Home
Music

இசைப் பிரியர்களுக்காக வெகோ வழங்கும் புதிய வைபை ஸ்பீக்கர்

By Super

இசைப் பிரியர்களுக்காக வெகோ வழங்கும் புதிய வைபை ஸ்பீக்கர்
இசைப் பிரியர்கள் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் இசையை கேட்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இதற்காக, கணினி மற்றும் லேப்டாப்புகளுக்கு சிறந்த ஸ்பீக்கர்களை வைத்துக் கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர்.

குறிப்பாக ஐபோன் மற்றும் ஐபாடுகளுக்கான சிறிய ஸ்பீக்கர்கள் வழங்கும் இசை வாடிக்கையாளர்களுக்கு போதுமானதாக இல்லை. எனவே, பெரிய ஸ்பீக்கர் சிஸ்டத்தை இசைப் பிரயர்கள் விரும்புகின்றனர்.

இதை உணர்ந்த தயாரிப்பாளர்கள் பல விதமான ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்கின்றனர். குறிப்பாக இப்போது ப்ளூடூத் மற்றும் வயர்லஸ் ஸ்பீக்கர்கள் மிகவும் சர்வசாதாரணமாகிவிட்டது. மேலும் இந்த ஸ்பீக்கர்கள் மலிவு விலைகளில் வருவதால் அவை மக்களை மிக எளிதாக கவர்ந்து விடுகின்றன. ஆனால் ஒரு சில ஸ்பீக்கர்கள் தமது விலைக்குத் தகுந்தாற்போல் தரமான செயல் திறனுடன் இருப்பதில்லை.

இந்த குறையை போக்கும் விதத்தில் தற்போது கணினி மற்றும் லேப்டாப்புகளில் இணைக்கக்கூடிய வெகோ மிமி க்யூப் வைபை ஸ்பீக்கர் வருகிறது. இது வயர்லஸ் அடாப்டருடன் வருகிறது. பெயருக்கு ஏற்றார்போல் இது கூம்பு வடிவத்துடன் 1.5 வாட்ஸ் இரட்டை ஸ்பீக்கர்களுடன் ஸ்டீரியோ இசையை வழங்குகிறது.

இந்த ஸ்பீக்கரை இன்ஸ்டால் செய்வது மிக எளிதானது. இதை யுஎஸ்பி போர்ட் மூலம் கணினியில் இணைத்தவுடன் இதன் 2.4ஜிஹெர்ட்ஸ் அடாப்டர், சினிக் வயர்லஸ் ஆடியோ என்று கணினி திரையில் தோன்றும். இது வைபை இணைப்பை பாதிக்காது.

குறிப்பாக ஆடியோ ட்ரான்ஸ்மிசன் இல்லாமல் இதை இணைக்கும் போது இதில் உள்ள ஊதா நிற விளக்கு எரியும். மேலும் இந்த ஸ்பீக்கர் லைன்-இன்-போர்ட் கொண்டுள்ளதால் வயர்லஸ் அடாப்டர் இல்லாமலே இதை இணைக்க முடியும். இதன் பேட்டரியை யுஎஸ்பி மூலம் ஜார்ஜ் செய்ய முடியும்.

மிமி க்யூப் ஸ்பீக்கர் குறைந்த ப்ரிக்வன்சியிலும் தரமான இசையை வழங்குகிறது. இந்த ஸ்பீக்கரை ஒரே நேரத்தில் பல டிவைஸ்களோடு இதன் வைபை அடாப்டர் மூலமாக இணைக்க முடியும். வெகோ 360 சிங்கிள் ப்ளூடூத் ஸ்பீக்கரை விட மிமி க்யூப் ஸ்பீக்கர் அபாரமான இசையை வழங்குகிறது.

மிமி க்யூப் ஸ்பீக்கர் அடிப்படையில் தரமான இசையை வழங்குகிறது. இதை வைபை மூலம் மிக எளிதாக இணைக்க முடியும். இதன் விலை ரூ.5,000க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X