Home
Music

இசையால் கிறங்க வைக்கும் ஐஹோக் ஸ்பீக்கர் சிஸ்டம்

By Super
இசையால் கிறங்க வைக்கும் ஐஹோக் ஸ்பீக்கர் சிஸ்டம்
கன்வென்சனல் ஐபோட் டோக்கிங் ஸ்டேஷன்களுக்கு எப்போதுமே அமோக வரவேற்பு உண்டு. அதனால் பல நிறுவனங்கள் புதிய ஸ்டைலான ஐபோட் டோக்கிங் ஸ்டேஷன்களை தயாரிப்பதில் அதிக அக்கறை காட்டுகின்றன. ஒவ்வொரு வருடமும் இப்படிப்பட்ட ஐபோட் டோக்கிங் ஸ்டேஷன்கள் பல வடிவங்களில் பல அமைப்புகளில் பல வண்ணங்களில் வருகின்றன.

அந்த வரிசையில் ஸ்பீக்கல் நிறுவனம் ஒரு புதிய ஐபோட் டோக்கிங் ஸ்டேஷன் ஸ்பீக்கர் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் பெயர் ஐஹோக் ஆகும். இது பார்ப்பதற்கு படு ஸ்டைலாகவும் அதே நேரத்தில் சிறந்த செயல் திறனும் கொண்டிருக்கிறது. கண்டிப்பாக இந்த டிவைஸ் வெற்றி பெறும் என நம்பப்படுகிறது.

இந்த ஸ்பீக்கல் ஐஹோக் டோக்கிங் ஸ்டேஷன் பிங் மற்றும் வெள்ளை நிறங்களில் வருகிறது. இதைப் பார்த்தவுடன் நமக்கு பிடித்துப் போகும். இந்த ஐஹோக் எசி பவர் அடாப்டர்/கேபிள், பேட்டரியாலான ரிமோட் கண்ட்ரோல் மற்றும் ஸ்டேன்டர்ட் 3.5எம்எம் ஆடியோ ஜாக் கொண்டிருக்கிறது.

இது பார்ப்பதற்கு பெரியதாக தோன்றினாலும் இதன் எடை குறைவானதாகும். அதாவது இதன் எடை 4 எல்பிஎஸ் ஆகும். மேலும் இதன் ரீஜார்ஜபிள் பேட்டரிகள் முழு மின்சாரத்தைக் கொண்டிருந்தால் தொடர்ந்து இதனை 10 மணி நேரம் இயக்க முடியும். இது ஒரு ஐபோட் மட்டுமல்ல இது ஒரு ஐபோன் என்றும் அழைக்கலாம்.

ஐஹோக்கின் 2.1 ஸ்பீக்கர் சிஸ்டம் 360 டிகிரியில் அருமையான ஒலி அமைப்பை வழங்குகிறது. இது 4 கூல் ஸ்பீக்கர்களையும் 2 ட்வீ்ட்டர்களையும் கொண்டுள்ளது. அதோடு 20 வாட் துணை ஊபரும் இதில் அடக்கம். இதை ஒரு உயர்ந்த ஆம்ப்ளிபைடு ஸ்டீரியோ சிஸ்டம் எனலாம். ஐஹோக் 50கிஹர்ட்ஸ் முதல் 20கிஹர்ட்ஸ் வரையிலான் பிரீக்வன்சியை சப்போர்ட் செய்கிறது. இதன் மொத்த 28 வாட்ஸ் மூலம் நமது அரையை அலற வைத்துவிடும்.

ஐஹோக் ஸ்பீக்கலின் ஐபிக் டோக்கிங் ஸ்டேஷனை ஒத்து காணப்படுகிறது. ஆனால் ஐஹோக் ஐபிக்கை விட மின் திறனில் அதிக சக்தி வாய்ந்தது. மேலும் இது ஒரு போர்ட்டபுள் டிவைஸ் ஆகும். மேலும் இதன் ஒலி கன்ட்ரோல் அமைப்பு மிகவும் சிறப்பாக உள்ளது.

இதன் 3.5எம்எம் ஜாக் மூலம் இந்த ஐஹோக்கை வீடியோ கேம் மற்றும் டிவிகளோடும் இணைக்க முடியும். இந்த ஸ்பீக்கலின் புதிய ஐஹோக் புதிய பாண்டா நிறத்தில் வரும் என்று தெரிகிறது. இதன் விலை இந்தியாவில் ரூ. 6700ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X