வார்ஃப் டேல் ஹோம் தியேட்டர்.. வீட்டுக்குள் இன்னிசை மழை!

Posted By: Staff
வார்ஃப் டேல் ஹோம் தியேட்டர்.. வீட்டுக்குள் இன்னிசை மழை!

உயர்தர தொழில்நுட்பம் கொண்ட ஹோம் தியேட்டர்கள் மார்க்கெட்டில் வரிசை கட்டி நிற்கின்றன. ஆனால், அவற்றில் சில ஹோம் தியேட்டர்கள் மாடல்கள் மட்டுமே எதிர்பார்க்கும் அம்சங்களை கொண்டிருக்கும். அந்த வகையில், வார்ஃப் டேல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள உயர்ரக ஹோம் தியேட்டர்கள் இருக்கிறது.

ஒபிசிடியன் 600 மற்றும் டைமன்ட் எஸ்டபிள்யூ150 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஹோம் தியேட்டர்களில் இசையை கேட்கும்போது நிச்சயம் ஒரு பரவசமான அனுபவத்தை ஏற்படுத்துகிறது என்பதை உறுதியாக கூறலாம்.

இரண்டில் ஒபிசிடியன் 600 ஹோம்தியேட்டர் 5 ஸ்பீக்கர் செட்டுகளுடன் வந்துள்ளது. இதில், இரண்டு ப்ளோர் ஸ்டேண்டு ஸ்பீக்கர்கள், 2 சாட்டிலைட் ஸ்பீக்கர்கள் மற்றும் மற்றும் ஒரு சென்ட்ரல் சேனல் ஸ்பீக்கர் அடங்கும்.

ஆனால், இதில் ஒரே ஒரு குறை. இதில் சப் ஊஃபர் தனியாக இல்லாததுதான். இதன் தோற்றம் வெகு கவர்ச்சியாக இருக்கும்படியும், மிக நேர்த்தியாகவும் இருக்கிறது.

இதில் வுட் பினிஷ் என்று கூறும் மர வேலைப்பாடுகளால் இழைக்கப்பட்டிருப்பதால் கூடுதல் கவர்ச்சியை காட்டுகிறது. சென்ட்ரல் சேனல் ஸ்பீக்கரில் கன்ட்ரோல் பட்டன்கள் இருக்கின்றன. இதன், பேஸ் சவுண்டு மிக அற்புதமாக இருக்கிறது.

அதேவேளை, டைமன்ட் எஸ்டபிள்யூ 150 ஸ்பீக்கர் சிஸ்டத்தில் சப் ஊஃபர்கள் தனியாக கொடுக்கப்பட்டிருக்கிறது. இது மிக அதிரடியான பேஸ் ஒலி அமைப்பை கொண்டிருக்கிறது. மேலும், இதன் வடிவமைப்பும் மெச்சிக்கொள்ளும் படியாக இருக்கிறது.

இந்த இரண்டு உயர்தர ஹோம் தியேட்டர்களும் ரூ.70,000 விலையில் கிடைக்கிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்