ரிமோட் வசதியுடன் புதிய யமஹா ஆடியோ டாக் சிஸ்டம்

யமாகா பிடிஎக்ஸ்-60பிஎல் டோக்கிங் ஸ்பீக்கர் சிஸ்டத்தின் மிக முக்கிய சிறப்பு என்னவென்றால் இதன் வயர்லஸ் வசதியாகும். அதனால் ஐபோடு அல்லது ஐபோன்களை வயர் இல்லாம் இவற்றில் இணைக்க முடியும். இதன் ஒலி அமைப்பும் மிக பக்காவாக உள்ளது. மேலும் இதில் ரிமோட் கண்ட்ரோல் வசதியும் உண்டு. அதனால் இது கண்டிப்பாக வாடிக்கையாளர்களை கவரும் என நம்பலாம்.
யமாகா பிடிஎக்ஸ்-60பிஎல் டோக்கிங் ஸ்பீக்கர் சிஸ்டத்தின் ஹார்ட்வேர் ப்ரீக்வன்சிகள் 60ஹெர்ட்ஸ் முதல் 20கிலோ ஹெர்ட்ஸ் வரை உள்ளது. அதுபோல் இதல் பேலஸ் ரிப்லகஸ் ஸ்பீக்கர்களும் உள்ளது. மேலும் இதன் டூவல் 3-1/4 இன்ச் முக்கோண ஊபர்கள் சிறந்த பேஸ் இசையை வழங்குகின்றன. இதன் எடை 3.7 எல்பி ஆகும். இது எசி அடாப்டரும் கொண்டுள்ளது. அதில் பவர் சார்டும் உள்ளது.
யமாகா பிடிஎக்ஸ்-60பிஎல் டோக்கிங் ஸ்பீக்கர் சிஸ்டம் 3 டோக் அடாப்டர்களும் அதே நேரத்தில் ஒலி அமைப்பைக் ஒழுங்கு செய்ய ரிமோட் கண்ட்ரோலையும் வழங்குகிறது. இதை மேசையிலோ அல்லது அலமாரியிலோ பொருத்தி வைக்கலாம். இது கருப்பு, ஊதா, க்ரே மற்றும் பிங்க் போன்ற 4 நிறங்களில் வருகிறது.
மேலும் இது ஆட்டோ பவர் ஆன் மற்றும் பவர் ஆப் வசதிகளைக் கொண்டிருக்கிறது. மேலும் எசி அடாப்டருக்கான் சாக்கெட்டும் இது வழங்குகிறது. இதில ஒலி அமைப்பைக் கூட்டுவதற்கும் குறைப்பதற்குமான பட்டன்கள் மட்டுமே உள்ளன. மற்ற பட்டன்கள் அனைத்தும் ரிமோட் கண்ட்ரோலில் உள்ளன.
யமாகா பிடிஎக்ஸ்-60பிஎல் டோக்கிங் ஸ்பீக்கர் சிஸ்டத்தின் விலை ரூ.12000 ஆகும். ஆனால் இதன் தரம் இதன் விலையை விட அதிகமாகும்.


Click it and Unblock the Notifications