Home
Music

ஆப்பிள் ஐமேக் கம்ப்யூட்டருக்கான புதிய ஸ்பீக்கர் சிஸ்டம்!

By Super
ஆப்பிள் ஐமேக் கம்ப்யூட்டருக்கான புதிய ஸ்பீக்கர் சிஸ்டம்!

எக்ஸ்ட்ரீம் மாக் நிறுவனம் ஆப்பிள் நிறுனத்தின் ஐமேக் கம்ப்யூட்டருக்கான புதிய டாங்கோ பார் ஸ்பீக்கரை அறிமுகப்படுத்துகிறது. இந்த ஸ்பீக்கர் சற்று மாறபட்டதாக இருக்கும். இது பார்ப்பதற்கு மிக அழகாகவும் அதே நேரத்தில் புதுமையான தொழில் நுட்பத்துடனும் இருக்கிறது. இதில் தரமான இசையையும் வழங்குகிறது.

இந்த எக்ஸ்ட்ரீம் மாக் டாங்கோ பார் ஸ்பீக்கரில் மொத்தம் 6 ஸ்பீக்கர்கள் மற்றும் டூவல் டூம் ட்வீட்டர்கள் உள்ளதால் இதன் ஒலி அமைப்பு மிக அதிரடியாக இருக்கும். இந்த ஸ்பீக்கர் யுஎஸ்பி இணைப்பு வசதி கொண்டு வருவதால் இதை மற்ற டவைஸ்களோடு மிக எளிதாக இணைக்க முடியும்.

இந்த யுஎஸ்பி மின் இணைப்புக்கும் ஆடியோ அவுட்புட்டுக்கும் பயன்படும். மேலும் துணை இணைப்பாக ஹெட்போன் ஜாக்கும் உள்ளது. மேலும் இந்த ஸ்பீக்கரை டிவி மற்றும் எம்பி3 ப்ளேயருடன் மிக எளிதாக இணைக்க முடியும்.

இதன் அடுத்த சிறப்பு இந்த ஸ்பீக்கர் 10வாட்ஸ் ஆம்ப்ளிபைடு யுஎஸ்பி பவரைக் கொண்டுள்ளது. அதுபோல் இந்த ஸ்பீக்கரில் நடுத்தர வகையைச் சேர்ந்த ட்ரைவர்களும் உள்ளன. இசை கேட்கும் போது இனிமையை ஏற்படுத்துவதற்காக டூவல் பேசிவ் ரேடியேட்டர் தொழில் நுட்பமும் இதில் உள்ளது.

மேலும் இது பேக்லிட் ஒலி கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்பீக்கரை ஐமேக் கம்ப்யூட்டருக்கு கீழே பொருத்தலாம். மேலும் இதிலிருந்து வரும் இசையைக் கேட்கும் போது ஹோம் தியேட்டரில் இருப்பதைப் போன்ற அனுபவத்தை தரும்.

எக்ஸ்ட்ரீம்மாக் டாங்கோ பார் ஸ்பீக்கரின் அடுத்து மிக முக்கிய அம்சம் என்னவென்றால் அதன் குறைவான விலையாகும். அதாவது இதன் விலை ரூ.5,000 மட்டுமே.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X