ஐபாட், ஐபோனுக்கான புதிய ஆடியோ சிஸ்டம்!

ஸ்பீக்கல் நிறுவனம் தரமான ஆடியோ சாதனங்களை வழங்கி வருகிறது. அந்த நிறுவனம் தற்போது புதிதாக ஸ்பீக்கல் மை சாசர் என்ற புதிய ஆடியோ சாதனத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த சாதனம் ஐபோன் மற்றும் ஐபாட் ஆகியவற்றிற்காகவே சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த சாதனம் மிக ஏராளமான சிறப்பம்சங்களைக் கொண்டு இருக்கிறது. இது பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கிறது. மேலும் இதை ஆப்பிளின் ஐபோட் மற்றும் ஐபோன்களில் மிக எளிதாக இணைக்க முடியும். இந்த சாதனம் ஊதா, கருப்பு, மற்றும் சிவப்பு நிறங்களில் வருகிறது.
ஸ்பீக்கல் மை சாசர் ஐபாடில் பாடல் கேட்கும் அதே நேரத்தில் அதன் மூலம் ஐபாடை சார்ஜ் செய்யவும் முடியும். இந்த சாசர் 2.1 ஸ்டீரியோ ஸ்பீக்கர் சிஸ்டம் கொண்டு வருவதால் இது மிகத் துல்லியமான இசையை வழங்கும்.
மேலும் இந்த சாதனம் ஹூமனைஸ்டு ஒலி கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது. அது ஒலியை கூட்டவோ குறைக்கவோ செய்கிறது. மேலும் இது ரிமோட் கன்ட்ரோல் வசதி கொண்டுள்ளதால் தூரத்திலிருந்தே இதை இயக்க முடியும்.
இந்த ஸ்பீக்கர் மை சாசர் தரமான பேஸ் மற்றும் ட்ரிபில் இசையை வழங்குகிறது. மேலும் இதில் 5 ஸ்பீக்கர்கள் உள்ளன. இந்த சாதனத்தின் மொத்த அவுட்புட் திறன் 25+ வாட்ஸ் ஆகும். இது 15 வாட்ஸ் துணை ஊபரையும் கொண்டிருக்கிறது.
மேலும் தரமான இசைக்காகவே ஏர் ப்ளோ ஆப்டிமைஸ்ட் டிசைனும் இதில் உள்ளது. பேஸ் ரிலாக்ஸ் தொழில் நுட்பமும் உள்ளது. மேலும் இந்த டிவைஸ் 360 டிகிரி ஒலி அமைப்பை வழங்கும்.
இந்த டிவைசில் 3.5 எம்எம் எயுஎக்ஸ் இன்புட் ஜாக் கொண்டிருப்பதால் மற்ற டிவைஸ்களையும் இணைக்க முடியும். இந்த டிவைசின் எடை 4.2 பவுண்டுகளாகும். மேலும் இதன் மொத்த பரப்பு 7.9 x 7.9 x 7.2 இன்ச்களாகும். இந்த டிவைசின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications