Home
Music

ரூ.1,000 விலையில் வரும் சூப்பர் ஹெட்போன்!

By Super

ரூ.1,000 விலையில் வரும் சூப்பர் ஹெட்போன்!
இனிமையான இசையை கேட்பது சந்தோஷமான விஷயம் தான். ஆனால் அப்படி காதில் பொருத்தி கேட்பதினால் காதிற்கு எந்த விதமான பாதிப்பும் இருக்க கூடாது என்ற கருத்தும் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த வகையில், வி-மோடா ஃபேடர்ஸ் என்ற பெயரில் புதிய ஹெட்போனை உருவாக்கியிருக்கிறது இயர் ஆர்மர் நிறுவனம். இந்த புதிய ஹெட்போன் காதுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது என்று இயர் ஆர்மர் கூறுகிறது.

இதில் 5 இருந்து 30டிபி வரை நாய்ஸ் ரிடக்ஷன் தொழில்நுட்பம் உள்ளது. இந்த இயர் ப்ளக் ஸ்மால், மீடியம், லார்ஜ் என்று மூன்று அளவுகளில் உள்ளது. இதனால் காதில் எளிதாக பொருத்திக்கொள்ள முடியும்.

காதுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் இயர் ப்ளக் மெடிக்கல்-கிரேட் சிலிக்கானால் செய்யப்பட்டுள்ளது. இந்த வி-மோடா ஃபேடர்ஸ் ஹெட்போன் மூலம் பயணத்தை கூட இனிய பயனமாக மாற்ற முடியும். சில ஹெட்போன்கள் அதிரும் அளவு சத்தத்தை கொடுத்து, தலைவலியை உண்டு பண்ணிவிடும்.

இதனால் கேட்கும் திறனில் சில பிரச்சனைகளையும், சந்திக்க வேண்டி இருக்கும். ஆனால் இந்த புதிய ஹெட்போனில் என்ஐஎச்எல் வசதி உள்ளதால், கேட்கும் திறனில் எந்த சிக்கலையும் ஏற்படுத்தாது.

ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால் காதுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத ஹெட்போன் என்று வி-மோடா ஃபேடர்ஸை கூறிவிடலாம். இந்த புதிய ஹெட்போன் ரூ.1,000ஐ ஒட்டிய விலையில் கிடைக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X