ரெடியா இருங்க! 30 நாட்களில் 10 லட்சம் பேராம்.. இலக்கு வைத்து தூக்கும் Airtel

|

ஏர்டெல் இன் 4ஜி வாடிக்கையாளர்கள் 5ஜி சேவையை அனுபவிக்க விரும்பினால் தங்களது சிம் கார்ட் மற்றும் ப்ரீபெய்ட் திட்டத்தை மேம்படுத்த வேண்டிய தேவையில்லை. 5ஜி போன் மட்டும் இருந்தாலே ஏர்டெல் இன் 5ஜி சேவையை அனுபவிக்கலாம். இதில் ஒரே ஒரு நிபந்தனை என்னவென்றால் ஏர்டெல் 5ஜி சேவைக் கிடைக்கும் பகுதியில் நீங்கள் இருக்க வேண்டும் என்பது மட்டும் தான். ஏர்டெல் இன் 5ஜி வேகமானது 4ஜியை விட 20 முதல் 30 மடங்கு அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

30 நாட்களுக்குள் 1 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள்

30 நாட்களுக்குள் 1 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள்

பாரதி ஏர்டெல் தனது 5ஜி நெட்வொர்க்கை அறிமுகப்படுத்திய 30 நாட்களுக்குள் அதன் 5ஜி சேவையை 1 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் அனுபவித்துள்ளதாக அறிவித்துள்ளது.

டெல்லி, மும்பை, வாரணாசி, சென்னை, பெங்களூரு, சிலிகுரி, ஹைதராபாத் மற்றும் நாக்பூர் ஆகிய 8 நகரங்களில் ஏர்டெல் இன் 5ஜி ப்ளஸ் சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

5ஜி பிளஸ் அறிமுகமான 30 நாட்களுக்குள் 1 மில்லியனுக்கும் அதிகமான 5ஜி வாடிக்கையாளர்கள் என்பது ஆச்சரியமளிக்கும் வகையில் இருக்கிறது.

தொலைநோக்குப் பார்வையுடன் ஏர்டெல்

தொலைநோக்குப் பார்வையுடன் ஏர்டெல்

பார்தி ஏர்டெல் CTO ரன்தீப் செகோன் இதுகுறித்து கூறுகையில், ஆரம்ப காலங்களிலேயே வாடிக்கையாளர்களிடம் கிடைக்கும் வரவேற்பு ஊக்கமளிக்கும் வகையில் இருக்கிறது. சில விதிவிலக்குகளைத் தவிர பெரும்பாலான 5ஜி ஸ்மார்ட்போன்களில் தற்போது ஏர்டெல் 5ஜி ப்ளஸ் அணுகக் கிடைக்கிறது. முழு நாடையும் 5ஜி சேவை சென்றடைவதற்கான தொலைநோக்குப் பார்வையுடன் ஏர்டெல் செயல்பட்டு வருகிறது.

5ஜி சேவை விலை என்ன?

5ஜி சேவை விலை என்ன?

நவம்பர் மாத நடுப்பகுதியில் ஐபோன் மாடல்களைத் தவிர அனைத்து 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கும் ஏர்டெல் 5ஜி ஆதரவு அளிக்கும் என ஏர்டெல் சிஇஓ கோபால் விட்டல் தெரிவித்துள்ளார். அடுத்த 6-9 மாதங்களில் 5ஜி இணைய சேவையிலன் விலை நிர்ணயம் குறித்து அறிவிப்பை ஏர்டெல் வெளியிடும் என சிஇஓ கோபால் விட்டல் தெரிவித்தார்.

89 சதவீதம் முன்னேறிய ஏர்டெல்

89 சதவீதம் முன்னேறிய ஏர்டெல்

ஏர்டெல் 4ஜி கட்டணத்தில் 5ஜி சேவைகளை வழங்குகிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று. ஆனால் அடுத்த 6-9 மாதங்களில் 5ஜி இணையத்தின் விலையை நிறுவனம் நிர்ணயம் செய்யும் என பாரதி ஏர்டெல் மூத்த அதிகாரி தெரிவித்தார். அதேபோல் பாரதி ஏர்டெல் இரண்டாவது காலாண்டின் நிகர லாபத்தில் 89 சதவீதம் முன்னேறி சாதனை படைத்திருக்கிறது.

எந்தெந்த போன்களில் ஏர்டெல் 5ஜி சேவை

எந்தெந்த போன்களில் ஏர்டெல் 5ஜி சேவை

5ஜி சேவையை பொறுத்தவரை சாம்சங் இன் 27 மாடல்களில் ஏர்டெல் 5ஜி கிடைக்கிறது. 17 மாடல்கள் 5ஜி சேவைக்கு தயாராக இருக்கிறது. சியோமியின் அனைத்து 33 மாடல்களுக்கும், ஒப்போவின் அனைத்து 14 மாடல்களிலும் ஏர்டெல் 5ஜி சேவை கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

இரண்டாவது இடத்தில் இருக்கும் ஏர்டெல்

இரண்டாவது இடத்தில் இருக்கும் ஏர்டெல்

ஜியோ அறிமுகமான குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி அடைந்தது. இரண்டாவது இடத்தில் இருக்கும் ஏர்டெல் தொடர்ந்து பல்வேறு சலுகைகளை வழங்கி ஜியோவுக்கு கடுமையான போட்டியை வழங்கி வருகிறது. வாடிக்கையாளர்களை தக்கவைக்கவும் அதிகரிக்கும் ஏர்டெல் தொடர் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி ஏர்டெல் வழங்கும் ஒரு சலுகை குறித்த விவரத்தை பார்க்கலாம்.

ஏர்டெல் பிளாக் திட்டம்

ஏர்டெல் பிளாக் திட்டம்

ஏர்டெல் பிளாக் திட்டத்தின் மூலம் பயனர்கள் டிடிஎச், லேண்ட்லைன், ஃபைபர் மற்றும் மொபைல் இணைப்பைப் பெறலாம். அதாவது ஒரே ரீசார்ஜ் திட்டத்தில் பயனர்கள் மற்றும் அவர்களது வீட்டுக்கு தேவையான மொத்த சலுகையும் பெற முடியும். அதேபோல் இந்த திட்டத்தில் நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் உள்ளிட்ட பல ஓடிடி நன்மைகளும் தொகுத்து வழங்கப்படுகிறது.

அனைத்து சலுகைகளும் ஒரே ரீசார்ஜ் திட்டத்தில்

அனைத்து சலுகைகளும் ஒரே ரீசார்ஜ் திட்டத்தில்

டிடிஎச், ஓடிடி, மொபைல் நெட், காலிங், பிராட்பேண்ட், ஃபைபர் என ஒவ்வொரு திட்டத்துக்கும் தனித்தனியாக சிறந்த ரீசார்ஜ் திட்டத்தை தேர்ந்தெடுப்பது சிரமம். ஒவ்வொன்றாக ஆராய்ந்து எந்த சேவைக்கு எது பெஸ்ட் என தேர்ந்தெடுப்பது கஷ்டம். இந்த சிரமத்தை நிவர்த்தி செய்யவே ஏர்டெல் தங்களது பயனர்களுக்கு பிளாக் திட்டத்தை வழங்குகிறது. இந்த ரீசார்ஜ் திட்டத்தில் ஓடிடி சந்தாவும் இலவசமாக வழங்கப்படுகிறது. கூடுதலாக டிடிஎச் சேவையும் கிடைக்கிறது. ஏர்டெல் பிளாக் திட்டமானது ரூ.699 முதல் ரூ.2999 வரையிலான விலையில் கிடைக்கிறது. இந்த அனைத்து திட்டங்களிலும் பல்வேறு சலுகைகள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

Best Mobiles in India

English summary
1 Million Airtel Users Got Airtel 5G Plus Access Within 30 Days: Here the Next Target

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X