப்வாட்சை அமைக்க Google உங்களை அனுமதிக்கிறது. டைமரைத் தொடங்க "timer 7 minutes" என்று டைப் செய்து தேடுங்கள். டைமர் பாக்ஸில் அருகிலுள்ள டேப் இல், ஸ்டாப்வாட்ச் செயல்பாட்டைக் கூட நீங்கள் காணலாம். ஸ்டாப் வாட்ச் பயன்படுத்த விரும்பும் நபர்கள் ஸ்டாப் வாட்ச் ஐகானை கிளிக் செய்து பயன்படுத்தத் துவங்கலாம்.

9. உங்கள் ஐபி முகவரி பற்றிக் கூட கூகுளிடம் நீங்கள் கேட்கலாம்

9. உங்கள் ஐபி முகவரி பற்றிக் கூட கூகுளிடம் நீங்கள் கேட்கலாம்

நீங்கள் அறிந்திருக்காவிட்டாலும், உங்கள் சாதனத்தின் ஐபி முகவரியை Google அறிந்திருக்கிறது. நீங்கள் தற்போது பயன்படுத்தும் சாதனத்தின் ஐபியைக் கண்டறிய, கூகுளைத் திறந்து "what's my IP" என்று தேடவும். உங்கள் பொது ஐபி முகவரியை விரைவாகப் பெற இதைச் செய்யுங்கள்.

10. ரிவர்ஸ் இமேஜ் சர்ச் என்றால் என்ன தெரியுமா? இது உங்களுக்குப் பெரிதும் உதவும் மக்களே

10. ரிவர்ஸ் இமேஜ் சர்ச் என்றால் என்ன தெரியுமா? இது உங்களுக்குப் பெரிதும் உதவும் மக்களே

நீங்கள் விரும்பும் படங்களைப் பெறுவதற்கு Google ஐப் பயன்படுத்துவது சிறப்பானது, ஆனால் ஒரு படத்திலிருந்து அதன் அசல் மூலத்தைப் பெறுவதற்கு Google இன் உதவியைப் பெறலாம் அல்லது அதே படத்தை அதிக தெளிவுத்திறனில் அல்லது ஒத்த படங்களைக் கண்டறிய நீங்கள் கூகிளை பயன்படுத்தலாம். இதற்கு, முதலில், பிரத்தியேக Google Images முகப்புப் பக்கத்திற்குச் செல்லவும். Google பக்கத்திற்குச் சென்று மேல் வலதுபுறத்தில் உள்ள "Images" பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் இதைச் செய்யலாம்.

இந்த டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ்களை டிரை செய்யுங்கள்

இந்த டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ்களை டிரை செய்யுங்கள்

கூகுள் படங்கள் பக்கத்தில் ஒருமுறை, தேடல் பட்டியில் கேமரா வடிவ ஐகானைக் கண்டறியவும். இது பொதுவாக மாத்திரை வடிவ தேடல் பட்டியின் உள்ளே வலதுபுறத்தில் இருந்து இரண்டாவது ஐகானாக இருக்கும். உங்கள் தொலைப்பேசி அல்லது கணினியிலிருந்து ஒரு படத்தைப் பதிவேற்றப் பொத்தானைக் கிளிக் செய்யவும். Google அந்தத் தேடலைத் திருப்பிவிடும். இந்த டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ்களை டிரை செய்து பாருங்கள். இதில் உங்களுக்கு பயனுள்ள அம்சம் எதுவாக இருந்தது என்பதை கமெண்ட் செய்து எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
10 Google Search Tips And Tricks That Makes You Search Maestro To Get Results Fast And Accurate : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X