ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் புதிய ஹெட்போன்: ஸும்ரீத் அறிமுகம்

By Super
|
ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் புதிய ஹெட்போன்: ஸும்ரீத் அறிமுகம்
சும்ரீட் நிறுவனம் புதிய ஹைப்ரீட் ஹெட்போன்களை சிறந்த தரத்தில் வழங்குகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தரமான இசையை தனியாகவும் அதே நேரத்தில் மற்றவரோடும் சேர்ந்து கேட்டு மகிழலாம்.

இது எவ்வாறு சாத்தியம் என் கேள்வி எழலாம். ஆனால் தனது புதிய ஹெட்போன் முலம் சும்ரீட் இதை நிரூபித்திருக்கிறது. சும்ரீட் எக்ஸ்2 ஹைப்ரீட் ஹெட்போன்கள் 2 வெளிப்புற ஸ்பீக்கர்களைக் கொண்டு வருகின்றன. ஒன்றை வலது புறத்திலும் மற்றொன்றை இடதுபுறத்திலும் நாம் வைக்கலாம்.

இதன் மூலம் ஸ்பீக்கர்கள் மூலம் குடும்பத்தோடும் ஹெட்போன் மூலம் தனியாகவும் நாம் இசை கேட்க முடியும். மேலும் இந்த ஹெட்போனிலிருந்து வரும் இசை ஸ்பீக்கர்கள் மூலம் வரும் இசையால் பாதிப்படைவதில்லை.

இந்த ஹெட்போன் கடினமான் ப்ளாஸ்டிக் மற்றும் தோலினால் செய்யப்பட்டள்ளதால் இதை எவ்வளவு மணி நேரம் நமது காதி வைத்துக் கேட்டாலும் நமக்கு களைப்பை ஏற்படுத்தாது. அதுபோல் இதன் எடையும் மிகக் குறைவே.

சும்ரீட் எக்ஸ்2 ஹைப்ரீட் ஹெட்போனில் ஸ்பீக்கரிலிருந்து ஹெட்போனுக்கும் ஹெட்போனிலிருந்து ஸ்பீக்கருக்கும் மாறுவது மிக எளிதாக இருக்கும். சும்ரீட் எக்ஸ்2 ஹைப்ரீட் ஹெட்போனிலிருக்கும் பட்டனை அழுத்தினாலே போதும். ஸ்பீக்கரிலிருக்கு பேட்டரிகள் 4 மணி நேரம் தாங்கக்கூடியவை. மேலும் அவற்றை ரீஜார்ஜ் செய்யலாம்.

சும்ரீட் எக்ஸ்2 ஹைப்ரீட் ஹெட்போன் சிவப்பு, கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் வருகிறது. பார்க்க படு ஸ்டைலாகவும் இருக்கிறது. மேலும் இதன் ஸ்பீக்கர்களைப் பயன்படுத்தினால் மட்டுமே இந்த சும்ரீட் எக்ஸ்2 ஹைப்ரீட் ஹெட்போனை ஜார்ஜ் செய்ய வேண்டும். இதன் விலையைப் பார்த்தால் ரூ.8000 ஆகும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X