Home
Music

போட்டியாளர்களை மிரள வைக்கும் யமாஹாவின் இசைத் தயாரிப்புகள்

By Super
போட்டியாளர்களை மிரள வைக்கும் யமாஹாவின்  இசைத் தயாரிப்புகள்
யமாஹா நிறுவனம் ஹெட்போன்கள், சவுண்ட்பார்கள், டேப்லட்டாப், ஐபோட், ஐபோன் போன்றவற்றிற்கான டாக்கிங் சிஸ்டங்களைத் தயாரிப்பதை விரிவுபடுத்த திட்டமிட்டிருக்கின்றன.

ஹெட்போன் துறையில் ஏராளமான் நிறுவனங்கள் போட்டியிடுகின்றன. தற்போது யமாஹா 5 புதிய ஹெட்போன் மாடல்களை வைத்திருக்கின்றன. இவை ரூ.1450 முதல் ரூ.7500 வரையுள்ள விலைகளில் இருக்கின்றன.

மேலும் யமாஹா 149 அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட சிறந்த ஹெட்போன்களையும் வழங்குகின்றன. அதில் பலவிதமான வசதிகள் உள்ளன. அதில் இரைச்சலும் இருக்காது. யமாஹாவின் டாம் சம்னரின் கூற்றுப்படி யமாஹா தயாரிப்புகளுக்கு கலைஞர்களின் ஆதரவு தேவையில்லை என்கிறார்.

டிஜிட்டல் சவுண்ட ப்ரொஜக்டர் சவுண்ட்பார் துறையில் யமாஹா புதிய மாடல்களை ரூ.50000லிருந்து ரூ.110000 விலைகளில் வழங்குகிறது. இந்த சவுண்ட் பார்கள் அதிரும் மற்றும் பிரதிபலிக்கும் ஓசைகளை வழங்குகிறது. அதுபோல் இது 7.1 சேனல் சவுண்ட் பீல்டும் கொண்டுள்ளது.

2012க்குள் யமாஹா இந்த சவுண்ட்பார்களை குறைந்த விலையில் வழங்கத் திட்டமிட்டிருக்கிறது. தற்போது இதன் 2 மாடல்கள் ரூ.15000 முதல் ரூ.30000 வரை இருக்கிறது. இந்த மாடல்கள் ஏர் சரவுண்ட் எக்ஸ்ட்ரீம் ப்ராப்ரியேட்டரி வசதியைக் கொண்டுள்ளது.

யமாஹா ஏற்கனவே ஐபோட் மற்றும் ஐபோன்களுக்கான டோக்கிங் சிஸ்டங்களை வழங்கி இருக்கிறது. ஆனால் வரும் காலங்களில் இன்னும் புதிய மாடல்களை வழங்க யமாஹா திட்டமிட்டிருக்கிறது. இதன் தற்போதைய டாக்கிங் சிஸ்டம்கள் ரூ.14000 முதல் ரூ.75000 வரை உள்ளன. அதுபோல் 7 மேசை தனி சேசிஸ் டோக்கிங் ஸ்பீக்கர் சிஸ்டம் சிடி கொண்டு ரூ.7300 முதல் ரூ.22000 வரை உள்ளன.

சம்னர் இன்னு்ம புதிய சிந்தனையுடன் கூடியை தயாரிப்புகளை வழங்க முடியும் என்று நம்புகிறார். தற்போது யமாஹா பிடிஎக்ஸ்-11 என்ற 2 வழி மோனோவை வழங்கியிருக்கிறது. அது யமாஹாவின் முதல் எசி/டிசி டோக்கிங் ஸ்பிக்கர் ஆகும். இந்த டோக்கிங் ஸ்பீக்கர் தண்ணீர் தடுப்பு வசதியும் கொண்டது. இதை எடுத்தச் செல்வது மிக எளிதாக இருக்கும்.

தற்போது யமாஹா ஆப்பிளின் ஏர்ப்ளே மீயூசிக் ஸ்ட்ரீமிங் வசதியோடு தமது ஆடியோ டிவைஸ்களை இணைக்கத் திட்டமிடுகிறது. ஆனால் ஏர்ப்ளேயின் பிர்ட்ஜ்கோ நெடவொர்க்கிங் சிப் இல்லாமல் அதைச் செய்ய முடியாது. மேலும் யமாஹா ப்ளூடூத் வசதி கொண்டு இசை பேழைகளையும் 2012ல் வழங்க முடிவெடுத்திருக்கிறது. மொத்தத்தில் யமாஹாவின் தயாரிப்புகள் மக்களைக் கவரும் என நம்பலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X