Home
Music

மர வேலைப்பாடுகளுடன் புதிய ஸ்பீக்கர் சிஸ்டம்!

By Super
மர வேலைப்பாடுகளுடன் புதிய ஸ்பீக்கர் சிஸ்டம்!

தற்போது ஏராளமான ஹைபை ஸ்பீக்கர்கள் வந்து ஸ்பீக்கர் சந்தையை கலங்கடித்துக் கொண்டிருக்கின்றன. தரமான இசையை வழங்கும் ஸ்பீக்கர்கள் அவை எந்த நிறுவனத்தைச் சார்ந்தவையாக இருந்தாலும் அவற்றை வாங்குவதற்கு மக்கள் தயாராக உள்ளனர். ஐபாட் மற்றும் ஐபேடுகளுக்கான அக்சஸரிகள் ஆயிரக் கணக்கில் சந்தையில் கொட்டிக் கிடக்கின்றன. அதுபோல் டாக்கிங் செய்யும் வசதியுடன் பலவித அளவுகளில் பலவித வடிவங்களில் ஸ்பீக்கர்கள் வருகின்றன. அவற்றில் ஒரு சில மட்டுமே தரமான ஒலியை வழங்குகின்றன.

அப்படிப்பட்ட தரமான ஒலி அமைப்பை வழங்குவதில் தோடியோ ஐ-பாக்ஸ் ஸ்பீக்கரும் ஒன்று. இதன் டிஸைன் புதுமையாக இருக்கிறது. அதாவது இந்த ஸ்பீக்கர் மரத்தால் செய்யப்பட்டுள்ளது.கடந்த 1980ம் ஆண்டுகளில் களில் வந்த ஸ்பீக்கர்களை ஒத்து இருக்கிறது இந்த ஸ்பீக்கர். இதன் ஒலி அமைப்பும் மிக பக்காவாக இருக்கிறது.

இந்த மரத்தால் செய்யப்பட்ட ஐ-பாக்ஸ் ஸ்பீக்கர் மிகவும் வலிமை வாய்ந்தது. அதாவது பாடலை மிக உயர்ந்த பேஸில் இசைக்கும் போது இதில் அதிர்வுகள் இருக்காது. அது மரத்தால் செய்யப்பட்டுள்ளதால் இதன் எடை சற்று அதிகமாக இருக்கும்.

மேலும் இது டீக், சிப்ரா உட், ஓக், பர்ப்பிள் ஹார்ட் போன்ற மரங்களினால் செய்யப்பட்டுள்ளது. அதனால் நமக்குத் தேவையான மரத்திலிருந்த செய்யப்பட்ட ஸ்பீக்கர்களைத் தெரிவு செய்து கொள்ளலாம்.

இந்த ஐ-பாக்ஸ் ஸ்பீக்கரின் மொத்த பரப்பு 34செமீ x 22செமீ x 23 செமீ ஆகும். இந்த ஸ்பீக்கரின் எடை 6.5 கிலோவாகும். இந்த ஸ்பீக்கரின் பவர் அவுட்புட் 2 x 70 வாட்ஸ் ஆர்எம்எஸ் ஆகும். இந்த ஸ்பீக்கரின் உச்சியில் ஆப்பிளின் யுனிவேர்சல் டோக் உள்ளதால் இந்த ஸ்பீக்கர் டோக்குடன் இணைக்கப்படும் போது சார்ஜ் ஆகிவிடும். மேலும் இதன் இன்ட்க்ரேட்டட் பேட்டரி 12 மணி நேரம் வரை தாங்கும் சக்தி கொண்டது.

இந்த தோடியோ ஐ-பாக்ஸ் ஒரு இன்டக்ரேட்டட் ப்ளூடூத் ரிசிவரைக் கொண்டுள்ளது. அதனால் இந்த ஸ்பீக்கரை எல்லாவித ப்ளூடூத் இணைப்பு வசதிகொண்ட சாதனங்களுடன் எளிதாக இணைக்க முடியும். மேலும் இதில் 2 இண்டிக்கேட்டர் லைட்டுகளும் உள்ளன. இந்த ஐ-பாக்சின் விலை ரூ.30,000லிருந்து தொடங்குகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X