Home
Music

வீடியோ கேமில் பரவசத்தை தரும் புதிய சோனி ஹெட்செட்!

By Karthikeyan
வீடியோ கேமில் பரவசத்தை தரும் புதிய சோனி ஹெட்செட்!

இன்னுமொரு புதிய ப்ளேஸ்டேசன் ஹெட்செட்டைக் களமிறக்குகிறது சோனி நிறுவனம். இந்த புதிய ஹெட்செட் சோனியின் மற்ற உயர்தர ஹெட்போன்களை ஒத்திருந்தாலும் இந்த புதிய ஹெட்செட் கேமிங்கிற்காகவே சிறப்பான விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த ப்ளேஸ்டேசன் ஹெட்செட்டுகள் காது வடிவத்தில் வருவதால் இதை பலமணி நேரம் காதுகளில் பொருத்தி இருந்தாலும் எரிச்சலைக் கொடுக்காது. மேலும் இந்த ஹெட்செட்டுகள் தோலால் செய்யப்பட்டுள்ளதால் இவற்றை அணிந்து கொள்வதற்கு மிகவும் வசதியாக இருக்கும். இந்த ஹெட்செட்டின் வெளிப்புறம் 2 கணமான ப்ளாஸ்டிக்கால் ஆன தகடுகளால் செய்யப்பட்டுள்ளது. இந்த ஹெட்செட்டுகள் காதுகள் முழுவதையும் மறைத்துக் கொள்ளும்.

இந்த ஹெட்செட்டின் கட்டுப்பாட்டு பட்டன்கள் அனைத்தும் அதன் வலது புறம் உள்ளன. இந்த ஹெட்செட்டில் மினி யுஎஸ்பி வசதியும் உள்ளது. ஆனால் ப்ளூடூத் இணைப்பு இல்லை.

இந்த கேமிங் ஹெட்செட் பல நல்ல அம்சங்களைக் கொண்டுள்ளன. அதாவது இதை அணிந்து கொள்வதற்கு மிக வசதியாக இருக்கும். இது பார்ப்பதற்கு படு ஸ்டைலாக இருக்கிறது. அதுபோல் அதிரடியான இசையை வழங்குகிறது. இதன் பேட்டரி இந்த ஹெட்செட்டுக்கு 6 முதல் 8 மணி நேர இயங்கு நேரத்தை வழங்குகிறது.

இந்த ஹெட்செட்டின் முக்கிய அம்சம் அதன் தரமான வீடியோ மற்றும் ஆடியோ ஆகும். மேலும் இந்த ஹெட்செட்டில் ஸ்டீரியோ ஒலி அமைப்பு மற்றும் சரவுண்ட் ஒலி அமைப்பு ஆகியவை மிக பக்காவாக உள்ளன. மேலும் இந்த ஹெட்செட் வெளிப்புறத்திலிருந்து வரும் சத்தங்களை உள்ளே அனுமதிப்பதில்லை.

இந்த சோனி ப்ளேஸ்டேசன் ஹெட்செட்டின் விலை ரூ.5000. மற்ற ஸ்டீரியோ ஹெட்செட்டுகளின் விலையை விட இது குறைவாகும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X