Home
News

ஓடும் லாரியை துப்பாக்கியுடன் சேஸ் செய்து 10 கோடி மதிப்புடைய போன்கள் கொள்ளை! சிக்கியது எப்படி?

திரைப்படத்தில் வரும் சேசிங் காட்சி போல், ஓடும் கண்டைனர் லாரியை மற்றொரு லாரி மூலம் ஓவர்டேக் செய்து துப்பாக்கியை காட்டி சுமார் 10 கோடி மதிப்பிலான ஸ்மார்ட்போன்களை கொள்ளையடித்த கும்பல் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளது. இந்த ஒட்டுமொத்த திட்டத்திற்கும் ஸ்கெட்ச் போட்டு கொடுத்தது ஒரு என்ஜினீயர் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த கும்பலை காவல்துறையினர் எப்படி மடக்கிப் பிடித்தார்கள் தெரியுமா?

10 கோடி ரூபாய் மதிப்பிலான ஸ்மார்ட்போன்கள் கொள்ளை

10 கோடி ரூபாய் மதிப்பிலான ஸ்மார்ட்போன்கள் கொள்ளை

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஸ்மார்ட்போன் நிறுவனத்திலிருந்து லாரி மூலம் மும்பைக்கு கொண்டுசெல்லபட்ட சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பிலான கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த லாரி கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி, ஆந்திர மாநிலத்தின் நகரி அருகே சென்ற பொழுது, மற்றொரு லாரியில் வந்த கொள்ளையர்கள் துப்பாக்கியைக் காட்டி லாரியை வழிமறித்து ஓட்டுனரை மிரட்டி, ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன்களையும் சூறையாடிச் சென்றுள்ளனர்.

நெடுஞ்சாலையில் ஓடும் வாகனங்களை துப்பாக்கி காட்டி கொள்ளை

நெடுஞ்சாலையில் ஓடும் வாகனங்களை துப்பாக்கி காட்டி கொள்ளை

இதுதொடர்பாக ஆந்திர போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தியதில், மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் பகுதியைச் சேர்ந்த கஞ்சர்பட்ஸ் என்ற கொள்ளைக் கும்பல் இதுபோன்ற கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் ஓடும் வாகனங்களை ஓவர்டேக் செய்து, துப்பாக்கியைக் காட்டி, கண்டைனர் பூட்டை உடைத்துப் பல திருட்டுகளை இந்த கும்பல் செய்துள்ளது தெரியவந்துள்ளது.

கஞ்சர்பட்ஸ் கும்பல்

கஞ்சர்பட்ஸ் கும்பல்

இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் உடனடியாக தேவாஸுக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கஞ்சர்பட்ஸ் கும்பலின் வங்கிப் பரிவர்த்தனைகளை ஆராய்ந்த போலீசாருக்கு இந்த கும்பல் தான் ஸ்மார்ட்போன்களை கொள்ளையடித்துள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஒட்டுமொத்த கொள்ள சம்பவத்திற்கும் ராம் காட் என்ற சாஃப்ட்வேர் என்ஜினீயர் உறுதுணையாக இருந்து, ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்து மூளையாக இருந்து செயல்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பூனேவில் சிக்கிய ஸ்மார்ட்போன்கள்

பூனேவில் சிக்கிய ஸ்மார்ட்போன்கள்

கண்டைனர் லாரியிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள் கடப்பா, பெல்லாரி வழியாக மகாராஷ்டிராவிற்குள் கொண்டுசெல்லப்பட்டுள்ளதையும் போலீசார் உறுதி செய்துள்ளனர். ராம் காட், ரோஹித் ஜல்லா, அங்கித் ஜான்ஜா ஆகிய கொள்ளையர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கொள்ளையடிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள் புனேவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Best Mobiles in India

English summary
10 Crore Worth Smartphones Robbed From Running Container On Highway : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X