பேட்டரி பேக்கப்பில் அசத்தும் புதிய ஹெட்செட்!

மக்களின் ரசனைக்கு ஏற்றவாறு தொழில் நுட்பம் மாறிக்கொண்டே வருகிறது. குறிப்பாக முன்பு வந்த எல்லா ஹெட்போன்களும் வயர்களுடன் வரும். ஆனால் இப்போது வயர்லஸ் ஹெட்போன்கள் மக்களின் இசை ஆர்வத்திற்கு விருந்து அளித்துக் கொண்டிருக்கின்றன. மக்கள் இந்த புதிய வயர்லஸ் ஹெட்போன்களை விரும்பி வாங்குகின்றனர்.
மியூசிக் கெட்ஜெட்டுகள் மற்றும் அக்சஸரிகளை வழங்கும் டெங்கா நிறுவனம் இப்போது டிஜே ஸ்டைலில் டெங்கா ரிமிக்ஸ்டு என்ற புதிய ஹெட்செட்டைக் களமிறக்குகிறது. இந்த ஹெட்செட் ஒரு வயர்லஸ் ப்ளூடூத் டிவைஸ் ஆகும். வெளியில் செல்லும் போது இதை மிக எளிதாக எடுத்துச் செல்ல முடியும்.
இந்த ரிமிக்ஸ்டு வயர்லஸ் ஹெட்செட் ஆடியோ ப்ளேயரிலிருந்து வயர் இல்லாமல் மிகத் தரமான இசையை வழங்குகிறது. மேலும் இதில் இன்பில்ட் மைக்ரோபோன் உள்ளதால் வரும் அழைப்புகளையும் எடுக்க முடியும்.
இந்த ரிமிக்ஸ்டு ஹெட்செட் ஒரு உறுதியான ஹெட்செட் ஆகும். அதாவது இதில் தொடர்ந்து பல மணி நேரம் பாடல் கேட்டாலும் அலுக்காது. இந்த ஹெட்செட்டை 3.5 மணி நேரம் ஜார்ஜ் செய்தால் அது 180 மணி நேர ஓய்வு நேரத்தை வழங்கும். அதுபோல் 22.2 மணி நேர இயங்கு நேரத்தையும் வழங்கும். மேலும் இந்த ஹெட்செட்டில் தனியாகப் பிரித்து எடுக்கக்கூடிய ஆடியோ கேபிள் வயர் உள்ளதால் இந்த ஹெட்செட்டை சார்ஜ் செய்து கொண்டே இசையைக் கேட்க முடியும்.
இந்த ரீமிக்ஸ்டு ஹெட்செட்டின் விலை ரூ.2,000 ஆகும்.


Click it and Unblock the Notifications