எக்ஸ்பாக்ஸ் வழங்கும் புதிய வீடியோ கேம் சாதனம்!

Posted By: Karthikeyan

 

எக்ஸ்பாக்ஸ் வழங்கும் புதிய வீடியோ கேம் சாதனம்!
எக்ஸ்பாக்ஸ் நிறுவனம் வீடியோ கேம் பிரியர்களுக்கு மிகவும் அதிநவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய புதிய விளையாட்டு சாதனத்தை அறிமுகப்படுத்துகிறது. உலக அளவில் எக்பாக்ஸின் புதிய வீடியோ கேம் சாதனங்களுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது.

இப்போது வரவிருக்கும் எக்ஸ்பாக்ஸின் புதிய சாதனம் படம் பார்ப்பதற்கும் வீடியோ கேம் விளையாடுவதற்கும் மிக அற்புதமாக இருக்கும். எக்பாக்ஸ் டிவிஆர் என்று அழைக்கப்படும் இந்த புதிய டிவைசின் பெயர் எக்ஸ்பாக்ஸ் 720 ஆகும்.

எக்ஸ்பாக்ஸ் 720ன் மிக முக்கிய சிறப்பு அதன் மீடியா ரிக்கார்டிங் வசதியாகும். இதன் மூலம் விளையாடிக் கொண்டிருக்கும் போதே டிவி நிகழ்ச்சிகளை பதிவு செய்ய முடியும்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தவிர படங்கள் மற்றும் பாடல்களையும் ரிக்கார்ட் செய்யலாம். மேலும் இந்த டிவைஸில் ப்ளே ஆகும் டிவிடியில் உள்ள வீடியோ தகவ்லகளையும் ரிக்கார்ட் செய்ய முடியும்.

இந்த புதிய எக்ஸ்பாக்ஸ் 720 2 ஜிபியு எஎம்டி ரேடியோன் மற்றும் 6 கோர் சிபியு கொண்டு வருகிறது. இதன் விலை குறைவாக இருப்பதால் இது ஸ்லீக்கர் ப்ரோபைலைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த வாரம் நடைபெற இருக்கும் இசிஎஸ்ஸில் புதிய சாதனத்தை மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்த இருக்கிறது என்ற செய்தியும் வருகிறது. இந்த புதிய எக்ஸ்பாக்ஸ் 360 டேஸ்போர்டு டிவிஆர் ரிக்கார்டர் அப்ளிகேசன் கொண்டு வரும் என்று தெரிகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot