புதிய வடிவில் ஐபோன் டோக்கிங் ஸ்பீக்கர் சிஸ்டம்!

Posted By: Karthikeyan
புதிய வடிவில் ஐபோன் டோக்கிங் ஸ்பீக்கர் சிஸ்டம்!

ஆப்பின் ஐபோன் உலக அளவில் பிரபலமான மற்றும் அதிகமான வாடிக்கையாளர்களால் பெரிதும் விரும்பப்படும் ஒரு ஸ்மார்ட்போனாக இருக்கிறது. அதனால் ஐபோனுக்கு ஏராளமான அக்சஸரிகளை ஆப்பிளைத் தவிர்த்த பிற நிறுவனங்கள் தயாரித்து வழங்குகின்றன.

இந்த ஆப்பிள் ஐபோனுக்கான அக்சஸரிகளில் முக்கியமானவை டோக்கிங் ஸ்டேசன்கள் ஆகும். இந்த டோக்கிங் ஸ்டேசன்கள் பார்க்க பக்காவாகவும் அதே நேரத்தில் ஸ்டைலாகவும் இருக்கும். இப்போது கேவியோ நிறுவனம் ஆப்பிள் ஐபோனுக்காக புதிய ஸ்டைலில் ஒரு டோக்கிங் ஸ்டேசனை அறிமுகம் செய்கிறது. இந்த ஸ்டேசன் டோஸ்டர்

ஸ்டைலில் அமைந்த ஒரு ஸ்பீக்கர் டோக் ஆகும்.

இந்த கவியோ டோக்கில் 50 மிமீ கொண்ட 2 ஸ்பீக்கர்கள், 3 வாட்ஸ் கொண்ட ஆம்ப்ளிபயர் மற்றும் இன்பில்ட்டாக உள்ள லை யன் பேட்டரி ஆகியவை உள்ளன. இந்த டோக்கை வெளியிடங்களுக்கு மிக எளிதாக எடுத்துச் செல்ல முடியும்.

மேலும் இது அருமையான இசையை வழங்கும். இந்த டோஸ்டர் டோக்கின் மேல்பகத்தில் ஐபோன் டோக் ஸ்லாட் உள்ளது. இந்த டோஸ்டர் டோக்கில் ஐபோனைப் பொருத்தியவுடன் இதன் இசை அபாரமாக இருக்கும்.

இந்த கவியா டோக்கின் மொத்த பரப்பு 105 x 160 x 70 மிமீ ஆகும். இது 150 எச்ஸட் முதல் 18 கேஎச்ஸட் வரையிலான ப்ரீக்வன்சி ரெஸ்பான்ஸைக் கொண்டுள்ளது. இதன் இரைச்சல் ரேசியோ 80 டிபி சிக்னல் ஆகும். இந்த டோக்கிங் சிஸ்டம் 1000 எம்ஏஎச் லித்தியம் ஐயன் பேட்டரியைக் கொண்டிருக்கிறது.

இந்த கேவியோ டோஸ்டரின் ஒலி அளவை சரி செய்து மிகவும் எளிதான காரியம் ஆகும். இந்த புதிய டேக்கிங் சிஸ்டத்தின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. வாடிக்கையாளர்களின் ஆதரவை இந்த டோக் பெறும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot