தீமை தான் வெல்லும் : ஹிட்லர் உட்பட..!

Posted By:

ஒரு பொருளை நல்ல முறையில் பயன்படுத்த 1000 பேர் இருந்தாலும் கூட, அதே பொருளை மிகவும் தீங்கான முறையில் பயன்படுத்த குறைந்த பட்சம் பத்து பேராவது நிச்சயம் இருக்கத்தான் செய்கிறார்கள் (ஹிட்லர் உட்பட..!).

அப்படியாக, நல்ல விடயங்களுக்காக பயன்படுத்த கண்டுப்பிடிக்கப்பட்ட பல பொருள்களும், தொழில்நுட்பங்களும் கொடுமையான தீமைகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டு உள்ளன, மேலும் பயன்படுத்தப்பட்டுக் கொண்டே தான் இருக்கின்றன என்பது தான் நிதர்சனம். அதை பற்றிய அதிர்ச்சியான ஒரு தொகுப்பே இது..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
டைனமைட் :

டைனமைட் :

அதாவது வெடி பொருட்கள் - மாபெரும் சுரங்கங்கள்களை அமைப்பதைக்கூட மிகவும் எளிமையாக்கியது என்பது தான் நிதர்சனம்.

முக்கிய ஆயுதம் :

முக்கிய ஆயுதம் :

ஆனால், இன்றோ அதிநவீன முறையில் வெடிகுண்டுகள் தயாரிக்க முடியாத தீவிரவாத இயக்கங்களின் முக்கிய ஆயுதங்களாக டைனமைட் திகழ்கின்றன.

ஸைக்லோன் பி (Zyklon B) :

ஸைக்லோன் பி (Zyklon B) :

உண்மையில் இது ஒரு பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் கிருமிநாசினி ஆகும்.

நாஸி :

நாஸி :

இது மக்களைகொன்று கூவிக்க ஹிட்லரின் நாஸி படையால் பெருமளவு பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இரசாயன ஆயுதம் :

இரசாயன ஆயுதம் :

மேலும் முதலாம் உலகப்போரின் போது ஸைக்லோன் பி, இரசாயன ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு தோல்வியில் முடிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

3டி பிரிண்ட்டிங் (3D Printing) :

3டி பிரிண்ட்டிங் (3D Printing) :

3டி பிரிண்ட்டிங் தொழில்நுட்பம் கொண்டு உயிர் காக்கும் செயற்கை உடல் உறுப்பு வரை எதையும் உருவாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கிகள் :

துப்பாக்கிகள் :

சமீப காலமாக 3டி பிரிண்ட்டிங் தொழில்நுட்பம் மூலம் துப்பாக்கிகள் மற்றும் சில குறிப்பிட்ட ஆயுதங்களும் தயாரிக்கபடுகின்றன.

டோர் (Tor) :

டோர் (Tor) :

அதாவது தி ஆனியன் ரவுட்டர் (The onion router) - இதன் மூலம் இன்டர்நெட்டை பயன்படுத்தினால் 'ட்ரேஸ்' செய்ய இயலாது அடையாளம் கண்டுப்பிடிக்க முடியாது.

ஆபாசப்படங்கள் :

ஆபாசப்படங்கள் :

அப்படியான இதனை பயன்படுத்தி குழந்தை ஆபாசப்படங்கள் தொடங்கி துப்பாக்கிகள் வரை சட்டவிரோதமான காரியங்கள் பெருமளவு இந்த ரவுட்டர் மூலம் நடத்தப்பட்டன.

ஃபோஸ்ஜீன் Phosgene (COCl2) :

ஃபோஸ்ஜீன் Phosgene (COCl2) :

சாயங்களில் முக்கிய மூலப்பொருள் ஆன இந்த தற்போது வரை தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

எரிவாயு ஆயுதம் :

எரிவாயு ஆயுதம் :

இதே ஃபோஸ்ஜீன், முதலாம் உலகப்போரின் போது ஒரு எரிவாயு ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் எர்த் :

கூகுள் எர்த் :

கூகுள் மேப் காலத்தில் யாருமே அவ்வளவு எளிதில் தொலைந்து போக முடியாது என்றே கூறலாம் அவ்வறாக வழி காட்ட உதவுகிறது கூகுள் எர்த் மேப்.

தீவிரவாத தாக்குதல்கள் :

தீவிரவாத தாக்குதல்கள் :

ஆனால் இதே கூகுள் எர்த் மேப்பை பெருமளவு பயன்படுத்தி, தெளிவாக திட்டமிடப்பட்டு தான் மாபெரும் தீவிரவாத தாக்குதல்கள் எல்லாம் நடக்கின்றன.

ரிமோட் ஆக்ஸெஸ் டூல்ஸ் :

ரிமோட் ஆக்ஸெஸ் டூல்ஸ் :

கம்ப்யூட்டர்களில் ஏற்படும் சிக்கல்களை நிர்வாகிகள் சமாளிக்க உருவாக்கப்பட்டதே இந்த ரிமோட் ஆக்ஸெஸ் டூல்ஸ் ( Remote Access Tools).

ட்ரபுல் ஷூட் :

ட்ரபுல் ஷூட் :

ஆனால் இதை சில தொழில்நுட்பவாதிகள் குறிப்பிட்ட கம்ப்யூட்டர் மீது ட்ரபுல் ஷூட் (Trouble shoot) செய்ய பயன்படுத்திக் கொள்கின்றனர்.

பயோடெக்னாலஜி :

பயோடெக்னாலஜி :

மனித இனத்தின் மாபெரும் வளர்ச்சிகளில் ஒன்று தான் பயோடெக்னாலஜி என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

ஆந்த்ராக்ஸ் :

ஆந்த்ராக்ஸ் :

அதே பயோடெக்னாலஜி மூலம் தான் ஆந்த்ராக்ஸ் (anthrax) உருவாக்கப்பட்டு, கடிதங்களில் வழியாக தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

சூப்பர் இன்டெல்லிஜன்ஸ் :

சூப்பர் இன்டெல்லிஜன்ஸ் :

ஒருபக்கம், ரோபோட்களுக்கு செயற்கை நுண்ணறி, சூப்பர் இன்டெல்லிஜன்ஸ் செலுத்துதல் என அதீதமாக ரோபோடிக்ஸ் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து கொண்டே போய் கொண்டிருக்கிறது.

தானியங்கி :

தானியங்கி :

மறுபக்கம் ஆளில்லா மற்றும் தானியங்கி விமானங்கள் குண்டு வீசி அழிக்க பயன்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்றன.

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!Read more about:
English summary
10 Good Techs Turned Bad. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot