Home
News

ஒரே ரீசார்ஜ்.. ஓஹோன்னு வாழ்க்கை.. கம்மி விலையில் 365 நாட்களுக்கு SMS, வாய்ஸ் கால், டேட்டா.. கலக்கும் BSNL!

ஒவ்வொரு 28 நாட்களுக்கும் அல்லது ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் ஒருமுறை ரீசார்ஜ் செய்ய முடியாத பட்ஜெட் வாசிகளுக்கு.. நியாயமான விலையில், நேர்மையான நன்மைகளை வழங்குவது எப்படி என்பதை பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்திடம் இருந்து தான் மற்ற தனியார் டெலிகாம் நிறுவனங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்!

ஏனென்றால், அப்படியான 2 திட்டங்கள் அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் ஆப்ரேட்டர் ஆன பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் உள்ளன. இவ்விரு திட்டங்களுமே கனவில் கூட நினைத்து பார்க்காத, மிகவும் மலிவான விலையில் ஒரு ஆண்டு முழுவதும் எஸ்எம்எஸ்கள் (SMS), வாய்ஸ் கால்கள் (Voice Calls) மற்றும் டேட்டா (Data) நன்மையை வழங்குகின்றன!

BSNL: கம்மி விலையில் 365 நாட்களுக்கு SMS, வாய்ஸ் கால், டேட்டா!

அதென்ன திட்டங்கள்? நாம் இங்கே பிஎஸ்என்எல்-ன் ரூ.1198 மற்றும் ரூ.1499 திட்டங்களை பற்றித்தான் பேசிக்கொண்டு இருக்கிறோம். இவ்விரு ப்ரீபெயிட் (Prepaid) திட்டங்களும் பிஎஸ்என்எல்-ன் பிளான் வவுச்சர்கள் (Plan Vouchers - PV) ஆகும். முதலாவது 365 நாட்கள் செல்லுபடியாகும்; இரண்டாவது திட்டம் 336 நாட்கள் செல்லுபடியாகும்.

மிகவும் குறைந்த செலவில் ஓராண்டு முழுவதும் அல்லது 365 நாட்களுக்கும்.. போதுமான வாய்ஸ் கால்கள், மிதமான டேட்டா நன்மைகள் மற்றும் தேவைக்கு ஏற்ற எஸ்எம்எஸ் நன்மைகளை பெற விரும்பும் பிஎஸ்என்எல் பயனர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களின் விரிவான நன்மைகள் இதோ:

பிஎஸ்என்எல் பிளான் வவுச்சர் ரூ.1198 திட்டத்தின் நன்மைகள்: ரீசார்ஜ் தேதியிலிருந்து 12 மாதங்கள் அல்லது 365 நாட்கள் செல்லுபடியாகும் இந்த பிஎஸ்என்எல் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் 300 நிமிடங்களுக்கான எனி-நெட் வாய்ஸ் கால்கள் (Any-net voice calls) அணுக கிடைக்கும்

கூடவே ஒவ்வொரு மாதமும் 3ஜிபி அளவிலான ஹைஸ்பீட் டேட்டாவும் (3GB High-speed Data) கிடைக்கும். கடைசியாக, இந்த திட்டம் செல்லுபடியாகும் முழு 12 மாத காலத்திற்கும், ஒவ்வொரு மாதமும் 30 எஸ்எம்எஸ்கள் (30 SMS) அணுக கிடைக்கும். இன்னும் சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் பிஎஸ்என்எல் பிளான் வவுச்சர் ரூ.1198 திட்டத்தின் நன்மைகள் ஆனது ஒவ்வொரு மாதமும் புதுப்பிக்கப்படும்!

ஒருவேளை ரூ.1198 திட்டத்தின் கீழ் கிடைக்கும் மிகவும் குறைவான வாய்ஸ் கால் நன்மையானது உங்களுக்கு போதாது என்று நினைத்தால், அன்லிமிடெட் வாய்ஸ் கால் (Unlimited Voice Call) நன்மைகளுடன் வரக்கூடிய இன்னொரு லாங் வேலிடிட்டி பிளான் (Long Validity Plan) ஆன ரூ.1,499-ஐ நீங்கள் கருத்தில் கொள்ளலாம்.

பிஎஸ்என்எல் பிளான் வவுச்சர் ரூ.1499 திட்டத்தின் நன்மைகள்: முன்னரே குறிப்பிட்டபடி, இது 336 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வருகிறது. முன்னதாக பார்த்த ரூ.1198-ஐ விட குறைவான செல்லுபடியாகும் காலத்தை கொண்டிருந்தாலும் கூட, இந்த திட்டம் மிகவும் ஈர்க்கக்கூடிய நன்மைகளை வழங்குகிறது.

ரூ.1499 திட்டமானது வரம்பற்ற வாய்ஸ் கால்களை வழங்குகிறது. இதுதவிர்த்து, இந்த திட்டம் செல்லுபடியாகும் 336 நாட்களுக்கும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களையும் (100 SMS per day) பெறுவீர்கள். இருப்பினும் இந்த திட்டத்தின் டேட்டா நன்மையானது தினசரி அடிப்படையிலோ அல்லது மாதாந்திர அடிப்படையிலோ வரவில்லை. மாறாக இது 24ஜிபி என்கிற மொத்த டேட்டாவுடன் (24GB Total Data) வருகிறது.

அதாவது ரூ.1499 திட்டத்தின் கீழ் உங்களுக்கு மொத்தமாகவே 24ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும். ஒட்டுமொத்தமாக பார்த்தால், ரூ.1198-ன் டேட்டா நன்மையும் கூட குறைவாகத்தான் தெரியும். ஒவ்வொரு மாதமும் 3ஜிபி என்றால் 1 ஆண்டுக்கு மொத்தம் 36ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும். இருப்பினும் அது மாதாந்திர அடிப்படையில் கிடைக்கிறது; ரூ.1499ல் மொத்தமாக கிடைக்கிறது.

இந்த 2 பிஎஸ்என்எல் பிளான் வவுச்சர்களை ரீசார்ஜ் செய்வது எப்படி? ரூ.1198 மற்றும் ரூ.1499 ஆகிய இரண்டுமே பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் (BSNL Official Website) மற்றும் மொபைல் ஆப் (Mobile App) வழியாக ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். கூடவே அங்கீகரிக்கப்பட்ட ரீடெயில் ஸ்டோர்கள் மற்றும் ஆன்லைன் ரீசார்ஜ் தளங்கள் (Online Recharge Platforms) வழியாகவும் கூட அணுக கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
1 Recharge For 1 Year This BSNL Plan Gives Voice Calls Data SMS For 365 Days Validity For Just 1198
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X