இந்த தொழில்நுட்பம் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்!

மென் இன் பிளேக் படத்தை பார்த்தவர்கள் இந்த கருவியை அவ்வளவு சீக்கரம் மறந்திருக்க முடியாது.

|

நமது வாழ்க்கைமுறையையும், பொருட்கள் பற்றிய பார்வையையும் தொழில்நுட்பம் புதிதாக மாற்றியமைக்கிறதோ இல்லையோ, ஒன்றை மட்டும் நிச்சயம் செய்யும், அதுதான் நாம் விரும்பும் வகையிலான எதிர்காலம். மேதாவிகளான நமக்கு பிடித்த திரைப்படம், புத்தகங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் இருந்து எண்ணற்ற சாதகமான சாதனங்களோடு விளையாடுவதை பழக்கமாகிவிட்டது.

அந்த கருவிகள் நம்முடைய டிஜிட்டல் உலகில் இன்னும்ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் செயல்பாட்டிற்கு வந்துவிடும் என நாம் நம்பினாலும், சில நேரங்களில் 5 ஆண்டுகள் கூட ஆகலாம். அவ்வாறு புனைக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் எதிர்காலத்தில் இருக்கும் என கூறிவிட முடியாது. ஆனால் என்றாவது ஒருநாள் அந்த தொழில்நுட்பங்களை பார்ப்போம் என நம்பிக்கொண்டிருப்போம். அது போல இந்த தொழில்நுட்பம் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும் என நம்மை ஏங்க வைக்கும் 10 எதிர்கால தொழில்நுட்பங்கள் இதோ.

10) ராக்கெட் பூட்கள்

10) ராக்கெட் பூட்கள்

எளிதாக ஜெட்பேக் என இங்கு குறிப்பிடலாம். ஆனால் இயற்கையான உந்துசக்தி, அதிக கனமாக பின்புற பை, கால்களை எரித்துவிடும் பயம் போன்றவற்றுடன் ஒப்பிடும் போது, ராக்கெட் பூட் மேம்பட்டது. அயர்ன் மேன் படத்தில் காட்டியது போல, குழந்தைகள் அணிவது போன்ற சாதாரண ஹூ தான். ஆனால் அதன் பின்புறம் உள்ள சிறிய கருவியின் மூலம் பறந்துகொண்டே இருக்கலாம்!

9)யுனிவர்சல் டிரான்ஸ்லேட்டர்

9)யுனிவர்சல் டிரான்ஸ்லேட்டர்

நம்மை சுற்றியுள்ளவர்கள் பேசும் மொழியிலேயே நாமும் உடனடியாக பேசினால் எவ்வளவு சிறப்பாக இருக்கும். மற்ற கலாச்சாரம் மற்றும் பண்பாடுகள் ஆராயும் கடினமான மொழியியல் ஆய்வுகளை ஆண்டுகணக்கில் இனி செய்ய தேவையில்லை என நினைத்தால் அது தவறு. நாங்கள்இங்கு கேப்டன் கிரிக் பற்றி தான் கூறினோம்!

8)பவர் லேஸ் நைக்ஸ்

பேக் டூ பியூச்சர் திரைப்படங்களில் நிகழ்காலத்தில் இல்லாத பல அனுமானமான எதிர்கால தொழில்நுட்பங்களை பார்த்திருப்போம். அதில் ஒன்று தான் பவர் லேஸ். காலில் ஷூவை அணிந்து லேஸை கட்டுவதற்குள் நாம் படும் கஷ்டத்தை பார்த்து ,தானாக இறுக்கிக்கொள்ளும் எதிர்கால லேஸ் தான் இது!

7)நியூரலைசர்

7)நியூரலைசர்

மென் இன் பிளேக் படத்தை பார்த்தவர்கள் இந்த கருவியை அவ்வளவு சீக்கரம் மறந்திருக்க முடியாது. ஏதாவது இரகசிய ஆபரேசனை பொதுமக்கள் பார்த்துவிட்டால், உடனை கண்ணாடியை அணிந்துகொண்டு, அக்கருவியை இயக்கினால், மற்ற அனைவருக்கும் அனைத்தும் மறந்துவிடும்.

6) டிரான்ஸ்போர்ட்டர்

6) டிரான்ஸ்போர்ட்டர்

'ஸ்டார் டிரக்: தி மோசன் பிக்சர்' படத்தில் வருவது போன்ற தொழில்நுட்பத்தை நிச்சயம் பயன்படுத்த வேண்டும்.அன்றாட வாழ்வில் போக்குவரத்திற்கு நாம் படும்பாடு விவரிக்க இயலாது. டிரான்ஸ்போர்ட்டர் மட்டும் வந்துவிட்டால், நீண்டதூர பயணங்கள் தேவையில்லை, விமானங்கள் தேவையில்லை, மின்தூக்கிகள் தேவையில்வை.

5)ஹெட்ஜேக் லேர்னிங் டெக்னாலஜி

நாம் பல ஆண்டுகளாக கற்ற கல்வியை,தலையின் பின்புறம் உள்ள போர்ட் வாயிலாக ஒரு கருவியை நுழைப்பதன் மூலம் பெற்றுவிடமுடியுமா என நினைத்துப்பாருங்கள். தி மேட்ரிக்ஸ் படத்தில் காட்டப்பட்டுள்ள இந்த தொழில்நுட்பம் வித்தியாசமானதாக இருந்தாலும், அதி-மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் என்பதில் சந்தேகமே இல்லை.

4)தி வாட்-இப் மிஷின்

4)தி வாட்-இப் மிஷின்

நாம் நினைத்து பார்க்கும் விசயங்களை எல்லாம் 'வாட்-இப்'என சரியாக கணித்து, பல சூழ்நிலைக்கு ஏற்ப ஒரு துல்லியமான பதிலை கூறும் தொழில்நுட்பம் தான் இந்த இயந்திரம் .

3)ஹோலோடெக்

3)ஹோலோடெக்

ஹோலோடெக் என்பது புனையப்பட்ட ஸ்டார் டிரக் யுனிவர்ஸ்சில், ஸ்டார்ஷிப் மற்றும் ஸ்டார்பேஸ் போன்றவற்றில் உள்ள உண்மையானதை போலவே உருவாக்கப்பட்ட ஒரு வசதி ஆகும். இந்த ஹோலோடெக் என்ற வார்த்தை முதன்முதலில் ஸ்டார்டிரக் யுனிவர்ஸ் பைலைட் எபிசோடில் பயன்படுத்தப்பட்டது.

2)ரோபோட் ஃபால்ஸ்

2)ரோபோட் ஃபால்ஸ்

ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு வகையில் ரோபோ-மனித ஊடாடல் நடந்துகொண்டு தான் உள்ளது. ஆனால் நமக்கு ஆர்2, வால்-ஈ, ஜானி5அல்லது பெண்டர் போன்ற ரோபோட்களின் துணை தான் தேவை. இவை தான் ஏரோபிக்ஸ் கற்றுக்கொடுக்கும், ஸ்வெட்டர்கள் விற்கும் மற்றும் நாம் மருந்துகள் எடுத்துக்கொள்ள நியாபகப்படுத்தும்.

1)ஹோவர்போர்டு

1)ஹோவர்போர்டு

80கள், 90களில் 'பேக் டூ தி ப்யூச்சர்' படம் வெளியான போது ஹோவர்போர்டுகள் பிரபலத்தின் உச்சியில் இருக்கும் போது, நம்மில் எத்தனை பேர் அது நிஜ வாழ்க்கையில் கிடைக்கும் என நினைத்திருப்போம். ஆம் தற்போது அவை உருவாகிக்கொண்டுள்ளது, வரும் கிறித்துமஸின் போது வெளியாகவுள்ளது.

Best Mobiles in India

English summary
10 Futuristic Technologies We Wish Existed Right Now: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X