43,236 கிமீ வேகம்., 1.3 கிமீ அளவு- பூமியை நோக்கி அருகில் வரும் சிறுகோள்: பூமிக்கு ஆபத்தா?
மார்ச் 4 சிறுகோள் பூமிக்கு அருகில் வரும் எனவும் இந்த சிறுகோளின் அடுத்த நெருக்கமான அணுகுமுறை மார்ச் 2043-ல் இருக்கும் எனவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பூமிக்கு 49,11,298 கிமீ தொலைவு
வெளிப்புற வானத்தில் உள்ள பொருட்களை கண்காணிக்கும் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம் (ஜேபிஎல்) பூமியை நோக்கி ஏறக்குறைய 1.3 கிலோமீட்டர் அளவுள்ள சிறுகோள் ஒன்றை கண்டறிந்துள்ளது. அபாயகரமானதாக கருதப்படும் இந்த சிறுகோள் ஆனது மார்ச் 4 அன்று பூமியை நெருங்கி அதாவகு பூமிக்கு 49,11,298 கிமீ தொலைவில் வரும் என கூறப்படுகிறது.

400 நாட்களுக்குள் அதன் சுற்றுப்பாதையை நிறைவு செய்கிறது
பூமிக்கு அருகில் உள்ள விண்கல் சூரியனை நோக்கி சென்று 400 நாட்களுக்குள் அதன் சுற்றுப்பாதையை நிறைவு செய்கிறது. பூமிக்கு மிக அருகில் நெருங்கும் போது இந்த விண்கல் 43,236 கிமீ வேகத்தில் பயணிக்கும் என கூறப்படுகிறது. கடைசியாக 2006 ஆம் ஆண்டில் இதேபோல் சிறுகோள் ஒன்று 71,61,250 கிமீ தொலைவில் பூமிக்கு அருகில் பாய்ந்தது. மார்ச் 4 அன்று சிறுகோள் பூமிக்கு மிக அருகில் வரும் எனவும் இதன் அடுத்த நெருக்கமான அணுகுமுறை 2043 ஆண்டில் இருக்கும் என கணிக்கப்படுகிறது. இந்த விண்கல் பூமியில் இருந்து வெறும் 48,15,555 கிலோமீட்டர் தொலைவில் வரும் என கூறப்படுகிறது. சுற்றுப்பாதை கண்காணிப்பு ஆய்வு மையமான ஜேபிஎல் இதை கணித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இத்தாலியில் உள்ள விர்ச்சுவல் டெலஸ்கோப் திட்டம்
ஜேபிஎல் சுற்றுப்பாதையை வெளியிட்ட போது, இத்தாலியில் உள்ள விர்ச்சுவல் டெலஸ்கோப் திட்டத்தின் வானியலாளர் ஜியான்லூகா மாசி விண்வெளியில் மிதக்கும் இந்த பொருளை கண்டறிந்தார். பூமியில் இருந்து கிட்டத்தட்ட 35 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருந்த போது பூமியில் உள்ள தொலைநோக்கி பயன்படுத்தி இந்த சிறுகோளை மாசி கண்டறிந்தார். 138971 (2001 CB21) என்ற சிறுகோள் முதன்முதலில் லிங்கன் நியர் எர்த் ஆஸ்டிராய்ட் ரிசர்ச் திட்டத்தில் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் 24 சதவீதத்திற்கும் அதிகமான ஆபத்தான சிறுகோள் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பூமி வளிமண்டலத்தில் இருந்து பூமியை அடையும் பொருள்
விண்கலன் என்பது பூமி வளிமண்டலத்தில் இருந்து பூமியை அடையும் பொருளாகும். சூரிய மண்டலத்தில் பில்லியன் கணக்கில் சிறு கற்களும், உலோகப் பாறைகளும் நீந்திக் கொண்டிருக்கின்றன. இந்த விண்கற்கள் சில பூமியை நோக்கி வருமாயின் அது மேற்புறத்தில் இருந்து ஈர்ப்பு விசை காரணமாக அதிவேகத்தில் வந்தடையும்.

எரிகல் அல்லது எரி நட்சத்திரம்
எரிகல் அல்லது எரி நட்சத்திரம் வளிமண்டலத்தின் உராய்வு வெப்பத்தினால் எரிந்து, ஒளிந்தபடியான பாதையை ஏற்படுத்துகின்றன. அப்பொழுது இவை எரிகல் அல்லது எரி நட்சத்திரம் என அழைக்கப்படுகிறது. இவற்றில் சில முழுவதுமாக எரிந்து வளி மண்டலத்துடன் கலந்து விடுகின்றன. சிலவற்று பூமியில் விழுந்து, நினைத்து பார்க்கமுடியா பள்ளங்களை ஏற்படுத்தியுள்ளன. சூரிய குடும்பத்தில் மிதந்துக் கொண்டிருக்கும் கற்கள் சில நேரங்களில், வியாழனின் ஈர்ப்பு விசை காரணமாக உள் சூரிய மண்டலத்தை நோக்கி பயணிக்கிறது, அதில் சிலவற்று பூமியை அச்சுறுத்தும் வகையிலும் உள்ளது.

பூமிக்கு அருகே வந்த குறுங்கோள்
முன்னதாக பூமிக்கு அருகே வந்த குறுங்கோள் ஒன்றை நாசா கண்டுபிடித்தது. இந்த குறுங்கோளுக்கு 2021 பிஜேஐ என பெயரிடப்பட்டது. தற்போது நாசா கண்டறிந்து சிறுகோளானாது பூமியல் இருந்து சுமார் 17 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் இருந்ததாக கூறப்பட்டது. இதுநாள் வரை ரேடாரில் சிக்காமல் இருக்க காரணம் இந்த குறுங்கோளானது மிகவும் சிறியது. இந்த குறுங்கோள் 17 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் சுமார் 94 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பூமியை கடந்து சென்றது. கண்டுபிடிக்கப்பட்ட சிறுகோள் ஆனது அளவு மிகவும் சிறியதாக இருந்ததால் ரேடாரில் இது காணப்பட முடியவில்லை என கூறப்பட்டது.

1000 ஆவது சிறுகோள்
தேசிய ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (நாசா) தனது ஜெட் ப்ராபல்ஷன் லேபரேட்டரி (ஜேபிஎல்) பூமிக்கு அருகில் உள்ள பொருள்களை தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகிறது. பூமியில் 1.7 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் கடந்து சென்ற புதிய சிறுகோள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. 2021 பிஜே1 என பெயரிடப்பட்ட இந்த சிறுகோள் பூமிக்கு அருகில் வந்த 1000 ஆவது சிறுகோள் ஆகும்.
File Images
News Source : www.indiatoday.in


Click it and Unblock the Notifications