ஆப்பிள் தயாரிப்புகளுக்கு ரக ரகமாய் ஐலு மியூசிக் சாதனங்கள்!

By Super
|

ஆப்பிள் தயாரிப்புகளுக்கு ரக ரகமாய் ஐலு மியூசிக் சாதனங்கள்!
ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் சானதங்களுக்கு ஆக்சஸரிகளை வழங்குவதில் ஐலுவ் நிறுவனம் முன்னனியில் இருக்கிறது. அதாவது ஐபோடுகள் மற்றும் ஐபேடுகளுக்கான அவர்களின் பெட் ஷேக்கருடன் கூடிய ஐஎம்எம் 178 வைப் ப்ளஸ் டூவல் அலாரம் கடிகாரம் மிகவும் பிரபலமானதாகும்.

இந்த அலாரம் கடிகாரத்தின் வேடிக்கையான விஷயம், இந்த கடிகாரம் தூங்கிக் கொண்டிருப்பவரை கட்டில் அல்லது தலையணையை அசைத்து அவரை தூக்கத்தில் இருந்து எழுப்பிவிடும் கில்லாடி கடிகாரம். இந்த இசை சாதனம் ஐபாட் அல்லது ஐபேடில் இணைத்து அருமையாக பாடல்களைக் கேட்கலாம். இதன் விலை ரூ.5300 ஆகும்.

ஐலுவின் அடுத்த தயாரிப்பு ஐஎஸ்பி210 மியூசிக்பேக் ஆகும். இந்த டிவைஸ் ஐபேடை பாதுகாக்கும் பெட்டியாக இருக்கிறது. இந்த டிவைசின் சிறப்பு என்னவென்றால் இதில் ஒரு போர்ட்டபுள் ஸ்பீக்கரும் உள்ளதால் இதில் இசையும் கேட்கமுடியும். இதன் விலை ரூ.3200 ஆகும்.

அடுத்ததாக ஐலுவின் மற்றுமொரு அக்சஸரி ஐஎம்எம்514 என்ற சாதனம். இந்த சாதனம் ஐபேட் மற்றும் ஐபேட்-2வுக்காகவே தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்த சாதனம் டாக் செய்யும் சாதனமாக செயல்படுகிறது. மேலும் பேஸ் இசையும் இதில் அருமையாக உள்ளது.

இதில் உள்ள தொழில் நுட்பம் நமது ஐபேடை கடிகாரமாகவும் அதே நேரத்தில் ரேடியோவாகவும் மாற்றிவிடும். அதுபோல் வானிலை தகவலையும் நமக்கு அளிக்கும். இதன் விலை ரூ.9000 ஆகும். ஐலுவின் அடுத்த தயாரிப்பு ஐஇபி322 சிட்டி லைட்ஸ் கலெக்சன் இன்-இயர் ஹெட்போன் ஆகும். இந்த ஹெட்போன் மிகத் தரமான இசையை வழங்குகிறது. இதன் விலை ரூ.1200 ஆகும்.

அடுத்ததாக ஐலுவின் ஐபிஎ300 பற்றி சொல்லாமல் இருக்க முடியாது. இது ஒரு போர்ட்டபுள் மற்றும் ரிஜார்ஜபிள் யுஎஸ்பி பேட்டரி கிட் ஆகும். இந்த பேட்டரி கிட்டை ஐபோன்கள், ப்ளாக்பெரி மற்றும் இதர டிவைஸ்களோடு மிக எளிதாக இணைக்க முடியும். மேலும் இதில் நீண்ட நேரம் வீடியோ பார்த்தாலும் இதன் பேட்டரி தாங்கு சக்தியைக் கொண்டது. இதன் விலை ரூ.3800 ஆகும்.

இறுதியாக ஐலுவின் ஐசிபி107 ஆடியோ ஸ்பிலிட்டர் ஆப்பிளின் ரிமோட் கண்ட்ரோல் கொண்டு வருகிறது. ஒரே நேரத்தில் 5 ஹெட்போன்களை இந்த டிவைசில் இணைக்க முடியும். இதன் விலை ரூ.1000 ஆகும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X