சிலிண்டர், பெட்ரோல், கரண்ட் பில்லுக்கு கட்டாய கேஷ்பேக்! Paytm - RBI பஞ்சாயத்துக்கு நடுவே ஒரு அதிரடி அறிவிப்பு!
ஆர்பிஐ (RBI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவானது, பிப்ரவரி 29 ஆம் தேதிக்கு பின்னர் பேடிஎம் (Paytm) சேவைகளை பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில் பீம் ஆப் (BHIM App) ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
என்சிபிஐ (NCPI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் நேஷனல் பேமண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (National Payments Corporation of India) உருவாக்கிய பணபரிமாற்ற ஆப் ஆன பீம், ஒரு புதிய டைம் லிமிடெட் கேஷ்பேக் ஆஃபரை (Time Limited Cashback Offer) அறிவித்துள்ளது.

பீம் ஆப் அறிவித்துள்ள கேஷ்பேக் சலுகையின் கீழ் என்னென்ன பேமண்ட்டுகள் மற்றும் பில்களுக்கு கேஷ்பேக் கிடைக்கும்? எவ்வளவு கேஷ்பேக் கிடைக்கும்? இந்த சலுகை எந்த தேதியில் முடிவடையும்? உங்களிடம் பீம் ஆப்பின் லேட்டஸ்ட் வெர்ஷன் (BHIM App's Latest Version) இருப்பது ஏன் முக்கியம்? போன்ற விவரங்கள் இதோ:
பீம் ஆப் அறிவித்துள்ள இந்த கேஷ்பேக் ஆஃபரானது, மார்ச் 31 ஆம் தேதி வரை அணுக கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கேஷ்பேக் சலுகைக்கு தகுதிபெற, பீம் ஆப் பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் உள்ள பீம் ஆப்பை, வெர்ஷன் 3.7 அல்லது அதற்கு மேற்பட்ட வெர்ஷனுக்கு அப்டேட் (Update) செய்திருக்க வேண்டும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

உணவு மற்றும் பயணம் (Food and Travel) தொடர்பான கட்டணங்களுக்கு எவ்வளவு கேஷ்பேக் கிடைக்கும்? உணவு மற்றும் பயணம் தொடர்பான கட்டணங்களுக்கு, ரூ.100-க்கு மேல் பணப் பரிமாற்றம் செய்தால், ரூ.30 பிளாட் கேஷ்பேக் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பயணம் தொடர்பான செலவின்கீழ், ரயில்வே டிக்கெட் முன்பதிவுகள், டாக்சிகள், கேப்கள் மற்றும் பேருந்து டிக்கெட்டுகள் போன்ற பல்வேறு கட்டணங்கள் அடங்கும்.
இந்த சலுகையின் கீழ் ஒவ்வொரு பயனரும் அதிகபட்சமாக ரூ.150 கேஷ்பேக்கை பெற முடியும். மேலும் ரூ.100 க்கும் அதிகமான பரிவர்த்தனைகளுக்கு 5 முறை மட்டுமே ரீடிம் செய்ய முடியும். மேலும் கேஷ்பேக் ஆக கிடைக்கும் பணம் நேரடியாக பீம் ஆப் உடன் இணைக்கப்பட்டுள்ள, பயனரின் முதன்மை வங்கி கணக்கில் (Primary Bank Account Linked with BHIM App) வரவு வைக்கப்படும்.

எரிபொருள் மற்றும் மின்சார கட்டணம் (Fuel and Electricity Bill) செலுத்தினால் எவ்வளவு கேஷ்பேக் கிடைக்கும்? பீம் ஆப் ஆனது பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி உட்பட அனைத்து எரிபொருள் கட்டணங்களுக்கும் 1 சதவீத கேஷ்பேக் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. எரிபொருளுக்கான பணத்தை பீம் ஆப் யுபிஐ-ஐ பயன்படுத்துவதன் வழியாக கேஷ்பேக்கை பெறலாம்.
மேலும் குறைந்தபட்ச பரிவர்த்தனை தொகையாக ரூ.100 இருக்கும் பட்சத்தில் மின்சாரம், தண்ணீர் மற்றும் எரிவாயு சிலிண்டர் பில்கள் (Gas Cylinder Bill) போன்ற பேமண்ட்களுக்கும் 1 சதவீத கேஷ்பேக் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கேஷ்பேக்கும் கூட நேரடியாக பீம் ஆப் உடன் இணைக்கப்பட்டுள்ள, பயனரின் முதன்மை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
ரூபே கிரெடிட் கார்டுகளுக்கான (Rupay credit cards) கேஷ்பேக் சலுகை: இந்த சலுகையை பெற, பயனர்கள் தங்கள் பீம் ஆப் உடன் இணைக்கப்பட்ட ரூபே கிரெடிட் கார்டை வைத்திருக்க வேண்டும். இதன்கீழ் ரூ.100 க்கு மேல் செய்த முதல் மூன்று பரிவர்த்தனைகளுக்கு ரூ.100 பிளாட் கேஷ்பேக் கிடைக்கும். கூடுதலாக இந்த ஆஃபர் காலத்தின் முதல் மாதத்தில் ரூ.200க்கு மேல் செய்யப்படும் அடுத்த ஐந்து பரிவர்த்தனைகளுக்கு ரூ.30 கேஷ்பேக்கும் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








