ஹோம் தியேட்டரா... சொல்ல வைக்கும் சோனி இயர்போன்!

இந்த புதிய இயர்போன்கள் பல சிறப்பான தொழில் நுட்பங்களைக் கொண்டுள்ளன. அதாவது இந்த இயர்போன்களில் 4 பேலன்ஸ்டு ஆர்மச்சூர் ட்ரைவர்கள் உள்ளன. 1.2 மீட்டர் அளவு கொண்ட இணைப்பு கேபிள் இந்த இயர்போன்களில் உள்ளது. மேலும் மிதமான ஒலி அமைப்பு இந்த இயர்போன்களின் முக்கிய சிறப்பு ஆகும். இதன் இயர்போட்சுக்கள் பலவித அளவுகளில் வருகின்றன. இந்த இயர்போன்களின் சென்சிட்டிவிட்டி 108 டிபி/எம்டபுள்யு ஆகும். இதன் ப்ரீக்வன்சி 3-280000 ஹெர்டஸ் ஆகும். இந்த இயர்போன்கள் மிகத் தரமான அதிரடியான இசையை வழங்குகின்றன.
இந்த இயர்போன்கள் மிகவும் அடக்கமாக மற்றும் சிறியதாக உள்ளதால் இவற்றை மிக அழகாக காதுகளில் அணிந்து கொள்ளலாம். இதன் எடையும் மிகக் குறைவே. இதன் இயர்பட்சுக்கள் காதுகளை எரிச்சல்படுத்தாது.
இந்த இயர்போன்களில் முழு ட்ரைவர், துணை ஊபர், ஊபர் மற்றும் ஒரு ட்வீட்டர் போன்ற வசதிகள் உள்ளன. மேலும் இவை ஒரு ஹோம் தியேட்டர் வழங்கும் இசையை அளிக்கும். ஏனெனில் இதன் ட்ரைவர்கள் மிக பக்காவாக உள்ளன. இந்த புதிய இயர்போன்களின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications