Home
Music

துல்லிய இசையை வழங்கும் சின்க் ஹெட்போன்கள்!

By Super
துல்லிய இசையை வழங்கும் சின்க் ஹெட்போன்கள்!

ஆடியோ சாதனங்கள் தயாரிப்பில் புகழ்பெற்ற சின்க் நிறுவனம் 50 சென்ட் என்ற பெயரில் புதிய ஹெட்போனை அறிமுகம் செய்துள்ளது.

சின்க் 50 சென்ட் ஹெட்போன்கள் 3 மாடல்களாக வருகின்றன. இவற்றில் 2 மாடல்கள் காதுகளை மறைக்கக் கூடியதாகவும் மற்றொன்று நம் காதுகளில் வைக்கக் கூடிய மாடலிலும் வருகின்றன.

இவை வயர்லஸ் வசதி கொண்ட ஹெட்போன்களாகும். இந்த ஹெட்போன்களில் மென்மையான பஞ்சு அதிகம் உள்ளதால் காதுகளில் பொருத்திக்கொள்ளும் போது இதமாக இருக்கும். மேலும் இந்த ஹெட்போன்களை காதுகளின் அளவுகளுக்கேற்ப கூட்டவோ குறைக்கவோ முடியும்.

இந்த சின்க் ஹெட்போன்கள் மிகவும் தரமான இசையை வழங்குகின்றன. இதன் பேஸ் இசை மிகவும் அபாரமாக உள்ளது. இது 16பிட் லாஸ்லெஸ் டிஜிட்டல் ஒலியை வழங்குகிறது. அதுபோல் இதன் டிஜிட்டல் ஈக்குவலைசர்களை 16 பிட்டுகள் ட்யூன் செய்ய முடியும்.

50 அடி தூரத்திற்கு இந்த ஹெட்போன் வயர் இல்லாமல் இயங்கும். ஒரு சிறிய ட்ரான்ஸ்மிட்டரை ப்ளேயரில் இணைத்துவிட்டால் இது ஹெட்போனுக்கு சிக்னலைக் கொடுக்கும்.

50 சென்ட் வரிசையில் மற்றுமொரு மாடல் ஸ்ட்ரீட் ஆகும். இந்த ஹெட்போன் வயர் கொண்டிருக்கிறது. ஆனால் இதன் இசை மிக அபாரமாக இருக்கும். இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X