Home
Music

டச் சென்சிடிவ் வசதியுடன் புதிய வயர்லெஸ் ஹெட்போன்!

By Karthikeyan
டச் சென்சிடிவ் வசதியுடன் புதிய வயர்லெஸ் ஹெட்போன்!

பலவிதமான ஹெட்போன்கள் புதுவிதமான டிசைன்களில் கண்களையும் கருத்தையும் கவரும் விதத்தில் நிறைந்த தொழில் நுட்பங்களுடன் வருகின்றன. அதனால் ஒரு சூப்பரான ஹெட்போனை தேர்ந்தெடுப்பது என்பது ஒரு எளிதான விஷயம் அல்ல. ஏனெனில் சந்தையில் ஏராளமான ஹெட்போன்கள் இருப்பதால் எதைத் தேர்ந்தெடுப்பது என்பதில் பலருக்கு குழப்பம் இருக்கும்.

இப்போது ஒரு அட்டகாசமான ஹெட்போனை வாங்க வேண்டும் என்றால் அதற்காக ஸ்டார்க் நிறுவனம் சிக் பேரட் என்று புதிய நவீன ஹெட்போனை களமிறக்குகிறது. முதல் பார்வையிலேயே பார்ப்பவரின் மனங்களைக் கொள்ளை கொள்ளும் அளவிற்கு மிக அட்டகாசமாக இந்த ஹெட்போன் இருக்கிறது.

இது ஒரு வயர்லஸ் ப்ளூடூத் ஹெட்போன் ஆகும். அதுபோல் இதில் வெளிப்புறத்தில் இருந்து வரும் இரைச்சலைத் தடுக்கும் தொழில் நுட்பமும் உண்டு. மேலும் இதில் என்எப்சி இண்டக்ரேசனும் உண்டு. அதோடு சென்சிங் வசதி, தொடு சென்சிட்டிவ் கட்டுப்பாடுகள் மற்றும் அதிரடி ஒலி அமைப்பு போன்ற வசதிகளை இந்த பேரட் ஹெட்போன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

இதன் இயர் பேடுகள் ஓவல் வடிவத்தில் வந்து காதுகளை முழுமையாக மூடிக் கொள்ளும். மேலும் இவை காதுகளில் கச்சிதமாக பொருந்திவிடும். அதனால் நீண்ட நேரம் இந்த ஹெட்போனில் பாடல்கள் கேட்டாலும் காதுகளுக்கு எரிச்சல் இருக்காது. இதன் ஹெட்பேண்டின் மேல் பகுதியில் பஞ்சு உள்ளதால் அது தலையை அழுத்தாது. அதோடு இதன் இயர் கப்பில் தொடு சென்சிட்டிவ் கட்டுப்பாடுகள் உள்ளன.

இந்த பேரட் ஹெட்போனின் முக்கிய அம்சமாகப் பார்த்தால் அது தொடு கட்டுப்பாட்டு வசதி கொண்டிருக்கிறது. சிறிய தொடுதல் மூலம் இதன் ஒலி அளவைக் கூட்டவோ அல்லது குறைக்கவோ முடியும். மற்றொரு சிறப்பு என்னவென்றால் இது சென்சிங் வசதியைக் கொண்டுள்ளது.

அதாவது நமது இருப்பை இந்த ஹெட்போன் அறிந்து கொள்ளும். அதாவது இந்த ஹெட்போனை தலையிலிருந்து எடுக்கும் போது இதன் இயக்கத்தை நிறுத்த வேண்டியதில்லை. மாறாக இந்த ஹெட்போன் தானாகவே நின்றுவிடும். அதுபோல் மீண்டும் காதில் பொருத்தும் போது அது தானாகவே இயங்க ஆரம்பித்துவிடும்.

இந்த பேரட் ஹெட்போனில் 4 மைக்ரோபோன்கள் உள்ளதால் அது வெளிப்புற இரைச்சலை உள்ளே வரவிடாமல் தடுத்துவிடும். மேலும் இதில் டிஜிட்டல் மியூசிக் ஹால் வசதி உல்ளதால் இது 3டி ஒலியை வழங்கும். வாடிக்கையாளர்களை தனது இசையால் திக்குமுக்காட வைத்துவிடும். இந்த சிக் பேரட் ஹெட்போனின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் சரியான விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X