மடக்கி விரிக்கும் வசதியுடன் புதிய ஹெட்போன்!

டிடிகே நிறுவனம் தற்போது எஸ்டி700 என்ற புதிய ஹெட் போன்களைக் களமிறக்குகிறது. இந்த ஹெட்போன்கள்
இந்த டிடிகே எஸ்டி700 ஹெட்போன்களை மிக எளிதாக மடக்கி திறக்கு வசதியுடன் வருகிறது.
இவை மென்மையான இயர் கப்புகளையும், 40 மிமீ டிரைவர்களையும் அதுபோல் நீட்டிக்கக்கூடி 0.79மீ மற்றும் 6.3மிமீ கேபிள் மற்றும் 3.5மிமீ அடாப்டர்களையும் தாங்கி வருகின்றன.
இந்த ஹெட்போன்களில் உள்ள மிக முக்கிய அம்சம் என்னவென்றால் அது ஆடியோ ரிசர்ச் லேப் உருவாக்கிய தொழில் நுட்பத்தைக் கொண்டு வருகிறது. இந்த புதிய தொழில் நுட்பம் மிகத் தரமான தெளிவான சுத்தமான இசையை வழங்குகிறது. மேலும் இதன் பேஸ் இசையும் மிக அம்சமாக இருக்கும்.
வீடாக இருந்தாலும் அல்லது தெருவாக இருந்தாலும் சரி இந்த ஹெட்போன் எல்லா இடங்களிலும் அமர்க்களமான இசையை வழங்கும் என்று டிடிகே உறுதிப்படுத்துகிறது. மேலும் இந்த ஹெட்போன் மிக உறுதியாக இருக்கும். அதுபோல் காதுகளுக்கு இவை மிகப் பொருத்தமாக இருக்கும்.
இந்த எஸ்டி700 ஹெட்போன் ரப்பரால் தயாரிக்கப்பட்டுள்ளதால் இதன் நீளத்தைக் கூட்டலாம் குறைக்கலாம். இதன் இயர்கப்புகளை மிக உறுதியான தடிமனான கேபிள் ஒன்று இணைக்கிறது. இந்த தடிமனான கேபிள் மிக உறுதியாக இருப்பதால் எளிதில் அறுந்துவிடாது.
இந்த டிடிகே ஹெட்போன்களின் சிறப்புகளைப் பார்த்தால் அது உயர் செயல் திறனை வழங்கக்கூடிய 40 மிமீ ட்ரைவர்களை வழங்குகிறது. இவற்றின் இசை பிரமாதமாக இருக்கும். அதுபோல் இதில் வெளிப்புற இரைச்சல் இருக்காது. மேலும் இதை மிக எளிதாக மடித்து வைக்க முடியும். அதுபோல் இது குறைவான எடையையும் கொண்டிருக்கிறது. இந்த டிடிகே ஹெட்போனின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications