பயணத்தின் தோழன் சவுண்ட் கிக் ஸ்பீக்கர்!

Posted By: Karthikeyan
 பயணத்தின் தோழன் சவுண்ட் கிக் ஸ்பீக்கர்!

சவுண்ட்ப்ரீக் நிறுவனம் இந்த புத்தாண்டில் தனது வாடிக்கையாளர்களுக்க ஒரு இன்ப அதிர்ச்சி அளிக்க இருக்கிறது. ஆம், இந்த புதிய ஆண்டில் தனது புதிய படைப்பான சவுண்ட் கிக் என்ற புதிய ஸ்பீக்கரை விரைவில் நடைபெறும் சிஇஎஸ் கண்காட்சியில் அறிமுகப்படுத்த இருக்கிறது.

இந்த சவுண்ட் கிக் ஒரு அடக்கமான ப்ளூடூத் ஸ்பீக்கர் சிஸ்டம். இதில் புதுமையான் தொழில் நுட்பங்களும் உள்ளன. இந்த ஸ்பீக்கரை மிக எளிதா வெளியில் எடுத்துச் செல்ல முடியும் என்பதாலு குறிப்பாக இந்த ஸ்பீக்கர்

சிஸ்டம் பயணத்தின் போது சிறந்த தோழனாக இருக்கும். இந்த சவுண்ட் கிக்கின் எக்ஸ்கிக் மிகவும் அடக்கமாக இருக்கிறது.

இந்த ப்ளூடூத் ஸ்பீக்கரிலிருந்து வரும் ஒலி மிக ரம்மியமாக இருக்கிறது. இதில் தொடர்ச்சியாக 7 மணி நேரம் இசை கேட்க முடியும். அந்த அளவிற்கு இதன் லித்தியம் பேட்டரி இந்த ஸ்பீக்கருக்கு மின் திறனை வழங்குகிறது.

சவுண்ட் ப்ரீக்கின் இணை இயக்குனரான மேத்தியு பாப்ரோக்கி கூறும் போது, இந்த சவுண்ட் கிக் ஸ்பீக்கர் இதை பயன்படுத்துவோரின் தேவைகளைக் கண்டிப்பாக நிறைவு செய்யும் என்கிறார். மேலும் இந்த ஸ்பீக்கரில் இருக்கும் ப்ளூடூத் மிகவும் நவீன தொழில் நுட்பத்தைக் கொண்டிருக்கும் என்கிறார்.

சமீப காலங்களில் சவுண்ட்ப்ரீக் மின்னனுத் துறையில் பல சாதனைகளைப் படைத்திருக்கிறது. அதற்கு காரணம் அந்த நிறுவனம் தரமான ஒரு ஆராய்ச்சிக் குழுவைக் கொண்டிருக்கிறது. இந்நிறுவனத்தின் படைப்புகள் அனைத்தும் மிக

அபாரமாக இருக்கும். தரமான பொழுதுபோக்கை வழங்கும். அதேபோல் எக்காலத்திற்கும் பொருந்தும் தொழில் நுட்பத்தை வழங்கும்.

இந்த புதிய சவுண்ட்கிக் ஸ்பீக்கரை மடக்கி வைக்கும் போது அதன் தடிமன் 1.6 இன்ச் அளவைக் கொண்டிருக்கும். அதனால் இதை மிக எளிதாக எடுத்துச் செல்ல முடியும். அதேபோல் இந்த ஸ்பீக்கரை இயக்கும் போது பிரித்து வைத்தாலும் இது போர்ட்டபுலாகவே இருக்கும்.

இந்த ஸ்பீக்கர் முழுமையான பொழுதுபோக்கை வழங்கும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. இந்த ஸ்பீக்கர் யுஎஸ்பி போர்ட் கொண்டுள்ளதால் இதை மற்று டிவைஸ்களோடு மிக எளிதாக இணைக்க முடியும். இந்த ஸ்பீக்கரைத் தொடர்ந்து சவுண்ட்ப்ரீக் நிறுவனம் இன்னும் புதிய டிவைஸ்களை விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்