Home
Music

விழாக்களை இசையால் மெருகூட்டும் யமாஹாஆர்எக்ஸ் வி671 ரிசீவர்

By Super
விழாக்களை இசையால் மெருகூட்டும் யமாஹாஆர்எக்ஸ் வி671 ரிசீவர்
இப்போது முக்கியமான விழாக்களில் ஹோம் தியேட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் இப்போது யமாஹாஆர்எக்ஸ் வி671ம் இடம் பிடிக்க இருக்கிறது. இதனால், யமாஹாஆர்எக்ஸ் வி671 ரிசீவருக்கு இப்போது தேவை அதிகரித்திருக்கிறது.

யமாஹா ஆர்எக்ஸ் வி671 ரிசீவர் ஏகப்பட்ட வசதிகளோடு ட்ஸ்க்ரீட் பவர் சோன் 2 கொண்டிருக்கிறது. மேலும் பண்டோரா, சிரியுஸ்எக்ஸ்எம் இண்டர்நேட் ரேடியோ, விடியூனர் மற்றும் நாப்ஸ்டர் போன்ற நெட்வோர்க்குகளோடு இதை இணைக்க முடியும். அதுபோல் இதை எந்த டிஎல்என்எ வசதி கொண்ட டிவைஸோடும் இணைக்க முடியும்.

யமாஹா ஆர்எக்ஸ் வி671 ரிசீவர் அனலாக் வீடியோக்களை 1080பி ரிசலூசனுடன் எச்டிஎம்ஐக்கு மாற்றிவிடும். இதன் எச்டிஎம்ஐ மூலம் எந்த டிவைஸ்களையும் இணைத்து விடலாம். அதுபோல் டிவியோடும் இதை இணைத்து விடலாம்.

யமாஹா ஆர்எக்ஸ் வி671 ரிசீவர் புதிய நவீன தொழில் நுட்பத்துடன் இருக்கிறது. இந்த சிஸ்டம் நமது அறைகளில் 3டி வசதியை அளிக்கும்.

யமாஹா ஆர்எக்ஸ் வி671 ரிசீவர் 2 கம்போனன்ட் வீடியோ இன்புட்டுகளையும் 5 கம்போசிட் வீடியோ இன்புட்டுகளையும் கொண்டுள்ளது. அதுபோல் இது 3டி கம்பாட்டிபிலிட்டி கொண்டு 6 எச்டிஎம்ஐ இன்புட்டுகளை வழங்குகிறது. இந்த 6 எச்டிஎம்ஐ இன்புட்டுகளில் ஒன்று இதன் முகப்பில் இருக்கிறது.

அதன் மூலம் எச்டிஎம்ஐ அவுட்புட் கொண்ட கேமராக்களை இதில் இணைக்க முடியும். இது ஸ்டேண்ட்பை மோடில் இருந்தாலும் இந்த எச்டிஎம்ஐ இன்புட்டுகளை பரிமாறிக் கொள்ள முடியும். அதனால் ப்ளூரே ப்ளேயரை இந்த ஹோம் தியேட்டரை பூட் செய்யாமல் நேரடியாக டிவியோடு இணைக்க முடியும்.

யமாஹா ஆர்எக்ஸ் வி671 ரிசீவர் ஏவி கன்ட்ரோலர் அப்ளிகேசனையும் கொண்டுள்ளது. இந்த அப்ளிகேசன் ஐபோட் மற்றும் ஐபேடுகளை ரிமோட் கண்ட்ரோலுக்கு மாற்றுகிறது. அதனால் இதன் முலம் இன்புட் மற்றும் ஒலி அளவுக்கான மொத்த கட்டுப்பாட்டையும் இதை வைத்திருப்பவர் பெற முடியும்.

யமாஹாஆர்எக்ஸ் வி671 ரிசீவர் முகப்பு யுஎஸ்பி போர்ட் மூலம் ஐபோன் அல்லது ஐபோட் போன்றவற்றை இணைக்க முடியும். இதன் விலையைப் பார்த்தால் அது ரூ.26,930க்கு கிடைக்கிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X