போக்குவரத்து விதிகளை தெரிவிக்கும் புதிய கார் ஆடியோ சிஸ்டம்!

Posted By: Karthikeyan
போக்குவரத்து விதிகளை தெரிவிக்கும் புதிய கார் ஆடியோ சிஸ்டம்!

க்ராமின் நிறுவனம் சுஸுகி நிறுவனத்துடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டு தனது வாகனங்களுக்காக ஒரு மியூசிக் டேஷ் என்டர்டைன்மென்ட் சிஸ்டத்தை களமிறக்க இருக்கிறது. ஏற்கனவே க்ராமின் வழங்கிய மற்ற வாகனங்களுக்கான இசை சிஸ்டங்கள் வெற்றிக் கொடியை நாட்டின. அதனால் க்ராமின் சுசுக்கி வாகனங்களுக்கான புதிய இசை சிஸ்டமும் வெற்றியைப் பெறும் என நம்பலாம்.

இந்த புதிய மியூசிக் சிஸ்டம் 6.1 இன்ச் டிஸ்ப்ளேயுடன் தொடு வசதி கொண்டிருக்கிறது. இந்த டிஸ்ப்ளே உயர்ந்த ரிசலூசன் கொண்டிருப்பதால் இது மிகத் துல்லியமாக இருக்கும். மேலும் நவீன வசதியுடன் கூடிய சிடி ப்ளேயர், எஎம் மற்றும் எப்எம் ரேடியோ மற்றும் ட்யூனர் மற்றும் ப்ளூடூத் வசதி போன்ற வசதிகளை இந்த மியூசிக் சிஸ்டம் வழங்குகிறது.

இந்த மியூசிக் சிஸ்டத்தில் ஐபோடு அல்லது மற்ற மொபைல்களை எளிதாக இணைக்க முடியும். அதன் மூலம் மொபைல் போனில் உள்ள பாடல்களை அல்லது படங்களை சூப்பராக அனுபவிக்க முடியும். மேலும் இந்த மியூசிக் சிஸ்டத்தை க்ராமினின் ஆன்ட்ராய்டு அப்ளிகேசனுடன் இணைக்க முடியும். மேலும் இதில் சிடி அல்லது எஸ்டி கார்டு போன்றவற்றையும் இயக்க முடியும்.

மேலும் இந்த இசை சிஸ்டத்தில் வரும் அழைப்புகளை எடுக்க முடியும். அதே நேரத்தில் அழைப்பையும் கொடுக்க முடியும். அதுபோல் பயணத்தின் போது இந்த மியூசிக் சிஸ்டம் மூலம் போகும் வழியை அறிய முடியும்.

இந்த மியூசிக் சிஸ்டத்தில் க்ராமின் மற்றும் சுசுக்கியின் இன்டர்னல் ப்ளாஷ் மெமரி உள்ளதால் இதில் சேமிப்பு வசதி மிக அதிகமாக இருக்கிறது. மேலும் ஆக்ஸ் ஜாக் வசதிகளும் இந்த இசை சிஸ்டத்தில் உள்ளது. மேலும் இந்த இசை சிஸ்டம் உலகக் கடிகாரத்தையும் காட்டும் வசதி கொண்டது.

இந்த இசை சாதனத்தின் அடுத்த முக்கிய வசதி என்னவென்றால் இது போக்குவரத்து குறிப்புகள், வாகன நிறுத்த குறிப்புகளையும் வழங்குகிறது. குறிப்பாக இதில் க்ராமின் ஸ்மார்ட்போன் லிங் அப்ளிகேசன் உள்ளதால் தற்போதைய பெட்ரோல் விலையைக் கூட இந்த சிஸ்டம் தெரிவிக்கும்.

இந்த மியூசிக் சிஸ்டத்தின் மற்ற தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. ஆனால் வரும் 2013ல் இந்த சிஸ்டம் அமெரிக்கா, ஆஸ்ட்ரேலியா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளில் வெளிவரும் என தெரிகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்