புதிய வீடியோ கேம் சாதனத்துக்கான ஹெட்செட்!

Posted By: Karthikeyan
புதிய வீடியோ கேம் சாதனத்துக்கான ஹெட்செட்!

வீடியோ கேம் விளையாடும் போது அதன் இசை பிரமாதமாக இருந்தால் விளையாடுவதற்கும் மிகவும் ஆர்வமாக இருக்கும். அவ்வாறு வீடியோ விளையாட்டு இசையைப் பிரமாதமாக வழங்குவதில் ஹெட்போன்களுக்கு முக்கிய பங்கு இருக்கின்றன.

தற்போது ஒரு புதிய ஹெட்செட் சந்தைக்கு வந்திருக்கிறது. ட்ரைட்டன் வார்ஹெட் 7.1 என்று அழைக்கப்படும் ஹெட்செட், வீடியோ கேம்களுக்காகவே உருவாக்கப்பட்டிருக்கிறது.

இது வயர்லஸ் சரவுண்ட் சவுண்ட ஹெட்செட் ஆகும். இதை எக்ஸ்பாக்ஸ் 360ல் மிக எளிதாக இணைத்துக் கொள்ள முடியும். இந்த ஹெட்செட்டில் டோல்பை சவுண்ட் எபக்ட் உள்ளதால் இதில் இருந்து வரும் இசையும் அதிரடியாக இருக்கும். இந்த ஹெட்செட் ரூ.17,000க்கு விற்கப்படுகிறது.

அதிக விலையில் வரும் இந்த ஹெட்செட் வீடியோ கேம் பிரியர்களைக் குறிவைத்து தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஹெட்செட்டில் இக்யு செட்டிங்ஸ் உள்ளதால், கேம், மூவி மற்றும் இசை ஆகியவற்றுக்கு ஏற்ப இந்த ஹெட்செட்டை அமைத்துக் கொள்ளலாம்.

இந்த ஹெட்செட்டில் இருக்கும் வயர்லஸ் வசதி 33 அடி தூரம் வரை வேலை செய்யும். இந்த ஹெட்செட் இரண்டு பேட்டரிகளுடன் வருகிறது. இதை ரிசார்ஜ் செய்து கொள்ளலாம்.

இந்த ஹெட்செட்டில் வரும் எஸ்விஎம் தொழில் நுட்பம் முலம் இதைப் பயன்படுத்துவோர் தங்களது குரலை கேட்க முடியும். இந்த ஹெட்செட் உண்மையாகவே வீடியோ கேம்களை விளையாடுவதற்கும் சூப்பராக இருக்கும் என்று நம்பலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்