Home
News

இந்தியாவில் மக்கள் போட்டி போடு வாங்கிய டாப் 10 போன்கள் இதானா? டாப்பர் யார் தெரியுமா?

என்ன தான் ஆண்டு தோறும் பல ஸ்மார்ட்போன் மாடல்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டாலும், சில குறிப்பிட்ட மாடல்கள் மட்டுமே பெஸ்ட் ஸ்மார்ட்போன் மாடல்களாக மக்களை கவர்ந்து அதிக அளவில் விற்பனையாகின்றன. அந்த வகையில் கடந்த 2022ம் ஆண்டில் பெஸ்ட் ஸ்மார்ட்போன்களாக திகழ்ந்த மாடல்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம்.

கவுண்டர்பாய்ண்ட் ரிசர்ச் (Counterpoint Research) படி , ஐபோன் 13 (iPhone 13) ஆனது செப்டம்பர் 2021 இல் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் ஆகஸ்ட் 2022 வரை ஒவ்வொரு மாதமும் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போனாக இருந்ததாக கூறப்பட்டுள்ளது. iPhone 14 தொடரின் வெளியீட்டிற்குப் பிறகு விலைக் குறைப்புகள் iPhone 13 இன் விற்பனையை மேலும் அதிகரித்தது ஒரு காரணமாகும்.

இந்தியாவில் மக்கள் போட்டி போடு வாங்கிய டாப் 10 போன்கள் இதானா?

2022ல் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் மாடல்கள் இப்போது 2023 ஆம் ஆண்டிலும் சிறந்த ஸ்மார்ட்போன் மாடலாக திகழ்கின்றன. இன்னும் சில மாடல்கள் இப்போது சிறந்த பரிந்துரையாக இருக்கின்றன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் இந்த பெஸ்ட் டாப் 10 மாடல்கள் இன்னும் குறைவான விலையில் வாங்க கிடைக்கின்றன.

கடந்த ஆண்டில் பெஸ்டாக கருதப்பட்ட டாப் 10 ஸ்மார்ட்போன் மாடல்களின் பட்டியலை இங்கு தொகுத்துள்ளோம்.
1. ஆப்பிள் ஐபோன் 13 (Apple iPhone 13)
2. ஆப்பிள் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் (Apple iPhone 13 Pro Max)
3. ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் (Apple iPhone 14)
4. சாம்சங் கேலக்ஸி ஏ13 (Samsung Galaxy A13)
5. ஆப்பிள் ஐபோன் 13 ப்ரோ (Apple iPhone 13 Pro)
6. ஆப்பிள் ஐபோன் 12 (Apple iPhone 12)
7. ஆப்பிள் ஐபோன் 14 (Apple iPhone 14)
8. ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ (Apple iPhone 14 Pro)
9. ஆப்பிள் ஐபோன் எஸ்இ 2022 (Apple iPhone SE 2022)
10. சாம்சங் கேலக்ஸி ஏ03 (Samsung Galaxy A03)

இந்தியாவில் மக்கள் போட்டி போடு வாங்கிய டாப் 10 போன்கள் இதானா?

முதன் முறையாக, ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் (iPhone 13 Pro Max) ஆனது 2022 இல் ப்ரோ பதிப்பை விட அதிக யூனிட்களை விற்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஐபோன் 14 மேக்ஸ் ப்ரோ டைனமிக் ஐலேண்ட் போன்ற புதிய அம்சங்களின் காரணமாக மூன்றாவது இடத்தைப் பிடித்தது. இதற்கான காரணம், இவை புதிய மாடல்களாக அறிமுகம் செய்யப்பட்டு சற்று அதிக விலையை கொண்டிருந்தன.

பட்டியலில் உள்ள பழமையான மாடல் ஐபோன் 12 ஆகும். இது அமெரிக்கா, ஜப்பான் மற்றும் சீனாவில் தொடர்ந்து விற்பனையாகிறது. இது செயலில் உள்ள ஸ்மார்ட்போன் மாடல்களின் எண்ணிக்கை 2021 இல் 4,200 இல் இருந்து 2022 இல் 3,600 ஆக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு புதிய ஸ்மார்ட்போன் வாங்கினீர்களா? கீழே உள்ள கருத்துகளில் அது எது என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

இந்த பட்டியலின் அடிப்படையை வைத்து பார்க்கையில், ஆப்பிள் மற்றும் சாம்சங் பிராண்டின் ஸ்மார்ட்போன்களை தான் மக்கள் அதிகமாக விரும்பி வாங்கி இருக்கின்றனர். விலை அதிகமாக இருந்தாலும், இந்திய வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு சிறப்பு விற்பனையிலும் ஆப்பிள் ஐபோன் சாதனங்களை ஆர்டர் செய்து வாங்கி இருக்கின்றனர் என்பதை கவுண்டர் பாயிண்ட் அறிக்கை குறிப்பிடுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
10 Best-Selling Smartphones In 2022 Still Famous Mobiles in 2023 In India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X