லாஸ் வேகாஸ் கண்காட்சியில் விருது பெற்ற கேமரா!

Posted By: Karthikeyan
லாஸ் வேகாஸ் கண்காட்சியில் விருது பெற்ற கேமரா!

கடந்த வாரம் நடந்த லாஸ் வேகாஸ் நுகர்வோர் கண்காட்சியில் டமாக்கோ நிறுவனத்திற்கு அதன் புதுமையான தொழில்நுட்பத்திற்கு விருது வழங்கப்பட்டிருக்கிறது. டமாக்கோ நிறுவனம் வழங்கிய புதிய கேமரா மூலம் அது ஏற்கனவே மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறது. விருது வாங்குவதற்கு மிக முக்கிய காரணம் என்னவென்றால் டமாக்கோ வழங்கும் டமாக்ராபி ஆகும்.

இந்த புதிய தொழில் நுட்பம் பனோமோர்ப் தொழில் நுட்பம் என்று அழைக்கப்படுகிறது. அதாவது இது ஒரு 14 மெகா பிக்சல் டமாக்கோ 360 இமேகஜர் ஆகும். அதன் மூலம் 360 டிகிரியிலும் கூட படம் எடுக்க முடியும். மேலும் டமாக்கோவில் எடுக்கப்பட்ட படங்களை கணினி அல்லது டேப்லெட்டுகளில் பார்க்கும் போது அந்த படங்களை இந்த பக்கமும் திருப்ப முடியும் மற்றும் நகர்த்த முடியும்.

அதாவது ஒரு அறையைப் படம் எடுத்திருந்தால் கர்சர் மூலம் அந்த படத்தில் உள்ள எல்லா பகுதியையும் பார்க்க முடியும். அதாவது அந்த படத்தை மேலே, கீழே, பின்புறம் மற்றும் முன்புறம் ஆகிய எல்லா பக்கங்களிலும் திருப்ப முடியும்.

இந்த கேமராவின் முக்கிய அம்சம் என்னவென்றால் இதில் ஸ்கை 360 டிகிரி, க்ரவுண்ட் 360 டிகிரி மற்றும் நீள்வாக்கு மற்றும் படுக்கை வச பனோரமிக் மோட் போன்ற வசதிகள் உள்ளன.

இந்த கேமராவில் இருக்கும் இன்டர்னல் பொசிசன் சென்சார்கள் இதன் மோடுகளை முடிவு செய்கின்றன. அதனால் இதைப் பயன்படுத்துவோர் இதை எந்தவொரு கோணத்திலும் பயன்படுத்த முடியும். அவ்வாறு எடுக்கப்பட்ட படத்தை சிறந்த படமாக மாற்ற முடியும்.

இந்த கேமராவில் இருக்கும் புதிய தொழில் நுட்பம் முற்றிலும் வித்தியாசமானதாகும். அதாவது மிகவும் பிரபலமான மைக்ரோசாப்ட் போட்டோசின்த் தொழில் நுட்பத்திற்கு முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது. இந்த புதிய கேமரா இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் சந்தைக்கு வரும் என்று தெரிகிறது. இதன் விலை ரூ.10,000க்குள் இருக்கும் என்று தெரிகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot