Home
Music

கம்ப்யூட்டர், லேப்டாப்புக்கான புதிய எச்பி ஆடியோ சிஸ்டம்!

By Super
கம்ப்யூட்டர், லேப்டாப்புக்கான புதிய எச்பி ஆடியோ சிஸ்டம்!

இசைக் கருவிகள் வாழ்க்கையின் இன்றியமையாத பொருட்களாகிவிட்டன. குறிப்பாக வீட்டில் உள்ள ஆடியோ சாதனங்கள் மற்றும் எம்பி3 ப்ளேயர் ஆகியவை இல்லாமல் வாழ முடியாது என்ற நிலைமை வந்து விட்டது. அதற்கு தகுந்தாற்போல் தயாரிப்பாளர்களும் ஏராளமான இசை சாதனங்களை ரக ரகமாய் அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கின்றனர்.

தற்போது எச்பி நிறுவனம் எச்பி வயர்லஸ் ஆடியோ என்ற பெயரில் புதிய ஆடியோ சிஸ்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த சிஸ்டம் லேப்டாப் மற்றும் கணினியை ஒரு முழுமையான ஆடியோ சிஸ்டமாக மாற்றும் தொழில்நுட்பத்துடன் வந்துள்ளது. இந்த இசை பேழையை வயர் இல்லாமல் மற்ற ஸ்பீக்கர் சிஸ்டத்தோடு மிக எளிமையாக இணைக்க முடியும்.

மல்டி மீடியா ஸ்ட்ரீமிங்கிற்கு தரமான ஸ்ட்ரீமிங் லிங் தேவைப்படும். ஆனால், கணினி மற்றும் லேப்டாப்புகளில் அந்த அளவிற்கு உயர்தரமான ஆடியோ சிஸ்டம்களை இணைக்கக்கூடிய இணைப்பு வசதிகள் குறைவே. ப்ளூடூத் வசதி இருந்தாலும்கூட மற்ற ஆடியோ சிஸ்டங்களை இணைக்க முடியுமா என்பது கேள்விக் குறியாகவே இருக்கும்.

ஆனால் அந்த குறையை நிறைவு செய்ய வருகிறது எச்பியின் புதிய வயர்லஸ் சிஸ்டம். இந்த எச்பி வயர்லஸ் ஆடியோ சிஸ்டம் 2 பகுதிகளைக் கொண்டுள்ளது. முதல் பகுதி கணினி அல்லது லேப்டாப் போன்றவற்றை யுஎஸ்பி போர்ட் மூலம் இணைக்கும் துவாரத்தைக் கொண்டுள்ளது.

இதில் உள்ள ரிசிவர் பல வகையான அனலாக் மற்றும் டிஜிட்டல் அவுட்புட் போர்ட்டுகளைக் கொண்டுள்ளது. இந்த போர்ட்டுகளில் ஸ்பீக்கர்களை இணைக்க முடியும். இந்த ரிசிவர் 5.1 ஸ்பீக்கர் சிஸ்டங்களை சப்போர்ட் செய்யும்.

இதன் மூலம் அது தரமான இசையையும் ஒலி அமைப்பையும் வழங்கும். ட்ரைபேன்ட் கனக்டிவிட்டி ட்ரான்ஸ்மிட்டர் மற்றும் ரிசிவருக்கும் இடையில் அமைந்துள்ளது. இந்த ட்ரைபேன்ட் 2.4, 5.2 மற்றும் 5.8ஜிஹெர்ட்ஸ் ப்ரீக்வன்சிகளில் இயங்கும்.

இந்த டிவைசில் வரும் சாப்ட்வேர் ட்ரான்ஸ்மிட்டருக்குத் தேவையான அனைத்து வேலைகளையும் செய்கிறது. இதன் ப்ளேயிங் ரேஞ்ச் 100 அடி ஆகும். இந்த எச்பி வயர்லஸ் ஆடியோ மியூசிக் ஸ்ட்ரீமரின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X