புதிய யமஹா மியூசிக் சிஸ்டம்!

Posted By: Staff
புதிய யமஹா மியூசிக் சிஸ்டம்!
யமாஹா நிறுவனம் புதிய ரெஸ்டியோ ஐஎஸ்எக்ஸ்-800 என்ற ஆடியோ சிஸ்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இது ஒரு மிகவும் காம்பெக்ட் டிஸ்க் ஆகும். இது சிடி ப்ளேயர், மற்றும் ஐபோட் அல்லது ஐபோன், ஸ்பீக்கர்கள், ஆம்ப்ளிபையர், எஎம் அல்லது எப்எப் ட்யூனர் யுஎஸ்பி போர்ட் மற்றும் அலார்ம் க்ளாக் போன்றவற்றை இணைக்கும் டோக் கொண்டுள்ளது.

ரெஸ்டியோ ஐஎஸ்எக்ஸ்-800 சதுர வடிவத்தில் உள்ளது. இது பச்சை, பர்ப்புள், கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் வருகிறது. இதன் டிஸ்ப்ளேயில் இருப்பவற்றை தூரத்திலிருந்தே பார்க்க முடியும். இது 9செமீ தடிமனைக் கொண்டுள்ளது. மேலும் இந்த டிவைஸ் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்குகிறது.

இந்த யமாஹா ஆடியோ சிஸ்டம் அலாதியான இசையை வழங்கும். அதற்காக இது 4 இன்ச் கொண்ட 2 ஊபர்களைக் கொண்டுள்ளது. இதை ஐபோன் மற்றும் ஐபோடுகளில் மிக எளிதாக இணைக்க முடியும். ரிமோட் மூலம் இந்த டிவைசை மிக எளிதாக இயக்க முடியும். யுஎஸ்பி போர்ட் மூலம் இந்த ரெஸ்டியோ டிவைசில் யுஎஸ்பி மியூசிக் ஸ்டிக் மற்றும் டேட்டா டிராவலர் போன்றவற்றை இணைக்க முடியும்.

இதன் எல்இடி டிஸ்ப்ளேயில் பாடல்களைப் பற்றிய தகவல்கள் கிடைக்காது. மேலும் இது நெட்வொர்க்கிங் வசதிகளான ப்ளூடூத், வைபை, எர்த்நெட் அல்லது ஏர்ப்ளே போன்ற வசதிகளையும் வழங்குவதில்லை.

யமாஹா ரெஸ்டியோ ஐஎஸ்எக்ஸ்-800ல் இன்டலிஅலார்ம் என்ற அலார்ம் க்ளாக் மெக்கானிசம் உள்ளது. இதன் மூலம் இது உயர் ப்ரீக்வன்சி கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட மியூசிக் பைல்களை ப்ளே செய்யும்.

இந்த யமாஹா டிவைஸ் அதிகமான வசதிகளைக் கொண்டிருந்தாலும் இதன் விலைதான் சற்று அதிகம். அதாவது இதன் விலை ரூ.40,000 ஆகும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot