சிவோக்ஸ் வழங்கும் புதிய சவுண்ட் பார் ஹோம் தியேட்டர்கள்!

By Super
|
சிவோக்ஸ் வழங்கும் புதிய  சவுண்ட் பார் ஹோம் தியேட்டர்கள்!

சிவோக்ஸ் என்ற நிறுவனம் தனது எலக்ட்ரானிக் டிவைஸ்கள் முலம் உலக அளவில் மிகப் பிரபலமாக இருக்கிறது. இந்த சிவோக்ஸ் தனது சிங்கள் கேபினட் ஹோம் தியேட்டர்களுக்கு அதிகமான வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்த ஹோம் தியேட்டர் பல விருதுகளையும் பெற்றிருக்கிறது. இப்போது இந்த நிறுவனம் இந்த இஸட் வரிசை சவுண்ட் பார்களை விரிவுபடுத்த இருக்கிறது. இந்த இஸட் சவுண்ட் பார்களை டிவிகளுக்கு அடியில் வைத்துக் கொள்ளலாம். இந்த சிவோக்ஸின் புதிய 2 இஸட் சவுண்ட் பார்கள் குறைந்த விலையில் வருகின்றன.

இந்த இஸட் வரிசை சவுண்ட் பார்களின் சிறப்புகளைப் பார்த்தால் இவை முதலில் மரத்தால் ஆன கேபினட்டுகளைக் கொண்டிருக்கிறது. அதுபோல் உயர் தரம் கொண்ட ஆம்பிளிபயர்கள் மற்றும் ஸ்பீக்கர்களைத் தாங்கி வருகிறது. மேலும் சிவோக்ஸ் தனது பேஸ்க்யூ II வெர்ச்சுவல் சரவுண்ட் சவுண்ட் சிஸ்ட்த்தையும் இந்த ஹோம் தியேட்டரில் கொண்டிருக்கிறது.

இந்த ஹோம் தியேட்டர் டையலாக் எம்பசிஸ் வசதியைக் கொண்டிருப்பதால் இதில் உரையாடல்கள் மிகத் தெளிவாக இருக்கும். இதன் அவுட்புட் லெவலிங் வசதி மூலம் தேவை இல்லாத ஒலிகளைக் குறைக்கவும் தேவையான உரையாடல்களின் ஒலி அளவை அதிகரிக்கவும் முடியும். மேலும் 3 டைமன்சனல் ஒலி எந்தவித ஸ்பீக்கர் மற்றும் ஸ்பீக்கர் வயர் இல்லாமல் இந்த ஹோம் தியேட்டரில் அனுபவிக்கலாம்.

இது ரிமோட் வசதி கொண்டிருப்பதால் தூரத்திலிருந்தே இந்த ஹோம் தியேட்டரை இயக்க முடியும். மேலும் இதில் 2 அனலாக் ஆடியோ இன்புட்டுகள், ஒரு ஆப்டிக்கல் மற்றும் ஒரு கோ ஆக்சியல் டிஜிட்டல் இன்புட் ஆகியைவ உள்ளன. இதன் முன் புறத்தில் அனலாக் ஸ்டீரியோ இன்புட் உள்ளது. மேலும் இந்த டிவைசை ஐபாட் மற்றும் பிற போர்ட்டபுள் டிவைஸ்களை மிக எளிதாக இணைக்க முடியும்.

இஸட்-பேஸ் 200 ஒரு டிவிடி ப்ளையரைப் போல் இருக்கிறது. இந்த டிவைஸ் 3டி சரவுண்ட் சவுண்டைக் கொண்டுள்ளது. இது 3 முழு அளவிலான ஸ்பீக்கர்கள், 35 வாட் ஆம்ப்ளிபயர் மற்றும் பேஸ் க்யூ II வெர்ச்சுவல் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் மற்றும் 5.25 இன்ச் துணை ஊபர் சிஸ்டம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

ஸட்-பேஸ்320 டிவைஸ் 11.5 இன்ச் ஆழம் மற்றும் 24 இன்ச் அகலத்தைக் கொண்டிருக்கிறது. 46 இன்ச் அளவிலான டிவி வரை இது சப்போர்ட் செய்யும். மேலும் இது 3 முழு அளவிலான ஸ்பீக்கர்கள், 40 வாட் ஆம்ப்ளிபயர், மற்றும் 5.25 இன்ச் துணை ஊபர் சிஸ்டம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

ஸட் பேஸ் 420 மிகவும் சக்தி வாய்ந்ததாகும். இது 55 இன்ச் அளவிலான டிவிக்களை சப்போர்ட் செய்யும். மேலும் இது 45 வாட் ஆம்ப்ளிபயரைக் கொண்டிருக்கிறது. மற்ற அம்சங்கள் அணைத்தும் ஸட்பேஸ் 320ஐ ஒத்திருக்கின்றன.

இந்த இஸட் மாடல் ஹோம் தியேட்டர்கள் ரூ.10000 முதல் 20000 வரை உள்ளன.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X