Home
News

Google Pay, PhonePe கதை க்ளோஸ்.. இனி 100 ரூபாயோ 1000 ரூபாயோ.. வந்தது UPI பேமண்ட்க்கு 1% கட்டாய கேஷ்பேக்!

2 வகையான கேஷ்பேக் சலுகைகளை (Cashback Offers) முன்வைத்து.. கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற பிரபலமான யுபிஐ ஆப்களுக்கு நேரடி போட்டியாக, பெங்களூரை சேர்ந்த ஃபின்டெக் நிறுவனமான கிரெடிட்.பே அதன் புதிய யுபிஐ ஆப்பை (Kredit Pe UPI App) அறிமுகம் செய்துள்ளது.

பயனர்களுக்கு தடையற்ற கட்டண செயல்முறையை (Seamless payment process) வழங்குவதன் மூலம் யுபிஐ அனுபவத்தை மேம்படுத்துவதும் மற்றும் பயனர்கள் செய்யும் அன்றாட செலவுகளுக்கு கட்டாய வெகுமதி (Rewarding for all everyday spending) அளிப்பதுமே கிரெடிட்.பே யுபிஐ ஆப்பின் முக்கிய நோக்கமாகும் என்று கிரெடிட்.பே நிறுவனம் தெரிவித்துள்ளது.

வந்தது எல்லா UPI பேமண்ட்-க்கும் 1% கேஷ்பேக்!

கிரெடிட்.பே யுபிஐ ஆப்பில் ஸ்கேன் அண்ட் பே (scan and pay), தொடர்ச்சியான கட்டணங்களுக்கான யுபிஐ ஆட்டோபே (UPI Autopay for recurring payments) மற்றும் ரூபே கிரெடிட் கார்டுகளை இணைக்கும் திறன் (Ability to link RuPay credit cards) போன்ற அம்சங்களும் உள்ளன

கிரெடிட்.பே யுபிஐ ஆப் வழியாக கிடைக்கும் 2 வகையான கேஷ்பேக் சலுகைகளை பொறுத்தவரை.. கிரெடிட்.பே யுபிஐ ஆப் வழியாக செய்யப்படும் அனைத்து யுபிஐ பரிவர்த்தனைகளுக்கும் 1% கேஷ்பேக் கிடைக்கும் மற்றும் ரூபே கிரெடிட் கார்டை பயன்படுத்தி செய்யப்படும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 2% கேஷ்பேக் கிடைக்கும் என்றும் கிரெடிட்.பே நிறுவனம் அறிவித்துள்ளது.

கிரெடிட்.பே யுபிஐ ஆப் ஆனது தற்போது கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) வழியாக ஆண்ட்ராய்டு (Android) பயனர்களுக்கும், ஆப்பிள் ஆப் ஸ்டோர் (Apple App Store) வழியாக ஐஓஎஸ் (iOS) பயனர்களுக்கும் டவுன்லோட் / இன்ஸ்டால் செய்ய கிடைக்கிறது.

கிரெடிட்.பே யுபிஐ ஆப் வழியாக நீங்கள் பெற்ற கேஷ்பேக்கை, பிளிப்கார்ட் (Flipkart), அமேசான் (Amazon), ஸ்விக்கி (Swiggy), ஜோமோடோ (Zomato) மற்றும் பிற பிரபலமான பிராண்டுகளின் தளங்களில் தள்ளுபடிகளாக ரீடீம் செய்துகொள்ள முடியும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது

கூடுதல் கேஷ்பேக் மற்றும் பிரத்யேக பலன்களை பெற, கிரெடிட்.பே யுபிஐ ஆப் உடன் ரூபே கிரெடிட் கார்டுகளை இணைப்பதன் மூலம் பயனர்கள் தங்கள் வெகுமதிகளை அதிகரிக்க முடியும். நினைவூட்டும் வண்ணம் கடந்த ஆகஸ்ட் மாதம் தான், கிரெடிட்.பே நிறுவனமானது எஸ்பிஎம் கிரெடிட்.பே கிரெடிட் கார்ட்டை (SBM Kredit.Pe credit card) அறிமுகப்படுத்தியது, இது ரூ.2,000 ஃபிக்ஸடு டெப்பாசிட் (₹2,000 fixed deposit) உள்ள அனைவருக்கும் கிடைக்கும்.

எஸ்பிஎம் கிரெடிட்.பே கிரெடிட் கார்டின் முதன்மை அம்சங்களில் ஒன்று - அதன் கேஷ்பேக் அமைப்பு (Cashback System) ஆகும். பயனர்கள் எதை வாங்குகிறார்கள் என்பதை பொருட்படுத்தாமல், எஸ்பிஎம் கிரெடிட்.பே கிரெடிட் கார்டு மூலம் செய்யப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனையிலும் பயனர்கள் 3% கேஷ்பேக்கை (3% Cashback) பெறலாம்.

மேலும் முன்னரே குறிப்பிட்டபடி கிரெடிட்.பே மொபைல் ஆப் மூலம் நடத்தப்படும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு, பயனர்கள் 2% கேஷ்பேக்கை பெறுவார்கள். கூடுதலாக, அனைத்து ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கும் 1% கேஷ்பேக்கும் கிடைக்கும். இந்த கேஷ்பேக்களை அமேசான் (Amazon), ஸ்விக்கி மற்றும் பிளிப்கார்ட் போன்ற முக்கிய தளங்களில் 5% முதல் 10% வரையிலான தள்ளுபடியாக ரீடீம் செய்யலாம்.

சமீபத்தில் பஜாஜ் ஃபின்சர்வ் (Bajaj Finserv) நிறுவனமானது, டிஜிட்டல் பேமெண்ட்டுகளுக்கான ஜீரோ-சார்ஜ் யுபிஐ பரிவர்த்தனைகளை (Zero Charge UPI Transactions) அறிமுகப்படுத்தியதும் கூட இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும் பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனமானது மற்ற யுபிஐ ஆப்களுக்கான போட்டியாளராக உருமாற யுபிஐ லைட் பேமெண்ட் ஆப்ஸ், யுபிஐ பே இந்தியா சேவை மற்றும் பீம் யுபிஐ (BHIM UPI) ஒருங்கிணைப்புகளையும் செய்துள்ளது.

Best Mobiles in India

English summary
1 Percent Cashback on All Transactions RuPay Credit Card Link and more in Kredit Pe UPI App
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X