Home
Music

லைவ் ஸ்ட்ரீமிங்கில் இன்டர்நெட்டில் துல்லியமாக டிவி பார்க்க உதவும் சாதனம்

By Super
லைவ் ஸ்ட்ரீமிங்கில் இன்டர்நெட்டில் துல்லியமாக டிவி பார்க்க உதவும் சாதனம்
சிறிய திரை லைவ் ஸ்ட்ரீமிங்கிற்கு முடிவு கட்ட வருகிறது டபுள்யுடி லைவ் ஸ்ட்ரீமிங் மீடியா ப்ளேயர்.

ஆம் இனி மிக துல்லியமாக இன்டர்நெட் மூலம் லைவ் ஸ்ட்ரீமிங்கில் டிவியில் இசை கேட்கலாம் அல்லது படம் பார்க்கலாம்.

இந்த சாதனம் நெட்பிக்ஸ் இணையதளத்தை இணைக்கவும் பின் டிவியில் ஸ்ட்ரீம் வீடியோவை இணைக்கவும் உறுதி அளிக்கிறது.

இது தரமான மற்றும் துல்லியமான வீடியோவிற்கு உத்திரவாதம் அளிக்கிறது. இது 2 யுஎஸ்பி போர்ட்டுகளைக் கொண்டிருப்பதால் இதை மற்ற எந்த டிவைஸ்களோடும் எளிதாக இணைக்க முடியும்.

மேலும் இந்த யுஎஸ்பி போர்ட் மூலம் கீபோர்ட் மற்றும் டிஜிட்டஸ் கேமரா போன்றவற்றையும் இணைக்க முடியும். இதை இயக்குவதற்கு முதலில் மின் இணைப்பு கொடுத்து பின் எச்டிஎம்ஐ கேபிளோடு இணைக்க வேண்டும்.

பின் இந்த டிவைஸ் சிறப்பாக செயல்படும். பின் இதை வைபையோடு இணைத்துவிட்டால் நமது டிவி வழியாக நாம் சிறப்பாக வீடியோவைக் கண்டு களிக்கலாம்.

வீடியோ மட்டுமல்ல ஆன்லைன் விளையாட்டுகள் மற்றும் நமக்கு விருப்பமான இசை போன்ற அத்தனையையும் நாம் அனுபவிக்கலாம்.

இந்த டபுள்யுடி லைவ் ஸ்ட்ரீமிங் மீடியா ப்ளேயரில் நமது தனிப்பட்ட தகவல்களையும் சேமித்து வைக்க முடியும்.

குறிப்பாக இசை மற்றும் வீடியோ ஆகியவற்றின் தகவல்களை இதில் பதிவு செய்து வைக்க முடியும். இந்த நிறுவனம் ஹுலு ப்ளஸ் மற்றும் பண்டோரா போன்ற நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்து இருக்கிறுது.

மேலும் இந்த டிவைஸ் மூலம் நாம் சினிமா நவ், யுட்யூப், மற்றும் ப்ளிக்கர் போன்றவற்றையும் இதில் நாம் அனுபவிக்க முடியும். இதன் மிக முக்கிய சிறப்பு என்னவென்றால் இது அமேசான் இன்ஸ்டன்ட் வீடியோவை வழங்குகிறது.

அதனால் இதில் எந்த வகையான வீடியோவையும் எந்த நேரத்திலும் பார்க்க முடியும் இந்த டபுள்யுடி லைவ் ஸ்ட்ரீமிங் மீடியா ப்ளேயர் ஒரு சாதாரண செட்டப் பாக்ஸ் போன்று அல்ல.

ஐரோப்பாவில் இந்த லைவ் டபிள்யூடி லைவ் ஸ்ட்ரீமிங் மிகவும் பிரபலமான டெய்லி மோஷன் சேவையை வழங்கி வருகிறது.

டபுள்யுடி லைவ் ஸ்ட்ரீமிங் மீடியா ப்ளேயரின் விலையைப் பார்த்தால் அது ரூ.4999 ஆகும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X