Home
Music

ஐபோன்களுக்கான எக்ஸ்டிரீம் டாங்கோ ஸ்பீக்கர்கள்

By Super
ஐபோன்களுக்கான எக்ஸ்டிரீம் டாங்கோ ஸ்பீக்கர்கள்
ஆப்பிளின் காரணகர்த்தாவன ஸ்டீவ் ஜாப்ஸின் ஐபாட் மற்றும் ஐபோன்கள் என்றும் மக்கள் மனத்தில் நீங்காத இடத்தைப் பெற்று இருக்கிறது. ஐபாட் வந்த பின் தனியாக இசை கேட்கும் வசதி மொபைல் எம்பி3 சிடி ப்ளேயர்களுக்குள் முடங்கி போய்விடவில்லை. மைக்ரோசாப்ட் ஆப்பிளின் ஐபோடோடு சரிக்கு சமமாகப் போட்டி போட முடியவில்லை. ஐபோன் மேலும புதிய சிந்தனையுடன் வந்து ஸ்மார்ட் போன்களோடு இணைந்து இசை மாரி பொழிந்தது.

ஐபோட் மற்றும் ஐபோன்கள் தனியாக இசை கேட்கும் வசிதியில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்ததால் மற்ற நிறுவனங்களும் தமது இசைப் பேழைகளை அறிமுகம் செய்தனர். அந்த வரிசையில் எக்ஸ்ட்ரீம்மேக் நிறுவனமும் டேங்கோ டிஆர்எக்ஸ் என்ற புதிய ஸ்பீக்கர் சிஸ்டத்தை ஐபோட் மற்றும் ஐபோனுக்காக அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதில் ப்ளூடூத் மற்றும் ஸ்டீரியோ மினி-ஜாக் அக்ஸீலியரி இன்புட்டும் உள்ளன.

டேங்கோ டிஆர்எக்ஸ் வழங்கு இசை மிக அற்புதமாக இருக்கும். ஆனால் இதன் டிஸைன் சற்று சிறியதாக இருக்கும். அதாவது இதன் டோக் ஒரு புறத்திலும் இதன் எல்இடி மற்றும் நாப் மற்றொரு புறத்திலும் இருக்கும். இதன் நாப் ஆரஞ்சு போல் இருக்கும். இதன் கீழ் பகுதியில் பாடல் தெரிவு, ஒலி கட்டுப்பாடு மற்றும் ப்ளூடூத் ஆகியவற்றுக்கான பட்டன்கள் இருக்கும். அதன் மேலே வலது புறத்தில் ஸ்பீக்கர் துணிக்கு மேல் ஆன் ஆப் பட்டன்களும் மற்றும் பேஸ் ட்ரெபிள் மற்றும் ஒலி அமைப்பு பட்டன்களும் இருக்கும்.

டேங்கோ டிஆர்எக்ஸ், ஐபோன் 4 உடன் பரிசோதிக்கப்பட்டு அதன் முடிவும் நன்றாக இருக்கிறது. டேங்கோ டிஆர்எக்ஸில் இருக்கும் துணை ஊபர் கீழ் பக்கமாக இருக்கிறது.

டேங்கோ டிஆர்எக்ஸில் இருக்கும் எல்லா பட்டன்களும் ரிமோட் கண்ட்ரோலால் இயங்கக்கூடியவை. மேலும் இது ஐஓஎஸ் இருப்பதால் ப்ளூடூத்திலிருந்து ஐபோன் வழியாக டேங்கோ டிஆர்எக்ஸ் மூலம் இசை கேட்க முடியும். மேலும் இது 5 பேண்ட் ஈக்வலைசரையும் கொண்டிருக்கிறது.

டேங்கோ டிஆர்எக்ஸ் ஒரு பன்முகம் கொண்ட பல வேலைகளை செய்யும் ஒரு பேழையாகும். இதை ஸ்பீக்கர் போனாகவும் பயன்படுத்தலாம். மொத்தத்தில் இந்த பேழையை இதன் அத்தனை சிறப்புகளுடனும் சேர்த்து இதை ஒரு சிறந்த இசைப் பேழை என்று அழைக்கலாம்.

டேங்கோ டிஆர்எக்ஸின் நியூட்ரல் இசையை கண்டிப்பாக பலரும் ரசிப்பர். இதன் அடிப்பாகம் கனமாக இருந்தாலும் இது அனைவரும் விரும்பும் இசைப் பேழையாக இருக்கும் என நம்பலாம். இதன் விலையைப் பார்த்தால் ரூ.12000மாக இருக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X