மடங்கிக்கொள்ளும் வசதியுடன் ஸ்டீல்சீரீஸ் வயர்லஸ் ஹெட்செட்

Posted By: Staff
மடங்கிக்கொள்ளும் வசதியுடன் ஸ்டீல்சீரீஸ் வயர்லஸ் ஹெட்செட்

ஹெட்போன் என்றாலே அதன் நீண்ட வயர் நமக்கு எரிச்சைலைக் கொடுக்கும். ஏனெனில் அந்த வயரை ஒழுங்குபடுத்துவே மிகப் பெரிய வேலையாக இருக்கும். இந்த பிரச்சினையிலிருந்து தப்பிக்க வயர்லெஸ் ஹெட்போன்கள் வருகின்றன.

வயர்லஸ் ஹெட்போன்களில் இசை அவ்வளவு தரமாக இல்லை என்ற விமர்சனம் இருந்தாலும் மிகத் தரமான இசை வழங்கும் வயர்லஸ் ஹெட்போன் கிடைத்துவிட்டால் சந்தோஷம்தான்.

அப்படிப்பட்ட உயர்தர இசையை வழங்க வருகிறது ஸ்டீல்சீரீஸ் ஸ்பெக்ட்ரம் 7எக்ஸ்பி என்ற புதிய வயர்லெஸ் ஹெட்செட். இந்த ஹெட்செட்டை காதுகளில் மேல் அணிந்து கொள்ளலாம். இந்த ஹெட்செட் சற்று பெரியதாக இருக்கும். இந்த ஹெட்செட் கருப்பு நிறத்துடனும், இதன் இயர் பட்சுகள் க்ரே நிறத்திலும் வருகிறது.

ஸ்டீல்சீரீஸ் ஸ்பெக்ட்ரம் 7எக்ஸ்பி வயர்லஸ் ஹெட்செட் சற்று பெரியதாக இருந்தாலும் இதை 3 பகுதிகளாக பிரித்து எடுத்து வைக்க முடியும். எனவே, இதை எடுத்துச் செல்வது மிக எளிதாக இருக்கும். வலது காதில் உள்ள இயர் கப்பில் ஒலி அமைப்பு கட்டுப்பாடு உள்ளது.

இந்த ஹெட்செட் மின் இணைப்பில் உள்ளதா என்பதை அறிய இதில் உள்ள ஊதா விளக்கு காண்பித்து விடும். மேலும் பவர் பட்டனுக்கு அடுத்து எக்ஸாக்ட்எஸ்என்டி மற்றும் லைவ் மிக்ஸ் போன்ற கட்டுப்பாட்டு பட்டன்களும் உள்ளன. மைக்ரோபோன் இடது காதின் இயர் கப்பில் உள்ளது. இந்த ஹெட்போனைப் பயன்படுத்தாத போது இந்த மைக்ரோபோனை வெளியில் எடுக்க முடியும்.

ஸ்டீல்சீரீஸ் ஸ்பெக்ட்ரம் 7எக்ஸ்பி வயர்லஸ் ஹெட்செட்டின் ட்ரான்ஸ்மிட்டர் ஒரு வினாடிக்கு 4எம் பிட்டுகள் ஆகும். இது 2.6ஜிஹெர்ட்ஸ் ரேடியோ இன்டர்பேசில் இயங்குகிறது. இதன் மொத்த பரப்பு 83மிமீ X 83மிமீ X 26மிமீ ஆகும்.

ஸ்டீல்சீரீஸ் ஸ்பெக்ட்ரம் 7எக்ஸ்பி வயர்லஸ் ஹெட்செட்டின் ப்ரீக்வன்சி ரெஸ்பான்ஸ் 18 முதல் 28000 ஹெர்ட்ஸ் ஆகும். இதன் இம்பீடன்ஸ் 32 ஓம்களாகும்.

மேலும் வயர்லெசில் பிரச்சினை வந்தால் அதற்கு பதிலாக ஒரு கேபிளும் வழங்கப்படுகிறது. இந்த கேபிளை தனியாக பிரிக்க முடியும். அதே நேரத்தில் இந்த கேபிள் 1மீ நீளத்துடன் அதன் இறுதியில் 3.5எம்எம் ஆடியோ ஜாக்கைக் கொண்டுள்ளது.

இந்த ஹெட்போன் வெளியிலிருந்து வரும் ஒலி மற்றும் இரைச்சல்களை தடுத்துவிடுகிறது.  இந்த மைக்ரோபோனின் ப்ரீக்வன்சி ரெஸ்பான்ஸ் 50 முதல் 16000 ஹெர்ட்ஸ் ஆகும். இதன் சென்சிட்டிவிட்டி 38டிபி ஆகும். ஸ்டீல்சீரீஸ் ஸ்பெக்ட்ரம் 7எக்ஸ்பி வயர்லெஸ் ஹெட்செட்டின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot