ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் 1 Jio ரீசார்ஜ் திட்டம்! விலை ரூ.399 மட்டுமே! மிரளவிடும் அம்பானி தந்திரம்!
உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தனித்தனியாக ரீசார்ஜ் செய்கிறீர்களா? இது உங்களை கடுப்படையச் செய்கிறதா? உங்கள் பணத்தை அதிகமாக செலவடையைச் செய்கிறதா? உங்கள் செலவைக் குறைத்து, ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் கம்மி செலவில் ரீசார்ஜ் செய்ய வேண்டுமா? இந்த Jio திட்டத்தை பாருங்க.
ஆம், மக்களே தலைப்பைச் சரியாக தான் படித்தீர்கள். வெறும் ரூ.399 திட்டத்தை தேர்வு செய்வதன் மூலம் உங்கள் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் (அதிகப்படியாக 4 பேர் வரை) இந்த ஒரே ஒரு ரீசார்ஜ் திட்டத்தை ரீசார்ஜ் செய்து நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய திட்டத்தைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம் வாங்க.

ஜியோ நிறுவனம் இந்தியாவில் புதிய ஜியோ பிளஸ் ரூ.399 போஸ்ட்பெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு ரூ. 399 திட்டத்தைத் தேர்வு செய்து, 1 மெயின் இணைப்புடன் சேர்க்கப்படும் குடும்பத்தினரின் இணைப்பு ஒவ்வொன்றுக்கும் தலா ரூ. 99 விலையில், 3 குடும்ப உறுப்பினர்களை நீங்கள் இத்திட்டத்துடன் சேர்த்துக்கொள்ள முடியும்.
புதிய திட்டம் அனைத்து பயனருக்கும் வரம்பற்ற அழைப்பு நன்மை, வரம்பற்ற எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தின் மெயின் பயனருக்கு 75 ஜிபி டேட்டா ஒட்டுமொத்தமாக வழங்கப்படுகிறது. இந்த திட்டம் சில ஜியோ பயனர்களை குழப்பமடையச் செய்யலாம், காரணம், ஜியோவில் ஏற்கனவே ரூ.399 போஸ்ட்பெய்ட் திட்டம் உள்ளது. ஆனால், அது வெவ்வேறு நன்மைகளுடன் வருகிறது என்பது கவனிக்கத்தக்கது.
ஜியோ ரூ.399 என்ற பழைய திட்டத்தில், அதன் பயனர்களுக்குக் கூடுதல் OTT நன்மைகளுடன் அதிக நன்மைகளை வழங்குகிறது. ஆனால், இந்த பழைய திட்டத்தில் குடும்ப உறுப்பினர்களை உங்களால் ஆட்-ஆன் செய்ய முடியாது. ஜியோ இப்போது அதன் பயனர்களுக்காக பிரீமியம் ஜியோ பிளஸ் என்ற ரூ.699 திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டங்களின் விவரங்களை பார்க்கலாம்.

முன்பே சொன்னது போல, ஜியோவில் இருக்கும் ரூ. 399 போஸ்ட்பெய்ட் திட்டம் குடும்ப உறுப்பினர்களைச் சேர்க்க அனுமதிக்காத சாதாரண ரீசாஜ் திட்டமாக செயல்படுகிறது. புதிய ரூ.399 திட்டமானது குடும்பத் திட்டமாக வருகிறது. இதில் இலவச சோதனைக்குப் பிறகு, ஜியோ பயனர்கள் தலா 99 ரூபாய்க்கு மூன்று குடும்ப உறுப்பினர்களை சேர்க்கலாம். குறிப்பிட்டுள்ளபடி, நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு மாதந்தோறும் ரூ.696 வரை செலவாகலாம்.
மெயின் சிம் தவிர, ஆட்-ஆன் செய்யப்படும் மற்ற சிம்களில் ஒவ்வொரு மாதமும் 5ஜிபி டேட்டாவை நிறுவனம் வழங்குகிறது. முதன்மை சிம் வைத்திருப்பவருக்கு மட்டும் மாதம் தோறும் 75ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. நான்கு இணைப்புகளுக்கும் வரம்பற்ற அழைப்பு மற்றும் SMS நன்மைகள் கிடைக்கும். இது உண்மையில், பாக்கெட் சேவிங் திட்டமாகப் பார்க்கப்படுகிறது.
பழைய ஜியோ பிளஸ் ரூ.399 போஸ்ட்பெய்ட் திட்டம் அதன் பயனர்களுக்கு வரம்பற்ற அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ். நன்மை போன்றவற்றை வழங்குவதோடு, கூடுதலாக, இது 75 ஜிபி டேட்டாவையும் வழங்குகிறது. FUP-க்கு பிறகு 1ஜிபி டேட்டா ரூ.10 என்ற விலையில் கிடைக்கும். இந்த திட்டம் பயனர்களுக்கு இலவச நெட்ஃபிக்ஸ் மொபைல் மற்றும் அமேசான் பிரைம் சந்தாக்களையும் வழங்குகிறது.
ஜியோவின் புதிய ரூ.399 திட்டத்துடன், ஜியோ ரூ.699 மதிப்பிலான கூடுதல் பிரீமியம் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் பயனர்களுக்கு 3 ஆட்-ஆன் சிம்கள் வழங்குவதோடு அன்லிமிடெட் அழைப்பு மற்றும் SMS பலன்களை வழங்குகிறது. இதில் 100ஜிபி மாதாந்திர டேட்டா கிடைக்கிறது. ஜியோ இந்த திட்டத்துடன் இலவச நெட்ஃபிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் சந்தாக்களை வழங்குகிறது.


Click it and Unblock the Notifications








