எனர்ஜி பார் ஸ்பீக்கர்கள்... டிவிக்கு ஏற்ற சரியான ஜோடி!

Posted By: Staff
எனர்ஜி பார் ஸ்பீக்கர்கள்... டிவிக்கு ஏற்ற சரியான ஜோடி!
பவர் பார் மற்றும் பவர் பார் எலைட் என்ற இரண்டு சவுண்ட் பார்களை எனர்ஜி நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த சவுண்ட் பார் ஸ்பீக்கர்கள் மிகத் தரமான டிவி மற்றும் படங்களின் ஒலி அமைப்பை வழங்கும்.

பவர் பார் எலைட் 10 இன்ச் அளவு கொண்ட வயர்லஸ் துணை ஊபரைக் கொண்டிருக்கிறது. பவர் பார் 8 இன்ச் வயர்லஸ் துணை ஊபரைக் கொண்டிருக்கிறது. இவை பார்ப்பதற்கும் மிக அழகாக உள்ளன. இவற்றை நமது டிவியின் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்க முடியும்.

இது 1.5 மீ ஆப்டிக்ல் கேபிளையும் கொண்டிருக்கிறது. பவர் பார் எலைட் கிரடிட் கார்டு அளவுள்ள ரிமோட்டைக் கொண்டிருக்கிறது. பவர் பார் எலைட் மிகவும் தரம் வாய்ந்த 2 வழி டிரைவர் ஸ்பீக்கர்களைக் கொண்டிருக்கிறது. இது 78 இன்ச் அளவில் ட்வீட்டர் மற்றும் டூவல் மிட் பேஸ் 3 இன்ச் ட்ரைவர்களையும் கொண்டிருக்கிறது.

இந்த சவுண்ட்பாரில் உள்ள டோல்பி டிஜிட்டல் டிகோடர் டிவியிலிருந்து வரும் ஒலியையும்  மிகத் தரமான ஒலி அமைப்பயும் வழங்கும் சக்தி கொண்டவை. மேலும் இந்த பவர் பார் எலைட்டில் 3டி சரவுண்டு மோடும் உள்ளதால் இது 5.1 ஹோம் தியேட்டர் வழங்கும் அளவிற்கு அருமையான் இசையை வழங்கும்.

எனர்ஜி நிறுவனத்தின் அதிகாரி டாமி ஜேக்கப்ஸ் கூறும் போது எனர்ஜி பவர் பார் எலைட் டிவியிலிருந்து வரும் ஒலியை பெருக்கி மிக அருமையான அதிரடியான இசையை வழங்கும் என்றார். விலையைப் பொறுத்தமட்டில் பவர் பார் எலைட் ரூ.31,285க்கும் பவர் பார் ரூ.20,855க்கும் விற்கப்படுகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot