Home
Music

தேனிசை மழை பொழியும் புதிய இயர் போன்!

By Super
தேனிசை மழை பொழியும் புதிய இயர் போன்!

தரமான ஆடியோ சாதனங்களை தயாரித்து வழங்குவதில் புகழ் பெற்ற திங்சவுண்ட் நிறுவனம் இப்போது எம்எம்-01 என்ற இன்-இயர் ஹெட்போன்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த இன்-இயர் ஹெட்போன்கள் இசைப் பிரியர்களை இசை இன்ப வெள்ளத்தில் மூழ்கடித்துவிடும் என்றால் மிகையாகாது. அந்த அளவிற்கு இந்த ஹெட்போனின் தொழில்நுட்பமும், ஒலி அமைப்பும் மிக அற்புதமாக உள்ளது.

மிகவும் பிரபலமான கிராமி விருதை வென்ற இசைக் கலைஞர்கள் மற்றும் ஆடியோ இன்ஜினியர்கள் உதவியோடு இந்த எஸ்01 இன்-இயர் ஹெட்போன்களை வடிவமைத்துள்ளது.இந்த எம்எஸ்01 ஹெட்போனின் சிறப்பு அம்சங்கள் மிகவும் அபாரமாக உள்ளன.

குறிப்பாக இதன் டிசைன் மிகவும் சூப்பர். இதில் 8 மிமீ கொண்ட ட்ரைவர் உயர் டெபினிசன் கொண்டுள்ளது. அதுபோல் பேசிவ் நாய்ஸ் ஐசோலேசன் மற்றும் பேசிவ் நாய்ஸ் கேன்சலேசன் ஆகிய வசதிகளையும் இந்த இயர்போன் வழங்குகிறது.

மேலும் இந்த சாதனம் மிகவும் எடை குறைந்த ஒன்றாகும். அதுபோல் டேங்கிள் ரெசிஸ்டென்ட் பிவிசி கேபிள்களையும் இது கொண்டுள்ளது. இந்த எம்எஸ்01 ஹெட்போன் தேனினும் இனிய இசையை வழங்குகிறது. இதில் இரைச்சல் தடுப்பு வசதியும் உண்டு.

இந்த ஹெட்போன் மிகவும் குறைந்த எடை கொண்டிருப்பதால் இதை எடுத்துச் செல்வதற்கும், குறிப்பாக பயணத்தின் போது மிக எளிதாக இருக்கும். இது குறைந்த ஸ்பீக்கர் டயாமீட்டர் கொண்டிருப்பதால் அந்த குறையை நிவர்த்தி செய்யும் விதமாக இதில் மேம்படுத்தப்பட்ட எர்கோனோமிக்குகள் வழங்கப்படுகின்றன.

இந்த எம்எஸ்01 ஹெட்போன்களில் பிவிசி கேபிள்கள் உள்ளதால் இதில் பிரச்சினைகள் ஒன்றும் இருக்காது. இந்த இயன் போனின் மொத்த எடை 9.5 கிராம்கள் மட்டுமே. இது கன் மெட்டல் சாக்லெட் வண்ணத்தில் வருகிறது. மேலும் இந்த ஹெட்போன் ஒரு வருட உத்திரவாதத்துடன் வருகிறது. இந்த ஹெட்போனின் விலை ரூ.5,000 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X