டிஜிட்டலில் தெறிக்கவிடும் 1.5 லட்சம் தபால் நிலையம்.!

இந்தியாவில் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. இதனால் மிகவும் விரைவாக சேவையை பயனர்கள் பெற முடியும்.

|

இந்தியாவில் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. இதனால் மிகவும் விரைவாக சேவையை பயனர்கள் பெற முடியும்.

டிஜிட்டலில் தெறிக்கவிடும் 1.5 லட்சம் தபால் நிலையம்.!

பல்வேறு சேவைகளுக்கும் இது உகந்தாக இருக்கும். பல நாட்களாக ஏங்கி தவித்தவர்களுக்கும் இது மிகப் பெரிய வரப்பிரசாதனமாக உருவெடுத்துள்ளது.

நவீன மாக்கப்படுகின்றது:

நவீன மாக்கப்படுகின்றது:

இந்தியாவில் உள்ள ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான தபால் நிலையங்கள், டிசிஎஸ் எனப்படும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் வழங்கிய புதிய சாப்ட்வேர் தொழில்நுட்பம் வாயிலாக நவீன மயமாக்கப்பட்டு இருக்கின்றன.

பயன் பெறலாம்:

பயன் பெறலாம்:

இதற்கான 1100 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை, 2013 ஆம் ஆண்டு தபால் துறையிடம் இருந்து டிசிஎஸ் நிறுவனம் பெற்றது. தபால் நிலையங்களில் வாடிக்கையாளர்களுக்கு வங்கி, காப்பீடு போன்ற அதிக சேவைகளை திறம்பட அளிக்கும் விதத்தில் தகவல் தொழில்நுட்பங்கள் நவீனப்படுத்த வேண்டும் என்பதே இதற்கான திட்டமாகும்.

1.5 லட்சம் தபால் நிலையம் இணைப்பு:

1.5 லட்சம் தபால் நிலையம் இணைப்பு:

அதன்படி, மின்னஞ்சல் இயக்கம், நிதி மற்றும் கணக்கு, மனிதவள செயல்பாடு போன்றவற்றில் தீர்வு காணப்பட்டதுடன், ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான தபால்நிலையங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

மின் தபால் நிலையம்:

மின் தபால் நிலையம்:

இதனால் உலக அளவில் மிகப்பெரிய மின் தபால் நெட்வார்க் உருவாகி உள்ளது. இந்த தொழில்நுட்பம் 5 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களுக்கு உறுதுணையாக இருப்பதுடன், நாளொன்றுக்கு 30 லட்சம் தபால் பரிமாற்றங்களை டிஜிட்டல் முறையில் அளிக்க முடியும்.

Best Mobiles in India

English summary
1.5 lakh post offices across the country are connected to digital service : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X