கைரேகை ஸ்கேனர் கொண்ட டாப் 10 ஸ்மார்ட்போன்கள்..!!

Written By:

ஸ்மார்ட்போனில் பாதுபாப்புக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் அளிப்பவரா நீங்கள், அப்படியானால் கைரேகை ஸ்கேனர் கொண்ட ஸ்மார்ட்போன் தான் உங்களுக்கு சரியானதாக இருக்கும்.

இன்று வெளியாகும் அனைத்து உயர் ரக ஸ்மார்ட்போன்களிலும் கைரேகை ஸ்கேனர் அவசியமான ஒன்றாக இருக்கும் நிலையில் இதே அம்சத்தினை சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் கையில் எடுத்திருக்கின்றன என்று தான் கூற வேண்டும். இவை குறைந்த விலையில் கிடைப்பது தான் குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

அந்த வகையில் சரியான விலையில் கைரேகை ஸ்கேனர் கொண்ட ஸ்மார்ட்போன்களில் தலைசிறந்த டாப் 10 கருவிகளின் பட்டியலை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஹூவாய் ஹானர் 7

ஹூவாய் ஹானர் 7

5.2 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் ஹானர் 7 கருவியினி பின்புறம் கைரேகை ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளது. ஆக்டா கோர் கிரின் 935 பிராசஸர், 3ஜிபி ரேம் கொண்டிருக்கும் இந்த கருவி எமோஷன் யுஐ3.1 சார்ந்த ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.0 மூலம் இயங்குகின்றது.

சோனி எக்ஸ்பீரியா இசட் 5 காம்பாக்ட்

சோனி எக்ஸ்பீரியா இசட் 5 காம்பாக்ட்

எக்ஸ்பீரியா இசட் 5 கருவியின் அடுத்த மாடல் தான் காம்பாக்ட் என்றாலும் இரு கருவிகளிலும் ஒரே ஹார்டுவேர் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஒரே பிராசஸர் மூலம் சக்தியூட்டப்படும் இந்த கருவியானது குவால்காம் ஸ்னாப்டிராகன் ஆக்டா கோர் பிராசஸர் மற்றும் அல்ட்ரா-ஃபாஸ்ட் 4ஜி எல்டிஈ வேகம் வழங்கும்.

ஒன் ப்ளஸ் 2

ஒன் ப்ளஸ் 2

5.5 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே கொண்டிருக்கும் இந்த கருவி ஸ்னாப்டிராகன் 810 சிப்செட் மற்றும் 4 ஜிபி ரேம் கொண்டிருக்கின்றது.

மெய்ஸூ எம்எக்ஸ்5

மெய்ஸூ எம்எக்ஸ்5

மெட்டல் வடிவமைப்பு கொண்ட மெய்ஸூ கருவியின் ஹோம் பட்டனில் கைரேகை ஸ்கேனர் பொருத்தப்பட்டுள்ளது. இதோடு 5.5 இன்ச் சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி திரையும் கொண்டிருக்கின்றது.

ஒப்போ ஆர்7 ப்ளஸ்

ஒப்போ ஆர்7 ப்ளஸ்

பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஒப்போ ஆர்7 கருவியில் சரியான சிறப்பம்சங்கள் மற்றும் கைரேகை ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளதோடு 6 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளேவும் வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ8

சாம்சங் கேலக்ஸி ஏ8

5.7 இன்ச் சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே 1920*1080 பிக்சல் ரெசல்யூஷன் மற்றும் கைரேகை ஸ்கேனர் கொண்டிருப்பதோடு குவால்காம் ஸ்னாப்டிராகன் எஸ்ஓசி கொண்டிருக்கின்றது.

சாம்சங் கேலக்ஸி ஆல்பா

சாம்சங் கேலக்ஸி ஆல்பா

4.7 இன்ச் சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே 1280*720 பிக்சல் ரெசல்யூஷன் ஆக்டா கோர் எக்சைனோஸ் பிராசஸர், மற்றும் 2ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி நோட் 5

சாம்சங் கேலக்ஸி நோட் 5

தொடுதிரை சார்ந்த கைரேகை ஸ்கேனர் கொண்ட நோட் 5 கருவியில் 5.7 இன்ச் க்யூஎச்டி சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே 2560*1440 பிக்சல் ரெசல்யூஷன் வழங்கப்பட்டுள்ளது.

எச்டிசி எம்9+

எச்டிசி எம்9+

டிஸ்ப்ளேவுக்கு கீழ் வழங்கப்பட்டிருக்கும் கைரேகை ஸ்கேனர் சரியான வேகத்தில் இயங்குவதோடு 5.2 இன்ச் குவாட் எச்டி டிஸ்ப்ளே மற்றும் 1440*2560 பிக்சல் ரெசல்யூஷனும் கொண்டிருக்கின்றது.

சோனி எக்ஸ்பீரியா இசட்5 ப்ரீமியம்

சோனி எக்ஸ்பீரியா இசட்5 ப்ரீமியம்

4கே ரெசல்யூஷன் டிஸ்ப்ளே கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையுடன் 5.5 இன்ச் திரை மற்றும் பவர் பட்டன் அருகே கைரேகை ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
10 Best Smartphones With Fingerprint Sensor for smartphone security. Read More in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot