வீடியோ கேமில் ஓர் புதிய அனுபவம் தரும் ஹெட்போன்!

Posted By: Karthikeyan
வீடியோ கேமில் ஓர் புதிய அனுபவம் தரும் ஹெட்போன்!

உயர்தரமான மற்றும் வயர்லஸ் ஹெட்போனை வாங்க வேண்டுமென்றால் டர்ட்டில் பீஜ் நிறுவனத்தின் புதிய ஹெட்போனை தேர்ந்தெடுக்கலாம். இந்த புதிய ஹெட்போனின் பெயர் டர்ட்டில் பீஜ் எக்ஸ்பி500 ஆகும்.

இந்த எக்ஸ்பி500 ஹெட்போனின் முக்கிய அம்சங்களைப் பார்த்தால் இந்த ஹெட்போனுக்கு வயர் தேவையில்லை. ஏனெனில் இது ப்ளூடூத் அடாப்டர் கொண்டுள்ளது. மேலும் ஒலி அமைப்பிற்காக இந்த ஹெட்போன் 7.1 டால்பி சரவுண்ட் சவுண்ட் கொண்டுள்ளது. ஆடியோ ஈக்குவலைசர்க்காக 8 பிரிசெட்டுகளை இந்த ஹெட்போன் வழங்குகிறது. மேலும் 2 எஎ பேட்டரிகளைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஹெட்போன் மிகவும் அடக்கமான ஹெட்போன் ஆகும்.

இந்த பீஜ் ஹெட்போனின் டிசைன் சூப்பராக உள்ளது. இதன் இயர் கப்புகள் பெரிதாகவும் வட்டமாகவும் உள்ளதால் காதை முழுவதுமாக மறைத்துக்கொள்ளும். அதனால் வெளியிலிருந்து வரும் சத்தத்தை இந்த ஹெட்போன் உள்ளே அனுமதிக்காது. இதன் பேடிங் மிகவும் மிருதுவாக உள்ளதால் வீடியோ கேம் விளையாடும் போது காதில் எரிச்சல் இல்லாமல் நீண்ட நேரம் விளையாட முடியும்.

இந்த பீஜ் ஹெட்போனின் ஒரு சிறிய குறை என்னவென்றால் இது 2 எஎ பேட்டரிகளைக் கொண்டுள்ளது. ஆனால் யுஎஸ்பி சார்ஜிங் வசதி இதில் கிடையாது. அதனால் அடிக்கடி இந்த பேட்டரிகளை மாற்ற வேண்டியதிருக்கும். மேலும் இந்த பேட்டரிகள் 6 மணி நேர இயங்கு நேரத்தை வழங்குகின்றன. ஆனால் வீடியோ கேம் விளையாடுவதற்கு பேட்டரி இன்னும் அதிக நேர இயங்கு நேரத்தை வழங்க வேண்டும்.

ப்ளூடூத் அடாப்டரை விளையாட்டு சாதனத்தில் பொருத்த வேண்டும். பின் ஹெட்போனை ஆன் செய்து அதை விளையாட்டு சாதனத்தோடு இணைக்க வேண்டும். உடனே ஹெட்போன் இயங்க ஆரம்பித்துவிடும். இனிமையான இசையைக் கேட்க முடியும்.

இந்த ஹெட்போனிலிருந்து வரும் ஒலி மிகத் தெளிவாகவும் மற்றும் துல்லியமாகவும் இருக்கும். இதன் 7.1 வெர்ச்சுவல் ஒலி முழு கவனத்தோடு விளையாட உதவியாக இருக்கும். அதுபோல் விளையாட்டில் இருக்கும் சிறிய ஒலியைக்கூட துல்லியமாக கேட்க முடியும்.

இந்த ஹெட்போனின் விலை ரூ.14,000 ஆகும். இதன் விலை சற்று அதிகமாகும். ஆனால் வீடியோ கேம் விளையாடுவதற்கு இந்த ஹெட்போன் மிகவும் உதவியாக இருக்கும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்